google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: மநகூ எப்படி கேநகூ ஆனது? சிரிப்பு சிறுகதை

Sunday, March 27, 2016

மநகூ எப்படி கேநகூ ஆனது? சிரிப்பு சிறுகதை


மநகூ எப்படி கேனகூ ஆகியது என்கிற கதை இது...,...

பெயர் மாற்றியல் பேரறிஞர் டாக்டர் மனோபாலாவின் வீட்டு வாசலில் நம் குருமாவும் அண்ணன் சைக்கோவும்
அழைப்பு வந்ததும் இருவரும் உள்ளே செல்கின்றனர். 
உள்ளே டாக்டர் மனோபாலா அமர்ந்து இருக்க இருவரும் எதிரே அமர்கின்றனர்!

மனோபாலா : வாங்க தம்பியலா! உங்க பேர் என்ன?

குருமா: அண்ணே, உங்க கிட்ட பேர் மாத்தினா எல்லாம் ஒர்க்கவுட் ஆகுமா?

மனோபாலா: என்ன தம்பி இப்புடி கேட்டு புட்டீய... இப்புடித்தான் போன மாசம் ஒருத்தன் வந்தான். அவன் பேரு கேசவன். அவனுக்கு அப்பா செத்துட்டான். தங்கச்சி ஓடிப்போச்சுது, தம்பி ரெண்டு கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போயிட்டான். இவனுக்கோ கால் இழுத்துகிச்சு. அப்ப தான் என்னை பார்க்க வந்தான். பேர் என்னடான்னு கேட்டேன். கேசவன்னு சொன்னான். என் கம்பியூட்டரை வச்சி கணக்கு பார்த்தேன். கேசவன் அதாவது தமிழ்ல சொன்னா கே 7. கேவுக்கு இங்கிலீஸ்ல நம்பர் 1. ஆக 7+1 = 8 . கெட்டசாதி நம்பர். அவனுக்கு 1 தான் ராசி. அதனால கேவுக்கு பக்கத்துல செவனுக்கு பதிலா நைன் போட்டேன். அதாவது கே நைன். இன்னும் தமிழ்ல தெளிவா சொல்ல போனா கேனயன்.
"கேனையன்" அப்படின்னு பேர் வச்ச அடுத்த நொடி அவன் காலை நீட்டி என்னை உதைச்சான். யாரைப்பார்த்துடா கேனையன்னு சொன்னேன்னு கேட்டான்.

சைக்கோ: ஓ மை காட்! பொறவு என்ன ஆச்சுது சாமீ? நல்லதுக்கே காலம் இல்லை சாமி!

மனோபாலா: இங்க தான் என்னை நீங்க புரிஞ்சுக்கனும். அவனோ கால் வெளங்காதவன். என்னை எப்படி காலை நீட்டி ஒதைக்க முடியும்? ஆக நான் அவனை கேனையனா மாத்தின பின்ன அவனுக்கு கால் வெளங்கிடுச்சு. அவன் தம்பி கொலை செஞ்ச 2 பேரும் படக்குன்னு எந்திரிச்சுட்டானுங்க. அதனால அவன் தம்பி ரிலீஸ் ஆகிட்டான். அவன் அம்மா வேற ஒருத்தன் கூட ஓடிப்போய்டுச்சு. அதனால அது மீண்டும் தன் வாழ்வை தொடங்கிடுச்சு.

குருமா: சரி சாமி, அந்த ஓடிப்போன தங்கச்சி என்ன ஆச்சுது?

மனோபாலா: ரொம்ப பொளக்காத, அது பேரு கவிதா இல்லை. பவிதா. அது ரிட்டர்ன் ஆகிடுச்சு. என்ன ஒன்னு வயித்துல புள்ளயோட வந்துச்சு. ஆக சாதாரண கேசவன் என்னால கேனையன் ஆனதுனால இத்தினி மாற்றமும் நடந்துச்சு. சரி இப்ப சொல்லுங்க..... யாருக்கு பேரை மாத்தனும்? இந்த கருப்பு துண்டு பையனுக்கா? தம்பி உன் பேர் என்ன சொன்ன சைக்கோவா? இந்த பேரோடவா இத்தினி நாள் இருந்த? உன் அப்பனாத்தாவுக்கு வெவஸ்தையே இல்லியா? இது சாத்தானோட பேரு. கூட்டினா 13 வருது. கழிச்சாலும் அதான் வருது.

குருமா: இல்லீங்க சாமி! அப்பனாத்தா வச்ச பேர் எல்லாம் நல்லாதான் இருந்துச்சு. இந்த கேனை தான் அப்பனாத்தாவை மதிக்காம தன் பேரை மாத்திகிடுச்சு.

சைக்கோ: எலேய்! மெசபடோமியா மண்டையா, நானாவது என் அப்பனாத்தா வச்ச பெயரை தான் மாத்தினேன், ஆனா நீனு உன் அப்பன் பெயரையே மாத்தினியே...

மனோபாலா: சரி தம்பி விடுங்க... இப்ப நான் யாருக்கு பேரை மாத்தனும்?

குருமா: சாமீ, நாங்க ஒரு நாலு பேரு சேர்ந்து ஒரு கம்பெனி ஆரம்பிச்சோம். அதுல ஒருத்தன் புது பார்ட்னரா வந்தான். அதனால ஏற்கனவே "மநகூ"ன்னு இருந்த கம்பேனி பேரை இப்போ மாத்தனும். வந்த ஆள் தான் எங்க கேப்டன் மாதிரி. அதனால கேப்டன் நல்லா இருக்க வேண்டி வச்ச கூட்டணி தான் இது. இதுக்கு என்ன பேர் வைக்கலாம்... அதை சொல்லுங்க.

மனோபாலா: அடடே, மநகூ ... அதாவது மனக்கூ, மனக்கு ... கணக்கு... பினக்கு... சரியில்லையேப்பா.. ஒரே சண்டையா இருந்திருக்குமே... சரி..... இது கேப்டன் நல்லா இருக்கனும்னு தானே... அதனால கேப்டன் நலக் கூட்டணி அதாவது கேநகூ.... ஆறும் மூணும், ஒன்னும் சேர்த்தா மொத்தம் பத்து. அதிலே கூடினா ஒன்னு வருது. ஆக "கேனக்கூ" .... இந்த பேர் எப்படி இருக்கு கம்பனிக்கு?

குருமா: ஆஹா சூப்பர் சாமி! ஆனா பாருங்க... இந்த கம்பனிக்கு கூவல் அதிகமா போடும் கும்பல் நான் தான் . அதனால என் பெயரை அந்த கேனக்கூவிலே சேர்க்க முடியுமான்னு பாருங்க சாமி!

மனோபாலா: ஆகா உன் பூர்வாசிரம பெயர் "தி"ல ஆரம்பிக்குது. அதுக்கு எண் 0. ஆக எந்த பாதிப்பும் இல்லை. அதனால அந்த கேனக்கூ வோட உன் பெயரில் முதல் எழுத்தை சேர்த்துக்கோப்பா. பாதகமே இல்லை.

உடனே குருமா அந்த பெயரை சேர்த்து சொல்லி சொல்லி பார்க்கின்றார். அது அவருக்கு அசூசையாக பட்டதால்...  

குருமா: சாமீ, எல்லாம் சரித்தான், ஆனா இந்த கம்பேனிக்கு மொதலாளி நம்ம சைக்கோ அண்ணன் தான் .. அதனால அவரு பேரும் வரும் படி பார்த்து செய்யுங்க.....

மனோபாலா: சரிய்யா ... அவரோட பூர்வாசிரம பெயர் என்ன வைக்கோ வா? சரி.... உன் பெயருக்கு அடுத்து வைக்கோ ன்னு சேர்த்து வச்சிக்க. இப்ப சேர்த்து சொல்லு பார்ப்போம்.

இருவரும் சேர்த்து சொல்கின்றனர்... குருமா முகத்தில் புன்னகை. தன் பெயரும் அதில் முதல் எழுத்து இருப்பதால், வைக்கோவுக்கு ஏக சந்தோஷம், வண்டிமை மீசை நெளிய நெளிய ஒரே சிரிப்பு முகத்தில். 

ஆனால் வாசலில் தேவுடு காத்த ரோம கிருஷ்ணனும், முத்தழகியும் மட்டும் ஒரே சோகம். இனி இந்த மானம் கெட்ட மனிதர்களோடு இருக்க கூடாது என கிளம்புகின்றனர்

குருமாவும், சைக்கோவும் தங்கள் கம்பனி பெயர் மாற்றத்தால் உள்ள பூரிப்போடு வெளியே வருகின்றனர். 

வாசலில் காத்து நிற்கும் கூட்டம் அந்த புதுப்பெயரான அதாவது கேனக்கூ மற்றும் திருமாவின் முதல் எழுத்து பின்னர் வைக்கோ என சேர்த்து சொல்லி கோஷம் எழுப்புகின்றது!

நன்றி...,,,,,அபிஅப்பா என்கிற தொல்காப்பியன் fb 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1