google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: தியேட்டரில் தேசிய கீதம்-டிவிட்டர்கள் கலாய்த்தல் காமெடி

Wednesday, November 30, 2016

தியேட்டரில் தேசிய கீதம்-டிவிட்டர்கள் கலாய்த்தல் காமெடி


படம் துவங்குவதற்கு முன் சினிமா தியேட்டரில் திரையில் தேசிய கொடியுடன் தேசிய கீதம் இசைக்கவேண்டும் படம் பார்ப்பவர்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது 

இது வரவேற்க வேண்டிய நடவடிக்கைதான் ஆனால் முன்பு திரையரங்கங்களில் படம் முடிந்தப் பிறகு தேசிய கீதம் இசைக்கப்பட்டது திரையில் தேசிய கீதம் ஒலிக்கும் போது மக்கள் திரையரங்கில் யாரும் இருப்பதில்லை அதனால்  காலப்போக்கில் அந்த நடைமுறை இல்லாமல் போனது 

இப்போது மீண்டும் செயலுக்கு வந்துள்ள இந்த நடவடிக்கை சமுகத்தில் வேண்டாத சில நிகழ்வுகள் நடக்கலாம் வேற்று மதத்தினரை மதசார்பற்ற நாட்டில் தேசபக்தர்களாக நடிக்கும் சில சமுக விரோதிகள் தேசவிரோதிகள் என்று தாக்கலாம் 

சில தேசப்பற்று இல்லாதவர்கள் எழுந்து மரியாதை செய்யாமல் அவமதிக்கலாம் 

இதுதான் ஒரு குடி மகனின் தேசப்பற்று அடையாளம் என்கிறபோது நகைப்புக்கு இடமாகிறது நீதிபதியின் தீர்ப்பு 

உச்ச நீதி மன்றத்தின் இந்த நடவடிக்கை பற்றி...........


இனி தியேட்டரில் தேசியகீதம்!




என்னமோ படம் போடுரதுக்கு முன்னாடி தேசியகீதம் போடப்போறாங்கலாம் அது எப்டி குட்கா முகேஷுக்கு முன்னாடியா பின்னாடியா?? சொல்லுங்கண்ணே!!

தேசியகீதம் பாடுற அந்த 54 செகன்ட்மட்டும் சீட்ல ஷாக் அடிக்கிற மாதிரி வயர்கள செட் பண்ணிவிட்டா எல்லாரும் எந்திரிச்சு நிக்க வாய்ப்பிருக்கு..



அப்பு தேசிய கீதம் போடுறதுலாம் சரிதான் முடிஞ்ச உடனே முட்டாய் கேட்டு பிரச்சனை பன்னுவானே அப்ப என்னப்பு பன்னுவாங்க

தியேட்டர்களில் தேசிய கீதம் ஒலிப்பரப்ப வேண்டும் - உச்ச நீதிமன்றம் அடுத்து யூ-டியூப்லயும் வீடியோ பார்க்கும்போது ஒலிபரப்பனும் சொல்லுவாங்க போல

எங்க வேணுனா தேசியகீதம் போடுங்க.ஆனா பரங்கிமலை ஜோதில மட்டும் வேணாம்டா.அங்க ஆல்ரெடி ஸ்டாண்டிங்-ல தான் எல்லாரும் நிக்க வச்சிருப்பானுக

அடுத்து கோயில் சர்ச் மசூதி'ல தேசிய கீதம் பாடனும்'னு சொல்வானுங்க போல..

முதல்ல நீதிமன்றத்தில் ஏன் ஏன் ஏன் அமுல்படுத்தவில்லை யு வரானர் #தேசியகீதம்

ஆபரேட்டர் சார்..பழைய பேசண்ட் குட்கா முகேஷ டிஸ்சார்ஜ் பண்ணிட்டு...இந்த தேசியகீதம் கேசட்ட போடுங்க.

களில் படம் ஆரம்பிக்கும் முன் ஒலிபரப்ப வேண்டும்.. அய்யய்யோ இவனுங்க அதுக்கும் சேர்த்து எழுதுவானுங்களே..

முட்டாள்களின் கூடாரமாக மாறிவிட்டது நீதிமன்றம்.கேளிக்கைக்காக செல்லும் திரையரங்கில் என்னாச்சுஇந்த நீதிபதிகளுக்கு😱 #நாடுவிளங்கிடும்



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1