google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: டிராஃபிக் ராமசாமி-சினிமா விமர்சனம்

Saturday, June 23, 2018

டிராஃபிக் ராமசாமி-சினிமா விமர்சனம்


தனி ஒருவனாக, ஆளும் மக்கள் விரோத அரசை எதிர்த்து ஒன்_மேன்_ஆர்மியாக சட்டரீதியில் போராடும் வாழும் 75 வயது சமுகப் போராளி டிராஃபிக் ராமசாமியின் வாழ்வில் நடந்த முக்கிய போராட்டங்களை காமெடி சினிமாத்தனங்களை புகுத்தி கேளிக்கை ஆகியுள்ளது நடிகர் SA சந்திரசேகர் நடித்துள்ள இயக்குனர் விக்கியின் டிராஃபிக் ராமசாமி படம்
கோவில், பள்ளிக்கூடம் அருகில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை மூடச்சொல்லி தற்கொலை போராட்டம் நடத்தும் டிராஃபிக் ராமசாமியாக தொடங்கும் திரைக்கதை....
கார்பொரேஷனில் தண்ணி வராததால் உயிரிழக்கும் பக்கத்து வீட்டு குழந்தையால் மேயரை கோர்ட்க்கு இழுப்பதிலும்...
பான்பராக் போட்டு ரோட்டில் துப்பும் நபரிடம் மோதல்...
பெண் காவல் ஆய்வாளரின் காம லீலைகளை பத்திரிகையில் வெளிப்படுத்தல்...
கடைசியில்...
அவரது முக்கிய போராட்டமான மீன்பாடி மோட்டார் வண்டிகளால் ஏற்படும் உயிரிழப்புகளை கண்டு பொங்கி எழுந்து வெற்றி பெறுவதில் படம் முடிகிறது
இயக்குனர், நடிகர் SA சந்திரசேகர் உடல் மொழியால் டிராஃபிக் ராமசாமியாகவே வாழ்கிறார் அவரது மனைவியாக நடிகை ரோகிணி அவரது சமுக போராட்டங்களுக்கு துணையாக நடித்துள்ளார்
விஜய் சேதுபதி, குஷ்பூ, அம்பிகா, சீமான், விஜய் ஆண்டனி... போன்ற பிரபலங்கள் திரையில் தோன்றி மறைந்தாலும்....
நடிகர் பிரகாஷ்ராஜ் கதைக்கு திருப்பமாக வந்து மனதில் நிற்கிறார்
படத்தின் மிகப்பெரிய காமெடி நிஜத்தில் போலிஸாரால் தேடப்படும் சமூக வலைதள குற்றவாளி நடிகர் SVeசேகரை
நீதிபதியாக காட்டி நியாயம் பேச வைத்திருப்பது ஒரு நிமிடம் தலை சுற்றி விட்டது
டிராஃபிக் ராமசாமி என்றாலே இப்பொதெல்லாம் ரோட்டில் போக்குவரத்துக்கு தடையாக உள்ள பேனர்கள் கிழிப்புதான் நினைவு வரும் இன்றைய அம்மா அரசை எதிர்க்க வேண்டி வருமே என்று தவிர்க்கப்பட்டுள்ளது படத்தின் உண்மைத்தனத்தை
புறக்கணித்துள்ளது
"உச்சி மீது வான் இடிந்து வீழ்ந்தாலும் அச்சமில்லை அச்சமில்லை" என்று இன்றும் பாரதியின் அக்னிகுஞ்சாக வாழும் சமுகப் போராளி டிராஃபிக் ராமசாமியை படத்தில் வரும் கோர்ட் காட்சிகள் மூலம் கோமாளியாக காட்டியுள்ளதில் இயக்குனர் விக்கி வெற்றி பெற்றுள்ளார்

ஆக மொத்தத்தில்....
நிஜத்தில் சமுகப் போராளியாக வாழும் ராஃபிக் ராமசாமி சினிமா டிராஃபிக் ராமசாமியாக வரும்போது கோமாளியாக தெரிவது எனக்கு மட்டும்தானா?

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1