google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: புருஸ் லீ யின் இன்னொரு முகம்-கவிஞர்

Monday, November 28, 2016

புருஸ் லீ யின் இன்னொரு முகம்-கவிஞர்



குங் பூ கலையில்  வீரராகவும் சினிமா நடிகராகவும் விளங்கிய புருஸ் லீ  ஒரு சிறந்த தத்துவக் கவிஞர் ஆவார்

கவிதை எழுதியவர் எல்லாம் கவிஞர் அல்ல தன வாழ்க்கையையே மற்றவர்களுக்கு பாடமாக வாழ்பவரே உண்மையான கவிஞராக இருக்க முடியும் 

வாய்கிழிய பேசுவது எல்லாம் தத்துவமாகாது வாழ்க்கை நியதிப்படி தானும் வாழ்ந்து மற்றவர்களும் அதன்படி வாழ நினைக்கும் உணர்வை ஊட்டுபவரே உண்மையான தத்துவ ஞானி ஆவார்

  "நீர் போல
அமைதியாக ஓடிக்கொண்டு ,
சலனமற்று இருக்கிறேன் ,

மூங்கிலை போல
 வளைந்து கொள்கிறேன்.
ஆழ்ந்த அமைதி
 என்னை எப்பொழுதும் வழி நடத்துகிறது"

புரூஸ் லீ ஒரு கவிஞர் என்பதை தாண்டி ஒரு தீர்க்கமான தத்துவ ஞானம் மிக்கவராக இருந்தார்

. "எதிரி என்று ஒருவன்
இல்லவே இல்லையே ;
எல்லாமே பிம்பங்கள்,
பிரதிபிம்பங்கள்.
அவற்றை நொறுக்கிவிட்டால் போதும்.
 எதிரிகள் என்று யாருமில்லை

"தவறுகளை ஒப்புக்கொள்ளும் தைரியம் இருந்தால் 
அந்தத் தவறுகள் மன்னிக்கப் படவேண்டியவைகளே "



"நீ நீயாகவே இரு!
உன் மேல் நம்பிக்கை வைத்து 
உன்னுள் இருக்கும் 
உன் ஆளுமைகளை  
இன்னொரு பிரதியாக வெளிப்படுத்து!! 

"அறிவார்ந்த பதிலிலிருந்து 
ஒரு முட்டாள் கற்றுக் கொள்வதை விட 
முட்டாள்தனமான கேள்விகளிலிருந்து 
ஒரு புத்திசாலி நிறையக் கற்றுக்கொள்ள முடியும்"


ஜென் அவரைத் தொடர்ந்து செலுத்தியது. பேரமைதி அவரிடம் குடிகொண்டு இருந்தது,

"ஒரு காரியத்தை செய்ய அதிலேயே அதிக நேரம் செலவிட்டால் 
நீ ஒருபோதும் அந்தக் காரியத்தை செய்து முடிக்க மாட்டாய்"  

ஒரு முறை சீன இளைஞன் ஒருவன் ஹோட்டலில் வம்புக்கு இழுத்துக்கொண்டே இருந்தான், லீ அமைதியாகவே இருந்தார் "ஏன் இப்படி ?" என்று கேட்ட பொழுது , அவரது பதில்......

"நான் எப்பொழுதும் மகிழ்ச்சியோடு இருக்கிறேன்.
அதை மற்றவர்கள் திருட விடமாட்டேன் !"

 வீரம் என்பது
சண்டை போடுவதில் மட்டுமில்லை ; யாருடன் சண்டை போடாமல் இருக்க வேண்டும் என உணர்ந்து நடப்பதிலும் இருக்கிறது.

"வெறுமையாக இருக்கிற பொழுது தான்,அறிதலைக்கடந்து உணர்தலை நோக்கி நகர்கிற பொழுது தான் நீ ஜென் ஆகிறாய் !" என்கிற ஆழ்ந்த தத்துவத்தை உணர்ந்து......... 
மனம் விரும்புவதை உடல் செய்ய இந்த அறிதல் முக்கியம் என்பார் புரூஸ் லீ.


 புருஸ் லீக்கு உடலில் குறைபாடு ஒன்றிருந்தது. அவரின் வலது கால் இடது காலை விட நான்கு சென்டிமீட்டர் உயரம் குறைவு. ஆனால்,உங்கள் தலையில் ஒரு நாணயத்தை வைத்தால் அதை உங்கள் தலைமுடியைக்கூட அசைக்காமல் அவரால் எடுக்க முடியும். கேட்ட பொழுது ,"நாணயம் மட்டும் தான் என்னுடைய கண்களில் தெரியும். அதில் மூழ்கிப்போவது தானே குங்பூ !" என்றார்

 முப்பத்தி மூன்று வயதில் இறந்து போனாலும் இன்னமும் ஆக்ஷனில் தொட முடியாத உயரத்தில் இருக்கும் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள அத்துணை பாடங்கள்.
அவரின் ஒரு கவிதை தான் அவரின் வாழ்வானது :

"மேற்கே காற்றை
எல்லாம் தங்கமயமாக்கி
கதிரவன் கரடுமுரடான மலையில் கரைகிறான்

கரைந்துருகும் பனித்துளிக்கு
வெகுதூரம் தள்ளி
மலையுச்சியின் மீது
தங்க டிராகன்
தனித்து தன் கனவுகள்
வெளிச்ச மேற்கில் தேய,மறைய
சலனமில்லாமல் நிற்கிறது !

தலைவணங்குவோம்."

வாழ்ந்தவரின் அனுபவங்கள் வாழ்கின்றவருக்கு பாடங்கள் 
இன்றைய இளைய சமுதாயம் வெறும் பொழுதுபோக்கு (சினிமா) படங்களைப் பார்த்து வாழ்க்கையை தொலைப்பதை விட....

 படங்களில் பாடங்கள் காட்டிய  புரூஸ்லீ போல் வாழ்க்கையை கற்றுக் கொள்ளட்டும் 


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1