google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: ரஜினியின் #காலா-ஒரு ரசிகனின் விமர்சனம்

Thursday, June 7, 2018

ரஜினியின் #காலா-ஒரு ரசிகனின் விமர்சனம்


காலா என்பதைவிட தாராவி தா'தா' என்று பெயர் வைத்து இருக்கலாம்

 கதை மும்பை பகுதி தாராவி குடிசை பகுதியில் கட்டிடம் கட்ட நினைக்கும் நானாபடேகர்க்கும் ரஜினிக்கும் நடக்கும் தனிமனித சண்டை

ரஜனிகாந்த் .. மிக தெளிவாக தனது நடிப்பு பகுதியை தேர்ந்தெடுத்து இருக்கிறார்
வயதுக்கு தகுந்த மனைவியுடன் ஊடல் காட்சிகள்
முன்னால் காதலியை பார்க்கும்போது மட்டுமே படபடபான காதல் வெளிப்பாடுகள்
நடன காட்சிகளில் தனக்கு வரும் அசைவுகள்
சண்டைகாட்சிகளில் முகத்தில் காட்டும் கடுமை

ஈஸ்வரி ராவ்- ரஜனியின் அப்பாவி மனைவி நிறைய பிள்ளைகள் பேரப்பிள்ளைகள்


 ஹுமா குரேஷ-ரஜினியின் முன்னாள் காதலி
 முன்னால் காதலனை நேர்மையாக கையாளும்
அருமையான பாந்தமான நடிப்பு

படம் முழுவதும் திரையில் தனது நடிப்பால் நிறைந்து இருப்பவர் "சமுத்தரக்கனி "

 "உன்னையும் மண்ணையும் வென்று வா நீ "பாடல் கேட்கும்படி இருக்க, BGM மிரட்டலாக இருந்தது

டிரோன் எனப்படும் ஆகாச காமெரா காட்சிகள் நிறைய பயன்படுத்தி காமிரா முரளி மிக திறமையாக சிறிய குறுகலான இடங்களில் எடுக்கவேண்டிய எல்லா காட்சிகளிலும் திறம்பட எடுத்து இருக்கிறார்

பா.ரஞ்சித்- திரைக்கதையில்
இது வர்க்க போராட்ட கதையா?
அல்லது கம்முனிச சித்தாந்த நிலம் ஏழைக்களுக்கு என்பதாக சொல்லி இருக்கிறாரா??
தாழ்த்தப்பட்ட மக்களை பற்றிய படமா?
பின்புலத்தில் தனது தலித்தியல் மற்றும் அம்பேத்கார் புத்தர் சார்பு நிலை பற்றிய விசயங்களை காட்டி இருக்கிறார்
வில்லன் ராம பக்தன், அவன் பூஜையில் இருக்கும் பொது பின் புலத்தில் ராமாயண கதை வடமொழியில் சொல்லி... ரஜினியை ராவணன் என்பதாக காட்டி அவன் உயிர் பெற்று வருவதாக... நிலத்தை ஆளும் உரிமை இல்லை என்றால் எங்களுக்கு உங்கள் கடவுள்கள் தேவை இல்லை. போன்ற வசனங்கள் ரஜினி வாயில் பேச வைத்து மும்பை சிவசேனா, பாஜக, காவி பக்தாஸ்களுக்கு ஆன்மீக அரசியல்வாதி ரஜினி மூலமே செம அரசியல் பதிலடி கொடுத்துள்ளார்

ஆக மொத்தத்தில்.....
காலா படத்தில்
வேங்கையன் மவன் ரஜினியை ரஞ்சித் என்ன பண்ணி இருக்காருன்னா...

 நாயகன் படத்தில் ரஜினி நடித்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான்.
ரஞ்சித் சிவசேனையினை பிஜேபியினை வச்சு செஞ்சுட்டார்

காலா படத்தில் நம்மை தான் கழுவி ஊற்றி இருக்குறாங்கனு தெரியாம காலாவை ஆதரித்து
பேசின பா.ஜ.க நிலைமை தான் ரொம்ப மோசம்!

காலா- இயக்குனர் என்பதை விட பா. ரஞ்சித்தை ஓர் அரசியல்வாதியாக காட்டும் படம்
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1