சமூக வலைதளங்களில் கூட அவ்வப்போது க விதைகள் முளைத்து...
சிந்தனைப் பூக்களாக சிரிப்பது உண்டு
எல்லோரும்
பாவங்களை கழுவி
அழுக்கானது
குளம்.....
இங்கே நல்லவர்கள்
யாரும் இல்லயா?
எல்லோரும் கடவுள் பாஷையான சமஸ்கிருதத்தைக் கத்துக்குங்க. ஆனா, யாரும் பூசை பண்ணுறோம்னு கருவறைக்குள்ளே நுழையக்கூடாது
எல்லாம்இழந்த பின்னாலும் - என்னுள்
எஞ்சிஇருந்தது தன்னம்பிக்கை
உனக்கும்ஒரு காலம்வரும்
உசுப்பிவிட்டது அந்நம்பிக்கை
நிலவில்
வடை சுடும்
பாட்டியே
அவ்வப்போது
வடையை வீசிடு
பூமியில்
சாலையோரம்
உறங்கும்
ஆதரவற்றோர்க்கு
நீயாவது மனமிறங்கி....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |