google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: ஸ்டாலின் சொன்ன சின்ன(ம்)மா மரக்கதை

Tuesday, February 7, 2017

ஸ்டாலின் சொன்ன சின்ன(ம்)மா மரக்கதை


நாட்டு நடப்பையும் அரசியல் சூழ்நிலையையும் வைத்து நகைச்சுவை,அரசியல் நையாண்டியாக (political satire) கதை சொல்வதில் வல்லவர் கலைஞர் அவரை விட 16 பாய்ச்சலாக  ஜெயலலிதா-சசிகலா அரசியல் கூத்தை  ஸ்டாலின் பெரிய மா மரம், சின்ன மா மரம் என்று குட்டிக் கதையாக சுட்டிக்காட்டுகிறார்.........


கிராமத்தில் ஒரு ஆறு இருக்கிறது. அந்த ஆற்றில் ஐந்தாறு வருடமாக தண்ணீர் இல்லை, வறண்டு போய் கிடக்கிறது. அந்த ஆற்றில் ஒரு பெரிய மா மரம் சரிந்து கிடக்கிறது.

ஆற்றில் தண்ணீர் ஓடிய காலத்தில் எல்லாம் கிராம மக்கள் இக்கரையில் இருந்து அக்கரைக்கு செல்ல அந்த மரத்தை தான் ஒரு பாலமாக பயன்படுத்தி வந்தனர். ஆனால் ஆற்றில் தண்ணீரே இல்லாமல் பாலைவனமாக காட்சி அளித்ததால் கிராமமக்கள் வெயிலில் நடந்தே சென்று வேதனைகளை தாங்கி கொண்டு ஆற்றை கடந்து சென்று வந்தனர்.

இப்படிப்பட்ட நிலையில் ஒரு நாள் திடீரென ஆற்றில் பெருவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த பெரிய மா மரம் காணாமல் போய்விட்டது. அது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதா? அல்லது எப்படி காணாமல் போனது என மர்மமாக இருந்தது.

இந்த நேரத்தில் கிராம மக்கள் ஆற்றை கடந்து செல்ல சின்ன மா மரம் போன்ற ஒன்று கிடைத்தது. அதன் மீது கிராம மக்களில் சிலர் ஏறினார்கள். நடு ஆற்றில் சென்ற போது தான் அது சின்ன மா மரம் அல்ல. ஒரு முதலையின் முதுகு என தெரியவந்தது. இதனால் அதில் ஏறி இருந்தவர்களுக்கு பயம் வந்து விட்டது. ஆபத்தில் இருந்து காப்பாற்றும்படி சத்தம் போட்டார்கள்.

அப்போது ஆற்றின் கரையில் இருந்தவர்கள் கவலைப்படாதீர்கள். நீங்கள் தெரியாமல் முதலை மீது ஏறி விட்டீர்கள். ஒரு நல்ல படகு வரும் அதில் ஏறி நாங்கள் கரையை கடப்போம். அதுவரை முதலையிடம் இருந்து தப்பி நீங்கள் உயிரோடு இருந்தால் உங்களையும் அந்த படகில் ஏற்றி கொண்டு போய் கரை சேர்ப்போம் என கூறினார்கள்.

யாரையும் குறிப்பிட்டு நான் இதனை கூறவில்லை. இது சின்ன கதை. இதனை அரசியலோடு நீங்கள் கலந்தால் அதற்கு நான் பொறுப்பு அல்ல 


இந்த குட்டிக்கதை  தங்களுக்கு பிடித்திருந்தால் 





இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1