இப்பதிவு...கவிதைப் பிரியர்களுக்கு மட்டுமே இவை பாஷோவின் ஹைக்கூ கவிதைகள் (தொகுப்பு) நீள்பதிவு.........
ஜப்பானில் 17-ஆம் நூற்றாண்டில் வாழும் காலத்திலேயே பெரிதும் போற்றப்பட்ட ஹைக்கூ கவிஞர் ஆவார்...இவரது படைப்புகள் உலகெங்கும் அழிவில்லா தாக்கத்தை விதைத்தன.....
1-
நீங்கள் தீ மூட்டுங்கள்
உங்களுக்கு ஒர் அற்புதம் காட்டுகிறேன்
மிகப்பெரிய பனிப்பந்து.....
2-
ஒரு தேனீ
தள்ளாடி விழுகிறது
வெளிர் சிவப்பு மலர்ச் செடியிலிருந்து.....
3-
ஒரு கம்பளிப்பூச்சி,
இந்த இலையுதிர் கால வீழ்ச்சியிலும்
இன்னும் ஒரு பட்டாம்பூச்சியாக மாறவில்லை
4-
ஒரு சிள்வண்டு
தன்னைப் பற்றியே பாடியது .
முற்றிலும் மாறுபட்டு..
5-
தொடங்கியது ஒரு குளிர் மழை
தொப்பி எதுவும் இல்லை -
அதனால்என்ன...?.
6-
அந்தத் துறவிமடத்தில்
குளிர்முடிந்த இரவு விருந்துக்கு
தயாராகக் கத்தரியும் வெள்ளரியும்
7-
மூங்கில் புதருக்குள்
பின்னிரவு நிலவு ஒளிரும் போது
ஒரு குயில் அழுகிறது...
8-
பருத்திக்காட்டில்
நிலவுப்பூக்கள்
மலர்ந்தது போல்..
9-
ஒரு வயோதிக கிழவன்
மெதுவாக உண்ணுகிறான்
முள் மீன்
10-
காலைத்தேநீர் அருந்தும் துறவி
சாமந்திப்பூ மலர்வது போல்
அமைதி
11-
ஒரு பனிக்காலை
எனக்கு நானே சவைத்தப்படி
வஞ்சிரமீன் கருவாடு
12-
ஒரு விசித்திரமான மலர்
பறவைகளுக்கும் பட்டாம்பூச்சிகளுக்கும்
இலையுதிர் வானம்
13-
நினைவுகளின் கொந்தளிப்பு
கால அழிவின் எஞ்சிய எலும்புக்கூட்டில்
கத்தியால் குத்துவது போன்று
14-
சடோ(Sado) தீவிலிருந்து தூரமாக
கொந்தளிக்கும் கடல்-
பால் வெளி.
15-
பழைய குளம் .....
ஒரு தவளை குதிக்கும்
தண்ணீர் சத்தம்
16-
மழை வெள்ளத்திற்குப் பிறகு
சாமந்திப்பூக்களின் மனம் போல
அவர்கள் உயர்வடைகிரார்கள்
17-
இலையுதிர்கால நிலவொளியில்
ஒரு புழு அமைதியாகக் குடைகிறது
பாதாம் கொட்டை மேல் அமர்ந்து.
18- குளிரில் நீர்ஜாடியின்
விரிசல் ஒலி
நள்ளிரவில் விழிக்கச் செய்தது.
19- இறந்த பிறகு என் பயணத்தில்
அனாந்தரப் பொட்டல் வெளிகளில்
என் கனவுகள் மட்டும் சுற்றும்
20- கசக்கும் பணிப்பாகு ஆயினும்
தொண்டை நனைக்கப் போதும்
பெருச்சாளிக்கு
21-
மவுண்ட் அசாமா (Mount Asama) சாலை நெடுகிலும்
கற்களை வீசுகிறது
இலையுதிர் காற்று
22-
தவுட்டுக்குருவி
தடுப்பு கம்பி வேலி முகப்பிலிருந்து
சோற்றுக்கவளத்தில் எச்சமிடுகிறது.
23-
புதர்-மணப்புல் மலர்கள்
அசைந்தாடினாலும் கீழே தள்ளவில்லை
அவைகளின் பனித்துளி மணிகளை
24-
இலையுதிர்கால மழை
மவுண்ட் ஃபுஜி(Mount Fuji) மலையை
மிகவும் அழகாக திரையிட்டு மறைக்கிறது.
25-
குளிர் இரவில் அந்தக் காட்டு வாத்து
வானத்திலிருந்து விழுந்தது போல்
உடல்வலியில் அசந்து தூங்குகிறது.
26-
இரவில் விழித்து பார்த்தப்போது
உறைந்த எண்ணெயால்
குறைந்த விளக்கு வெளிச்சம்
27-
களத்து மேட்டு வைக்கோல்
கெட்டு கறுக்கும் அளவுக்கு
போதுமான அளவு மழை
28-
குளிர்கால மழை
மாட்டுக் கொட்டகை மீது விழுகிறது.
சேவல் கூவுகிறது
29-
புதிதாகக் கழுவிய
வெள்ளைப்பூண்டின் மனம்
ஜில்லென்று வீசுகிறது
30-
கடல் கறுக்கிறது
கடல் வாத்துக்களின் குரல்கள்
களையிழந்து வெளிருகிறது....
31-
காலைப்பனியின்
சகதியில் சிதறின-
குளிரும் முலாம்பழங்கள்
32-
நீண்ட தூர வெளிகளைக் கடந்ததால்
சவ்வாரி இருக்கை உறைந்து
என் நிழல் ஊர்ந்து செல்கிறது.
33-
என்னைப் பின்பற்றாதீர்கள்
முலாம் பழத்தை பிளப்பது போன்று
அலுப்பாகத் தெரியும் உங்களுக்கு.
34-
பேன்களையும் உண்ணிகளையும்
உயிரோடு தின்று இளைப்பாறுகிறது
அந்த குதிரை என் தலையணையில்
35-
அந்தக் கஞ்சா செடியில்
கிழிந்த ஒரு வண்ணத்துப் பூச்சியின் இறகு
எதையோ ஞாபகப் படுத்துகிறது.
36-அந்தச் சாலையின் மீது
யாரும் பயணிக்கவில்லை
இலையுதிர் கால இரவின் தொடக்கம்
37-
மலைரோஜாக்களின் இதழ்கள்
அப்போதும் இப்போதும் வீழ்ந்திடுமா
நீர்வீழ்ச்சியின் ஓசைக்கு...?
38-
மலைப்பகுதி வயல்வெளியில்
பூச்சாண்டி பொம்மை
நல்ல பயன்
39-
கல்லறையைக் குலுக்குகிறது
என் அழுகைக் குரல்
இலையுதிர்காலக் காற்றால்.
40-
குதிரையின் மீதமர்ந்து குட்டித்தூக்கம்
தூரத்து நிலவின் தொடரும் கனவு
சூடான நீராவியுடன் தேநீர்
41- ஆன்மாக்களின் திருவிழா
இன்றும் புகைச்சல்
சுடுகாட்டிலிருந்து
42- வசந்த மழை
கூரை வழியாகக் கசிவு
சொட்டும் குளவிக் கூடு
43-
விடுதியில் தங்குவதும்
அங்கே விலைமாதர்களுடன் தூங்குவதும்
தரிசுப்புல் திண்டும் நிலவும்
44- ஒரு குட்டித்தூக்கம்
அடிக்கல் நாட்டுவது போன்று
குளிர் சிறைக்கு எதிராக
45- கீரை சாலட்டில் கிடந்த
மணலைக் கடித்த பற்களின் கூச்சம்
வயோதிகம் வந்த நினைவு
46-
வாழைமரத்தின்
காற்றில் கிழிந்த இலைகளிலிருந்து
வாளியில் கொட்டும் மழைத்துளிகள்
47- அந்தப் பட்டாம்பூச்சி மணக்கிறது
அதன் இறக்கைகளில் வாசனை
மந்தாரை மலர்கள்
48- அந்தத் தும்பி
தரையிறங்க முடியாது
புல் என்ற கத்தி மீது.
49-
முதல் பனியில்
செவ்வந்திச் செடியின் இலைகள்
ஒட்டி வளைந்தன
50- அதிகாலைப் பெருமிதம்
பழைய வேலியிட்ட
கோட்டைவாயிலில் மலர்ந்தது.
51- வசந்தம் கடக்கின்றது....
துக்கத்தில். பறவைகள்
கண்ணீர் சிந்தும் கண்களோடு மீன்கள்
52- மஞ்சள் மலைரோஜாவின்
இதழ்களில் நடுக்கம்-
நீர்வீழ்ச்சியின் கர்ஜனை
53- அந்த மீன் வியாபாரியின் குரல்
கலந்தது
குயிலின் குரலோடு
54-
மூங்கில் காட்டில் மறைந்திருந்த
பனிப்புயல்
அமைதியை விரட்டியது.
55- அந்தப் பழைய கிராமத்தில்
ஒரு வீடுகூட....
ஈச்சமரங்கள் இல்லாமல் இல்லை
56- என் மரக்கூரையின் கீழ்
ஏப்ரல் மழையின் தனித்தனி சொட்டுகள்
வரையும் கோடுகள்
57- ஒரு சிறந்த போர்வீரனின்
காலி தலைக் கவசத்திலிருந்து
ஒரு வெட்டுக்கிளி பாடுகிறது
58- கோடை புற்கள்
துணிச்சலான வீரர்களின்
மிச்சமுள்ள கனவுகள்
59-
குளிர்காலத் தோட்டத்தில்
தேய்ந்துபோன நிலவை
பூச்சிகள் பாடுகின்றன
60-
மேகங்கள்-
நிலவைப் பார்த்து ரசிப்பவர்களுக்கு
ஏமாற்றும் பாசாங்குக்காரர்கள்
இவைகள் ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்ட பாஷோவின் ஹைக்கூ கவிதைகளிலிருந்து எனக்கு பிடித்தவைகள் எனது நடையில் தமிழாக்கம் செய்யப்பட்டன விதிமுறைகளுக்கு இங்கே இடமில்லை........
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
Follow @PARITHITAMIL |