google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: வெற்றியைத் தேடி.... 1 (தொடர் சிந்தனை)

Wednesday, December 5, 2018

வெற்றியைத் தேடி.... 1 (தொடர் சிந்தனை)


இது வாழ்க்கையில் நாம் வெற்றி பெற என்ன செய்யவேண்டும் என்று ஒரு முன்னோக்கு சிந்தனை மட்டுமே

எல்லோருக்குள்ளும் ஒரு திறமை உண்டு. ஆனால், அதை வெளிப்படுத்தும் விதத்திலேயே நம் வெற்றி உண்டு.

இதை அறிந்து கொள்ள ஒரு எளிய கதை சொல்கிறேன்....

தினமும் ஒரு பள்ளிக்கூடம் வாயிலில் பள்ளி சிறுவர்கள் வீட்டுக்கு செல்லும் நேரங்களில் தினமும் ஒரு பலூன் வியாபாரி வண்ண வண்ண பலூன்கள் வைத்துக் கொண்டு நிற்பார்.
யாரும் அதைக் கண்டு கொள்வதில்லை. விற்பனை மந்தமாக இருந்தது

ஒருநாள் அந்த பலூன் வியாபாரி
ஹீலியம் (Helium) காற்றடைத்த கண்ணை பறிக்கும் ஒரு சிகப்பு வண்ண பலூனை மிக உயரத்தில் பறக்க விட்டார் அதை பார்த்த சிறுவர்கள் அவரிடம் பலூன்கள் வாங்க துவங்கினார்கள்

அதிலிருந்து அந்த பலூன் வியாபாரி தனது வியாபாரம் மந்த நிலை அடையும் போதெல்லாம்
ஹீலியம் காற்றாடைத்த சிகப்பு, பச்சை, மஞ்சள், ஆரஞ்சு போன்ற வண்ண வண்ண பலூன்களை பறக்கவிட்டு தன் பலூன் விற்பனையை பெருக்கிக் கொண்டார்.

ஒருநாள் அவரிடம் தயங்கி தயங்கி வந்த கருப்பு நிறமுடைய ஒரு சிறுவன் அந்த பலூன் வியாபாரியை அணுகி...

"அய்யா... உங்களால் ஒரு கருப்பு வண்ண பலூனை இதைப்போல் உயரமாக பறக்க விட முடியுமா?" என்று கேட்டான்.

அதற்கு அந்த பலூன் வியாபாரியோ....
"தம்பி, பலூன் உயரமாக பறக்க அதனுள் அடைக்கப்பட்ட காற்றுத்தான் காரணமே தவிர அதன் வண்ணம் இல்லை" என்று விளக்கினார்

இதிலிருந்து நமக்கு தெரிவது யாதெனில்....
வெற்றியைத் தேடி நாம் எங்கும் அலைய வேண்டாம் அது நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் தூங்கிக் கொண்டிருக்கிறது.
அந்த முன்னோக்கு சிந்தனை அறிவை தட்டி எழுப்பி விடும் எல்லோருக்கும் அந்த பலூன் வியாபாரி போல் வெற்றி நிச்சயம்

#வெற்றியைத் தேடி...1 (சிந்தனை தொடரும்)

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1