கன்ஹையா குமாரின் உரையிலிருந்து சில சிந்தனைத் துளிகள்......
“ராணுவ வீரர்களுக்காகவும், நமக்காகவும் உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகள் இந்த நாட்டிற்குள் தற்கொலை செய்து கொள்கிறார்களே...அந்த ராணுவ வீரர்களின் தந்தைகளான அந்த விவசாயிகள் குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? என் அப்பன்தான் சேற்றில் உழைக்கிறான், என் சகோதரன்தான் ராணுவத்தில் இணைந்து எல்லையிலும் உழைக்கிறான், உயிர் துறக்கிறான்... எங்கள் உறவுகள்தான் நாட்டிற்குள்ளும், எல்லையிலும் இறக்கிறார்கள்...”
இது இப்படி இருக்க....
பிராடு மல்லய்யா பற்றி..
எனக்கு இருக்கும் ஒரே கவலை, எரிபொருள் விலை இவ்வளவு குறைந்துள்ள நேரத்தில், கிங்ஃபிஷர் முடங்கி கிடப்பதுதான்...' என்கிறார் மல்லையா. அவருக்கு ஆயிரம் கோடிகளில் வாங்கிய கடனைக் செலுத்த வேண்டும் என்ற எந்த கவலையும் இல்லை, அதற்காக அவர் வருத்தப்படவும் இல்லை. அவர் எண்ணமெல்லாம், தன் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் வெற்றி மீது மட்டும்தான். ஆனால், இவரிடம் மென்மையாக நடந்து கொள்ளும் வங்கிகள்தான், ஏழை விவசாயிகளிடம் கடுமையாக நடந்து கொள்கின்றன.
தேசத்தின் பொருளாதாரத்தை சீரழிப்பவர்கள், தேசத் துரோகிகள் இல்லையா...? இவர்கள் மீது தேசத் துரோக வழக்கு பதிய போவது யார்...?
இவரது கேள்வி நியாயமானதுதானே?
இன்று மோடி ஆட்சியின் மோசடிகளை எதிர்க்கும் ஹீரோவாக உயர்ந்து நிற்கும்
இவரைப் போன்ற இளைஞர்களை ஆதரிப்போம்
நன்றி-vikadan E-magazine
நன்றி-vikadan E-magazine
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |