google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: தண்ணீர் தண்ணீர் கண்ணீர்

Sunday, March 22, 2015

தண்ணீர் தண்ணீர் கண்ணீர்



இந்த பூமியே முக்கால்வாசி தண்ணீர் சூழ்ந்திருக்க மனிதனும் மனிதனைப் போல் சில  உயிர்கள் மட்டுமே உயிர்வாழ அத்தியாவசிய குடிநீர் இல்லாமல் கண்ணீர் வடிக்கும் நிலை


இதைத்தான் ஆங்கில கவிஞர் சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜ்
“Water, water, everywhere,
And all the boards did shrink;
Water, water, everywhere,
Nor any drop to drink.”
..............என்று கடல் நடுவே தாகத்தில் தத்தளிக்கும் ஒருவனாக 
அன்றே கவித்துவமாக சொன்னான்.......

இன்று பண வசதியான மனிதன்  மட்டுமே சுத்தமான குடிநீர் குடித்து ஆரோக்கியமாக வாழும் நிலையில் இந்த உலகம் மாறிவிட்டது

இன்று #WorldWaterDay 
இந்த உலக தண்ணீர் தினத்தில் யாரை வாழ்த்துவது யாரை தூற்றுவது 



காடுகளை அழித்து மழை பொழிவை கெடுத்தவர்களையா?
ஆற்று மணலை அள்ளி  நீரோட்டத்தை சிதைத்தவர்களையா?
சாயக் கழிவு ஆலைக்கழிவு கலந்து மாசுபடுத்தியவர்களையா?
ஆழ்துளை கிணறு அமைத்து குளிர் பானம் விற்ப்பவர்களையா?

வெங்கடேஷ் ஆறுமுகம்@venkatapy 
தமிழகத்தில் 
தினந்தினம் தண்ணீர் தினமே 
#டாஸ்மாக்



Niyas@niyasmdu 
மக்களுக்கு தரமான குடிநீர் வழங்க பல குடிநீர் மையங்களை திறந்த ஒப்பற்ற தலைவிக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். #தண்ணீர் தினம்
ohn vijay@vjyv7 
"தண்ணீர் தினமா ?? நல்லவேளை குளிக்கல !!என்னால முடிஞ்ச தண்ணீர் சேமிப்பு" 

சிநேகமுடன் சிவா♡@shivafreedom 
தண்ணீர் இல்லையென கண்ணீர் கூட விட முடியாத அளவிற்கு வரண்டு போகும் வருங்காலம்.

தரலோக்கலு லேஜிபாய்»@TharaLocal 
நீ பணத்தை கொட்டி கொட்டி கொடுத்தாலும் ஒரு சொட்டு தண்ணீர் கிடைக்காத காலம் வரத்தான் போவுது! அப்பதான் தெரியும் மனுசன் வெட்டுன மரங்களோட அருமை..



நிலா காதலன் @MMSUNLOTUS 
கடவுளே வெளியே கெளம்பறேன் தண்ணீர் தினம்னு எவனும் தண்ணிய போட்டுட்டு வம்பிழுக்க வரக்கூடாது ...

‘நீரின்றி அமையாது உலகு’ என்ற வள்ளுவர் வாக்குப்படி
இன்று பூமியில் வாழும் மனிதர்களுக்கு அத்தியாவசியமான குடி நீருக்கு வழிவகுக்காத உலகம் செவ்வாயில் தண்ணீர் இருக்கிறதா...? என்று ஆய்வு செய்கிறது


  
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1