google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: கொஸ்லி கவிஞர் பத்மஸ்ரீ ஹல்தர் நாக்

Wednesday, March 30, 2016

கொஸ்லி கவிஞர் பத்மஸ்ரீ ஹல்தர் நாக்


மூன்றாம் வகுப்பில் பெயில். உள்ளூர் இனிப்புக் கடையில் பாத்திரம் கழுவும் வேலை. இப்படி வாழ்ந்த ஒருவர்.......
ஒருநாள் கவிஞர் ஆனார்
இன்று இந்தியாவின் முதல்குடிமகன் கைகளில் பத்மஸ்ரீ விருது வாங்கினார்
அவர்தான்...ஹல்தர் நாக்



1950-ல் ஒடிசாவின் பர்கார்ஹ் மாவட்டத்தில்  ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த ஹல்தார் ஹாக் ,  3 ஆம் வகுப்பு முடிப்பதற்கு முன்பே தன்னுடைய தந்தையை இழந்தார்.படிப்பைத் தொடரமுடியாத வறுமையின் கொடுமையால்  உள்ளூர் இனிப்புக் கடையில் ஒரு பாத்திரம் கழுவி வாழ்க்கையைத் துவங்னார்


பின்னர் 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஓர் உயர் நிலைப்பள்ளியில் 16 ஆண்டுகள் சமையல்காரராக வேலைசெய்தார் அதன்பின்னர் சிறிய பெட்டிக் கடையை துவக்கி அதில் பள்ளிக் குழந்தைகளுக்கான எழுதுபொருள்களையும், தின்பண்டங்களையும் விற்பனை செய்தார்

அங்குதான்  தனது முதல் கவிதையை எழுதத் தொடங்கி.....
‘பழைய ஆலமரம்’ எனப் பெயர் சூட்டப்பட்ட கவிதைத் தொகுப்பையும் 
1990- ல் வெளியிட்டார்

அவருடைய கவிதைக்கு கிடைத்த வரவேற்பும் வாழ்த்துகளும் அவரை இன்னும் தீவிரமாய் கவிதைகள் எழுதத் தூண்டின

ஒரியா இலக்கியத்தில் ஹல்தார் நாக்கின்  பங்களிப்பு மிகவும் அதிகம்.
 ஒடிசா மண்ணில் பிறந்த இவர் தன்னுடைய கொஸ்லி மொழியில் ஏராளாமான கவிதைகளையும் 20 காவியங்களையும் படைத்துள்ளார்

இவரது கவிதைகளை 5 பேர் பி.எச்.டி.ஆராய்ச்சி பட்டத்துக்கு  தேர்வு செய்துள்ளனர்.

மேலும் பிபிசி செய்தி நிறுவனம் இவரின் இலக்கிய வாழ்க்கை பற்றி ஆவண‌ப்படம் எடுத்திருக்கிறது.

சம்பல்பூர் பல்கலைக் கழகத்தின் பாடத்திட்டத்தில்  இவருடைய கவிதைத் தொகுதிகள் பாடமாக‌ சேர்க்கப்பட்டுள்ளன.

பகட்டான ஆடைகள் இன்றி எளிய வேட்டியும்  சட்டையுமே இவருடைய உடை. காலணிகளை அணிவது இல்லை
ஆனாலும்....



 இவர் ஒரு நாளைக்கு 4 அல்லது 5 நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று செல்லும் எல்லா இடமெல்லாம் சிறப்பிக்கப் படுகிறார்

ஒரியாவின் மிகப்பெரும் கவிஞர் கங்காதர மெஹருக்கு இணையாகப்
 பேசப்படும் ஹல்தர் நாக்கின் கவிதைகள்....

  அரசியல், சமூகம், அறிவியல் என பலதுறைகளை கருப்பொருளாகக் கொண்டவை ஆகும்

இப்பொழுது அவருடைய கவிதைகள் உலக அங்கீகாரம் பெற்றவைகளாக அணிவகுத்து நிற்கின்றன.


உண்மையில்.....
விருதுகளுக்காக பலர் அலையும்போது இந்தியாவின் உயர் விருதான பத்மஸ்ரீ தேசிய விருதே  கொஸ்லி கவிஞர் பத்மஸ்ரீ ஹல்தர் நாக்-கை தேடி வந்துள்ளது 
இவரால் பத்மஸ்ரீ விருதுக்கு தான்  பெருமை  

விரைவில்...இவரது கவிதைகளை தமிழாக்கத்தில் கவிதை வானத்தில் காண்போம் 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1