google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: சிரிக்கவைக்கும் ட்விட்டர் சொலவடைகள்

Saturday, January 31, 2015

சிரிக்கவைக்கும் ட்விட்டர் சொலவடைகள்



தமிழில் சொலவடை என்பது நாட்டுபுற இலக்கியத்தை சார்ந்த ஏட்டில் எழுதப்படாத வாய்மொழி பழமொழி போன்று சமுதாயம்,அரசியல், வணிகம், மதம்..பற்றிய  ஒரு வித நகைச்சுவை சொற்றொடர் (slogan) ஆகும் 

காலக்கரையானால் அழிந்துகொண்டிருக்கும் இத்தைகைய நையாண்டி பொன்மொழிகளை இதோ தமிழ் ட்விட்டர்கள் #SolavadaisofTN என்று டேக் அமைத்து  மீண்டும் உயிர்கொடுக்கிறார்கள்

அவைகளில் பல காலம் காலமாக மக்கள் பேச்சு வழக்கில் உள்ளவைகளை நீங்கள் அறிந்திருப்பீர்கள் 

ஆனால் நம்ம தமிழ் ட்விட்டர்களோ அந்த பொன்மொழிகளை 
இங்கே FUN மொழியாக்கிட்டாங்க

இங்கே  சில நம்ம டிவிட்டர்களே புதுசா படைத்தவைகள்.......

ஒ.உ.சிந்தனைகள் @bommaiya 
மந்தவெளில வண்டிய நிப்பாட்ட
மயிலாப்பூர்லயே ப்ரேக்க மிதிச்சானாம்..

அந்நியன்@jjranjith 
வேண்டா வெறுப்புக்கு புள்ளைய பெத்து
காண்டாமிருகம் னு பெயர் வச்சானாம் |

இட்ஸ் மீ பீட்டரு ♡@Noonezperfect 
வாழ்க்கை என்பது பனைமரம் போல.ஏறினா நுங்கு !
விழுந்தா சங்கு!!!!!!!.


அலெர்ட் ஆறுமுகம்@6_mugam 
பகல்லேயே பசு மாடு தெரியாது
ராத்திரிலையா எருமமாடு தெரிய போது..
களிறு@iam_shahh 
ஆண்டவன் சொல்லுறான்
அருணாச்சலம் முடிக்கிறான் !

காதல் கரடி @lusupaiyan7777 
இறக்கனும்
கத்துக்கிட்ட மொத்த வித்தய இறக்கனும் 

புதுவை குடிமகன் @iamkudimagan 
மண்டமேல கொண்டையாம்
இந்தியா பாகிஸ்தான் சண்டையாம்.. 

James சன்னியாசி @iam_moorthy 
படிச்சவன் குல்லா மாட்டறான்.
படிக்காதவன் சட்டி மாட்டறான்.

கிறுக்கி B+@iam_lolitta 
பணக்காரன் வீட்டுல இருக்குற கடனும்,
செவத்தவ உடம்புல இருக்குற அழுக்கும் வெளில தெரியாது.

ஶ்ரீஜித்@gpkumar1980 
கப்பல்ல பொண்ணு வருதுன்னா,
எனக்கு ரெண்டு எங்கப்பனுக்கு ஓன்னுன்னாம்.

உழவே தலை@ThanjaiSabari 
பன்னெண்டு டின்னு மண்னெண்ண டின்னு,
அதுல ஒரு டின்னு வெத்து டின்னு

ponraj@pons_mech 
அடியேனு கூப்பிட பொண்டாட்டி இல்ல ,
புள்ளைக்கு பேரு பொன்னுரங்கமாம்.

Dr.எட்டு@8appan 
கேட்டியாக்காசேதி 
பேய் புடிச்சவளுக்கு பேன் பாத்த கதையால்ல இருக்கு*???
 
Rajini @Lingaa_Rajini 
சாமியே cycleல போது 
பூசாரிக்கு புல்லட்டு கேக்குதோ

மதுரக்காரன் © O+ve @jeganjeeva 
எட்டி எட்டிப் பாத்தவளுக்கு எட்டுப் பணியாரம் 
முட்டுத் தேயச் சுட்டவளுக்கு மூணு பணியாரம்.

வேலு@psvelu1979 
நரி இடம் போனா என்ன வலம் போனா என்ன? 
கடிக்காம போனா சரிதான்

பட்டிக்காட்டான் @paviparu31 
அரிசி படிஞ்சா அரிசி கொழுக்கட்டை 
அதிலிலும் படியலனா வெளக்கமாத்து கட்டை 
எமகாதகன்!!!்@Aathithamilan 
ஊரான் பிகரை ஊட்டிக்கு கூட்டிட்டிப்போனா 
தன் பிகர் தானாகவே யாரையாவது தள்ளிட்டுப்போய்டும்

லீ ஒண்டிப்புலி®@Rag_ivan 
அஞ்சு புள்ளைங்க கூட கடலை போட்டா,
அரசனும்ஆண்டியாவான். 

சாம்ராட்@Thavilu 
லெச்ச லெச்சமா பணம் சம்பாதிக்கனும்னு கனவு கண்டாணாம் சோத்துக்கே அடமானம் வச்சது இட்லி குண்டாணாம்

விவிகா சுரேஷ் ®@vivika_suresh 
இருக்க இடம் கொடுத்தால் 
கட்டிங்க்க்கு காசு கேப்பானாம்

தில்லுதொர..@pbbalajii 
அஞ்சுகிறவனை 
கோழி குஞ்சும் விரட்டும்!

பிரசாத்@friendlyprasath 
மன்னாதி மன்னர் எல்லாம் மண்ன கவ்வும் போது 
குருட்டு கழுதை கோதுமை ரொட்டிக்கு ஆசை பட்டுச்சாம்.

சிவாஜி @RajiTalks 
பகல்லயே பாத்திமா தெரியாது 
இதுல ராத்திரில ராக்கம்மாவா தெரிய போகுது!?


Solomon Solai@solai_king 
ஏறு ஓட்ரவன் இளிச்சவாயனா இருந்தா 
மாடு மச்சான்னு கூப்பிடுமாம் 


யோவ்....பதிவரே!
ஏதோ சோள வடைனு நினைச்சி வந்தா 
இப்படி சொலவடை-னு ஏமாத்திபுட்டியே  
சரி வந்ததுக்கு EXERCISE பண்ணிட்டு போவோம்.....
ஆங்....1...........2..........3............    
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1