google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: வெற்றியைத் தேடி...2 (தொடர் சிந்தனை)

Thursday, December 6, 2018

வெற்றியைத் தேடி...2 (தொடர் சிந்தனை)


வெற்றியைத் தேடி செல்லும் பயணத்தில் நமக்கு பல இடையூறுகள் வரக்கூடும். அவைகள் நம் பேராசையை தூண்டி கடைசியில் நாம் அடைய வேண்டிய வெற்றியை சீரழித்துவிடும்
ஒரு கிராமத்தில்  உழைத்து முன்னேறிய ஒரு சிறு விவசாயி தன்  5 ஏக்கர் நிலத்தில்  நெல் விவசாயம் செய்து படிப்படியாக சம்பாதித்து அருகிலிருந்த நிலங்களை வாங்கி
 50 ஏக்கர் நிலத்துக்கு சொந்தக்காரரானார்.

பொறாமை கொண்ட அவரது உறவினரில் ஒருவர் ஒரு உண்மையான சிறு வைரக் கல்லை கொடுத்து...

 "மாமு இந்த வைரைக்கல்லை உங்க நிலத்தில் தான் கண்டெடுத்தேன். நீங்க உங்க வயல்வெளியை தோண்டினால் இதுபோன்ற வைரக்கற்கள் நிறைய கிடைக்கும் ஒரே ஆண்டில் நீங்க இந்த ஊரையே வாங்கிடலாம் இரண்டு வருடத்தில் இந்த மாவட்டத்தையே வாங்கிடலாம். 3 ஆண்டுகளில் இந்த நாட்டையே வாங்கிடலாம்"
என்று ஆசை காட்டினார்.

அந்த விவசாயியோ அந்த வைரைக்கல்லை எடுத்துக்கொண்டு நகரத்துக்கு சென்று வைரவியாபரியிடம் விற்பனை செய்தார்..

ஊருக்கு திரும்பிய சிறு விவசாயி  பேராசையால்  தனது நிலங்களில் விவசாயம் செய்யாமல் வைரங்கள் கிடைக்கும் என்று தானே தோண்ட ஆரம்பித்தார்.

கடைசியில் வைரமும் கிடைக்கவில்லை. நிலத்தை தோண்டியதால் உடல் நலிவுற்று வறுமையில் அவரது முதலில் வைரம் கொடுத்து ஆசையை தூண்டிய உறவினரிடம் கடன் வாங்கி  தனது 50 ஏக்கர் நிலத்தையும் அவரிடமே அடிமாட்டு விலைக்கு விற்று விட்டார்.

இதிலிருந்து நாம் அறிந்துகொள்வது...
நாம்  முன்னேறும் வேளையில் நம் முன்னேற்றத்தை தடுக்க பலர் வருவார்கள். அவர்கள் நம் அருகிலேயே இருப்பார்கள்.

ஒரு ஊழியர் தனித்தன்மையுடன் ஒரு தனியார் நிறுவனத்தில்
திறமையாக வேலை செய்தாலும்
முதலாளி அந்த வேலையாளியின் திறமையை அங்கீகரிக்க மாட்டார். அப்படி அவர் அங்கீகரித்தால் அந்த ஊழியருக்கு ஊதியம் அதிகம் கொடுக்க வேண்டுமே என்ற பயமாக இருக்கலாம்.
இல்லையேல் தன்னைவிட அறிவாளியை அருகில் வைத்துக் கொள்ளவது தனக்கு ஆபத்து என்று நினைக்கலாம்.

ஆகையால்....

வெற்றியத்தேடிய உங்கள் பயணத்தில் உங்கள் அருகில் உள்ளவர்களாலேயே பல இடையூருகள் வரலாம்.

அதை சந்திக்கும் மனவலிமையுடன் உங்கள் திறமையை வெளிப்படுத்தி
வெற்றி பெற கனவுப் பேராசையை விடுத்து நிஜஉலகில் வாழுங்கள்

#வெற்றியைத் தேடி...(தொடர் சிந்தனை) தொடரும்



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1