சாதி வெறியால் "காவிரியை" இழந்த தமிழன்.!!!
இது மறைக்கப் பட்ட உண்மையும் அல்ல
மறக்கப் பட்ட உண்மையும் அல்ல தமிழன் சாதிவெறியால் மறுக்கப் பட்ட உண்மை
"காவிரி" என்பது தமிழனுக்கு
சொந்தமான நதி,அதை அவன்
வரலாற்றிலே இழந்தான்.?
அது ஏன் தெரியுமா.?
ஆம்.! தமிழன் காவிரியை சாதிய
பற்றால் இழந்தான் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா..
சில மறைக்கப்பட்ட குண்டுகள்
இப்பொழுது வெடிக்கபோகின்றன.
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது என்ன நடந்தது
தெரியுமா.??
நமது தமிழ்த்தாய் வாழ்த்திலே
நிறைய வரிகள் இருக்கும்..அதுவே
நம்மில் பலருக்கு தெரியாது
அதில் அழகாக கவிஞர் சொல்லுவார்,
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா எழுந்துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும்
சீர் இளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே !
விளக்கம் :
அன்னை தமிழே.! உன்னிடத்தில் இருந்தே கன்னடமும்,தெலுங்கும்,
மலையாளமும்,துளுவும் பிறந்தன..
ஆயினும் நீ இன்னும் இளமையோடு இருக்கிறாயே,என்னே உன் சிறப்பு என கவிஞர் குறிப்பிடுகிறார்
இதில் "துளு" என்கின்ற சொற்றொடரை கவனித்தீர்களா.!!
திராவிட மொழிகள் எத்தனை என கேட்டால் பொதுவான கருத்து நான்கு என்பதுவே..ஆனால் மெய்யில் திராவிட மொழிகள் ஐந்து.! அவை,
1)தமிழ்
2)தெலுங்கு
3)கன்னடம்
4)மலையாளம்
5)துளு
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது ஒவ்வொரு மொழி பேசுபவர்களுக்கும் ஒவ்வொரு மாநிலம் என முடிவு செய்யப்பட்டது.
அப்போது மற்ற மொழிகளுக்கு எல்லாம் மாநிலம் பிரிந்து தந்தாகிவிட்டது,ஆனால் துளு மொழி பேசுபவர்கள் சிறுபான்மையினராக இருந்தமையால் அவர்களுக்கென தனி மாநிலம் அமைப்பதில் சிக்கல் எழுந்தது.
முடிவாக இந்த நான்கு மாநிலத்தில் ஏதேனும் ஒரு மாநிலத்தில் நீங்கள் இணைந்து கொள்ளலாம் என தீர்மானிக்கப்பட்டபோது "துளு" மொழி பேசுகிற மக்கள் நாங்கள் தமிழ்நாட்டோடு இணைந்து கொள்கிறோம் என அவர்கள் வந்தார்கள்.
ஆனால் நாம் அவர்களை சாதிய உணர்வோடு அன்று எதிர் கொண்டோம்,தமிழ்நாட்டில் உள்ள சாதிகளுக்கு சற்றும் நிகரில்லாத ஒரு சாதியினை நாம் இணைத்து கொள்வதா என யோசித்தோம்.
சாதாரண மலைவாழ் மக்களை
நாம் ஏன் ஏற்றுகொள்ள வேண்டுமென பார்த்தோம் சாதிய தலைவர்கள் பின்வாங்கினார்கள்.
அதனால் அன்றைக்கு நம்மை நாடி வந்த துளு மொழி பேசுகிற மக்களை நாம் சாதிய பார்வையோடு
ஏற்றுக்கொள்ளாமல்
தள்ளி வைத்தோம்.
பின் வேறு வழியில்லாமல் அவர்கள் கருநாடாகாவில் இணைந்தனர்.
இதில் குறிப்பிடத்தக்க விடயம்,
துளு மொழி பேசுகிற மக்களின்
மலை தான் "குடகு மலை"
அக்குடகு மலையில் தான் காவிரியாறு உற்பத்தி ஆகிறது,
பின் தமிழ்நாட்டை வந்து சேர்கிறது
அன்றைக்கு அம்மொழி பேசுகிற மக்களை நாம் ஏற்று
கொண்டிருந்தோம் எனில்
"காவிரி" தமிழ்நாட்டின் எல்லை பகுதிக்குள் இருந்திருக்கும்.
இன்று தமிழன் தண்ணீர் பிச்சை கேட்கின்ற நிலைமை வந்திருக்காது,ஆனால் நம் சாதிய உணர்வு நமக்கு இவ்வளவு பெரிய
இழப்பை ஏற்படுத்தி இருக்கிறது
எனில் அப்படிப்பட்ட சாதி நமக்கு தேவையா என நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.
இப்பிரச்சினை நடந்து
கொண்டிருக்கும் போது துளு மொழி பேசும் மக்களிடையே இணங்கிப்பேசி அவர்களை கருநாடகாவோட இணைத்த விஞ்ஞானியின் பெயர் தான்
"விஸ்வேஸ்வரய்யா" அதுவே
நமக்கு தெரியாது.
இன்றும் அரட்டை அரங்கம்
போன்ற மேடை பேச்சுகள் கருநாடகாவில் நடக்கும்போது
விஸ்வேஸ்வரய்யாவை பற்றி பெருமையாக தமிழர்களே பேசுவதை நாம் காணலாம்
அவர் என்ன செய்தார் என்பதே பேசும் பலருக்கு தெரியாது.
ஆக நாம் அவர்களை சாதிய பார்வையால் தள்ளி வைத்த காரணத்தினாலே காவிரி கருநாடகாவில் இணைந்தது
விளைவு தமிழ்நாட்டில் விவசாயம் முற்றிலுமாக அழிந்துவிடும் சூழ்நிலை எழுந்திருக்கிறது.
"சோழவளநாடு சோறுடைத்து"
என சொல்வார்கள்..விவசாயம் என்றால் என்னவென உலகிற்கே
கற்றுகொடுத்தவர்கள் இன்று விவசாயத்தயே கைவிடும் நிலைமை வந்துள்ளது.
இன்று வீடுகளில் நாமே கருநாடக பொன்னி வாங்கி வாருங்கள்,நாட்டு பொன்னியா அது வேண்டாம் என சொல்கின்ற அளவிற்கு நிலை மோசமாகியுள்ளது தமிழர்களே.!
தமிழ்நாட்டில் விவாசயம் செத்துகொண்டிருக்கும் இதே நேரத்திலே கருநாடகா காவிரியை தனது வட எல்லை வரை திருப்பி விவசாயத்தை மிக அழகாக விரிவுபடுத்தி இருக்கிறது.
பாருங்கள்.! நமது சாதிய வெறியின் காரணமாக எவ்வளவு பெரிய இழப்பு நமக்கு நிகழ்ந்திருக்கிறது.
தமிழினத்திற்கு உள்ள ஒரே சாபக்கேடு இந்த சாதி..இதை மட்டும் விட்டுவிட்டு நாம் வெளியே வந்துவிட்டோம் என்றால் நம் மாநிலம் ஒரு உன்னதமான நிலைக்கு வந்துவிடும் என்பதில் சிறு ஐயமுமில்லை
இந்தியாவிலே எம்மாநிலத்தில் சாதி வெறி குறைவு என கேட்டால் வெளிநாட்டு அறிஞர்கள் சொல்வார்கள் "தமிழ்நாடு" தான்
இம்மண்ணில் சாதி வெறி குறைவென அவர்கள் நினைத்து கொண்டிருக்கும் வேளையிலே 2016லும் தமிழன் சாதி சண்டை போட்டு கொண்டிருக்கிறான் என்பது ஒரு கேவலமான கீழ்த்தனமான விடயமாகும்.
கண்ணதாசன் தன் கவிதை ஒன்றில் மிக அழகாக கூறுவார்,
"சுடுகாட்டு எலும்புதனை
சோதித்து பார்த்ததிலே
வடநாட்டு எலும்பு என வந்த
எலும்பு இல்லையடி - தென்னாட்டு எலும்பு என்று தெரிந்து எலும்பும் இல்லையடி - எந்நாட்டு எலும்பென்றும் எழுதி வைக்கவில்லையடி"
இறந்துபோன பின்பு வடநாட்டு எலும்பென்ன,தென்னாட்டு எலும்பென்ன என நாம் பேசிக்கொண்டிருக்கும் வேளையிலே வடநாடென்ன தென்னாடென்ன
நாங்கள் தமிழ்நாட்டிற்கு உள்ளாகவே ஒற்றுமையாக இருக்கமாட்டோம் என ஒரு சாதி கூட்டம் கிளம்பி இருக்கிறது
அன்றைக்கே ஒரு தமிழன் பாடினான்,
"பறச்சியாவதேதடா பணத்தியாவதேதடா
இறைச்சி தோலெலும்பிலும்
இலக்கமிட்டிருக்குதோ.?"
விளக்கம் :
பறச்சியென்ன பணத்தியென்ன
தோலிலும் எலும்பிலும்
சதையிலும் இவரிவரென
ஏதேனும் அடையாளம்
உள்ளதா என்ன.??
இந்த சாதி என நம்மில் யாருக்கும் எவ்வித அடையாளமும் குறிப்பிடவில்லை,நாமெல்லாம் மனிதர்கள் அதிலும் குறிப்பாக
நாமெல்லாம் தமிழர்கள்.
இப்பெருமை வாய்ந்த
மண்ணில் பிறப்பதற்கு நாம் யாவரும் கொடுத்துவைத்து இருக்கவேண்டும்.
இம்மண்ணில் பிறந்த தமிழன்
யாரும் சாதி சண்டையிட கூடாது
இந்த சாதிய வெறியால் நாம் ஏதேனும் பலனடைந்து இருந்தாலும் கூட பரவாயில்லை, இதனால் தமிழினம் இழந்தவைகளே அதிகம்.
இன்றைக்கும் எல்லா சாதி சங்கங்களுக்கும் சென்றால் வாசலிலேயே நாங்கள் வீரமான சாதி,பயங்கரமான சாதி,ஆண்ட சாதி என அருவாலோட காட்சியமைக்கபட்ட
வசனங்கள் காணப்படும்.
ஈழத்திலே நமது உறவுகள் சிதைக்கபட்டபோது நமது சாதியும்,வீரமும் என்ன செய்ய முடிந்தது.
இதோ இப்போது கருநாடக இனவெறியர்கள் தமிழர்களையும் அவர்கள் உடமைகளையும் தாக்குகிறார்களே ஏன் இன்னும் உங்கள் சாதி வெறி கொதிக்கவில்லை..
ஒருவேளை அதில் உங்கள் சாதிக்காரன் இன்னும் பாதிக்கபடாததனால் தானோ.??
ஆகவே என் கோரிக்கை எல்லாம்
ஒன்றே ஒன்றுதான்..
உங்கள் சாதி,மதங்களை ஓரமாக வைத்துவிட்டு தமிழன் என்கின்ற
ஓரே கோட்டில் நாம் இணைய வேண்டும்
தமிழ்நாட்டில் எல்லையில் இருந்து
18 கல் தொலைவில் ஒரு தீவிலே நமது தமிழன்னை சாய்ந்து படுத்துகொண்டிருக்கிறாள்
நம் எதிரிகளின் காலடியில்
அவள் வீழ்ந்திருக்கிறாள்,அவள் உடல் முழுவதும் குருதி இழந்தும் அவளின் உறுப்புகள் சிதைக்கப்பட்டிருக்கிறது.
அவளின் உடல் அவமதிப்பிற்கு உள்ளாகப்பட்டு அவளின் கைகளில் விலங்கு பூட்டப்பட்டுள்ளது..
இந்த 2016ஆம் ஆண்டிலும் எம் பிள்ளைகள் என்னை (தாய் தமிழ்நாட்டை) காக்க வருவார்கள் என அவள் ஏக்கத்தோடு அன்னார்ந்து பார்க்கையில் தமிழனோ சாதி,மதம்,சினிமா
ரசிகர் சண்டை போட்டு கொண்டிருக்கிறான்
அவளின் நம்பிக்கை இன்னும் தோயவில்லை,என்றேனும் ஓர்நாள் தமிழனெனும் ஒரே கோட்டில் யாவரும் நின்று
தாய் தமிழ்நாடோடு பிள்ளை நாடும் (தமிழ்நாடு + ஈழம்) சேர்ந்து ஒரே நாடாக இணைந்து அவளுக்கு பெருமை சேர்ப்போம் என காத்து
கொண்டிருக்கிறாள்
ஆகவே தமிழர்களே இது போன்ற வெறிகளை நாம் மறந்தால் தான் "தமிழன்" என்கின்ற ஒற்றை மனிதனாக அசாத்திய பலம் கொண்டு மாபெரும் இனமாக எழுந்து நிமிர்ந்து நிற்க முடியுயும்.
சாதியை மறப்போம்.!
மதத்தை மறப்போம்.!
தமிழனாக ஒன்றினைவோம்
#படித்ததில் பிடித்தது
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |