என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா...?
ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன் சொல்லிய ஒரு கேப்ஷன்தான் இது என்றாலும்....
தவறு செய்பவர்களை பார்த்து கேட்கக்கூடிய ஒருவித நக்கல் நையாண்டி வாக்கியம் ஆனது
முதலில் ஒரு தொலைக்காட்சி இதை ஒரு காமெடி ஷோ வாக வேடிக்கை காட்ட அந்த ஷோ பிரபலமானது அதனால் கோபம் கொண்ட லட்சுமி ராமகிருஷ்ணன் அந்த டி வி மீது வழக்கு தொடுத்த கதை அறிவோம்
பிறகு அந்த வாக்கியம் ஒரு பாடலாக மாறி மேலும் பிரபலமானது
இப்போது.....
தமிழ் நாட்டோட முதலமைச்சரையே கிண்டல் பண்ற அளவுக்கு வளர்ந்து நிக்குது.
தி.மு.க. வெளியிடும் தேர்தல் விளம்பரங்களில், ‘என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா’ என்பதுதான் ஹேஷ்டேக்
உண்மையில்....
ஒருவர் பேசிய ஒரு மொழியின் வார்த்தைகளை அவர் உரிமை கொண்டாடுவது எந்த வகையிலும் நியாயமில்லை
இது என்ன கவிதையா...? நாவலா...? காப்பி ரைட் உரிமை கொண்டாட என்று நமக்கு கேட்க தோன்றுகிறது
சொல்லப்போனால் இப்ப வரும் தமிழ் சினிமா படங்களே வேறு மொழியிலிருந்து சுட்டுத்தான் காட்டுகிறான்க
இதற்காக இந்த அம்மா ஆதங்கம் கொள்வது.....
அவர்களைப் பார்த்தும் இப்படித்தான் கேட்க தோன்றுகிறது
‘என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா’
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |