google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: வெற்றியைத் தேடி...3 (தொடர் சிந்தனை)

Friday, December 7, 2018

வெற்றியைத் தேடி...3 (தொடர் சிந்தனை)


வெற்றியைத் தேடிய பயணத்தில்
பல இடையுகள் வெளியே இருந்து பலரால் வரும் என்பதை அறிந்தோம்
அதுக்கும் மேல....
நமது வெற்றியைத் தடுக்கும் எதிரி சில நேரங்களில் நம்முள்ளேயே இருப்பான்

இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற பழமொழியை நாம் அறிந்திருப்போம்

உண்மையில் அக்கரை பச்சையாக இருக்காது என்பதை நாம் அறிவதில்லை.

அது ஒரு கானல் நீர் கண்கட்டி வித்தை காட்சி.

ஒரு நிறுவனத்தில்
நாம் திறமையாக பணியாற்றும் போது நம்மைத் தேடி எதிர் முனையிலிருந்து அதிக சம்பளம், வசதிகள் தருவதாக வாக்குறுதிகளுடன் நம்மை சிலர் அனுகுவார்கள்.

அதை நம்பி நாம் அவர்கள் கம்பெனியில் போய் வேலைக்கு சேர்ந்தால் என்ன நடக்கும்?

சில மாதங்களில் நம்மை விரட்டி விடுவார்கள்.
திரும்பவும் நாம் பழைய நிறுவனத்தில் வேலைக்கு சேர முடியாது. அப்படியே சேர்ந்தாலும் நாம் பழைய நம்பிக்கையை பெறமுடியாது.

ஆகையால்...

நாம் வேலை பார்க்கும் நிறுவனத்திலிருந்து விலகினால் இன்னொரு நிறுவனத்த்தில் வேலைக்கு சேர்வது என்பது...
சின்ன அடிமையிலிருந்து பெரிய அடிமையாக மாறுவது போலத்தான்.

என்னுடன் ஒரு தொலைக் காட்சி விற்பனை நிறுவனத்தில் வேலை செயத நண்பர் ஒருவர் அதிக ஊதியம் தருவதாக சொன்ன இன்னொரு நிதி நிறுவனம் கொடுத்த வாக்குறுதியை நம்பி அங்கே வேலைக்கு சேர்ந்தார்.
அடுத்த நாளே நிறுவன காரில் வந்து படோபடிபம் காட்டி எங்கள் நிறுவனத்தில் ல ஊழியர்களை குழப்பி விட்டார்.

ஆறு மாதங்களுக்கு பிறகு அந்த நிதி நிறுவனம் செயத மோசடியால் இவரும் சிறை சென்றார்.

அதனால்...

ஒரு நிறுவனத்தில் வேலைக்காரனாக இருந்து விலகினால்....
இன்னொரு நிறுவனத்தில்
வேலைக்காரனாக போவதைவிட....
நாமளே லாபமோ, நஷ்டமோ ஒரு சொந்த நிறுவனம் துவங்கி முதலாளியாகிவிடுவதே சிறப்பு
நீங்கள் சற்றே கண்களை மூடி யோசித்துப்பாருங்கள்....

ஒரு நிறுவனத்திலிருந்து  இன்னொரு நிறுவனத்துக்கு வேலைக்குச் சென்றவர்களில்
அழிந்து போனவர்கள் தான் அதிகம் இருப்பார்கள்.


#வெற்றியைத் தேடி... (தொடரும்)



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1