google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: சகாயம் மக்களுக்கு சகாயம் செய்வாரா.? ட்விட்டர்கள் பார்வையில்..

Monday, January 4, 2016

சகாயம் மக்களுக்கு சகாயம் செய்வாரா.? ட்விட்டர்கள் பார்வையில்..


தமிழகத்தில் அதிமு,திமுக இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்து அதிருப்தியில் உள்ள மக்கள் அரசியல்வாதிகள் இல்லாத நேர்மையான சகாயம் போன்ற அதிகாரிகள் அரசியலுக்கு வரவேண்டும் என்று கோரிக்கை எழுப்புகிறார்கள் 


சமுக வலைதளங்களில் இருந்த இக்கோரிக்கை இப்போது மாநாடு,பேரணி என்று வலுத்துள்ளது 
ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் அரசியலுக்கு வந்து முதல்வராக வேண்டும் என்ற கோரிக்கை முதலில் சென்னையில் சிறு பேரணியாக ஆரம்பித்து....
நேற்று மதுரையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு நடத்திய சகாயம் 2016 என்ற பெயரிலான இளைஞர் எழுச்சி மாநாடு அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளது


ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் அவர்கள் கோ-ஆப்டெக்ஸ் அதிகாரியாக அதீத வளர்ச்சியும் லாபமும் காட்டிய ஆளுமை மற்றும் மதுரையில் மிகப் பெரிய குவாரி ஊழல்களை அம்பலப்படுத்திய துணிவு போன்ற சீரிய செயல்பாடுகள் 
நடிகர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கும் தமிழ்நாட்டு இளைஞர்களையும்அவரது பக்கம் ஈர்த்துள்ளது

ஆனாலோ இதுவரை ‘லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து’  சகாயத்திடமிருந்து எந்தவித சகாயமான அறிவிக்கைகளும் வரவில்லை இனியும் வருமா என்றும் தெரியவில்லை 
 அரசியலுக்கு வந்து சகாயம் மக்களுக்கு சகாயம் செய்வாரா...? 
அப்படியே அரசியலுக்கு வந்தாலும் வென்று ஆட்சியை பிடிப்பாரா...?

ட்விட்டர்கள் பார்வையில்.........


உளறுவாயர்(Blabberer)@Ularuvaayan 
டீம்ல பெஸ்ட் டெவலப்பர் ஒருத்தன் இருப்பான். அவன் ஊக்குவிக்கறேன்னு சொல்லி, ப்ராஜக்ட் மேனேஜரா ஆக்கிவிட்டிருவோம்! #சகாயம் முதல்வராக கோஷங்கள்

ரைட்டர் ஒராங்குடான்@tamizhanlink
நம்ம கிட்ட ஒரு காமராஜர் இல்ல ஒரு சகாயம் இல்லங்குறதில்ல பிரச்சன நம்மள்ல யாரும் காமராஜராவோ சகாயமாவோ ஆக விருப்புறதில்லங்குறதே பிரச்சன

செல்வா @joe_selva1 
சகாயம் அரசியலுக்கு வரனும் கூப்டுறாவங்க எல்லாம் இந்த குருப் தான் அவர் வந்து நின்னாலும் எம்எல்ஏ மட்டும் தான்ஆகமுடியும்

வருண்@BentleyVarun 
கேப்டன், தனக்கு முதல்வர் பதவியே வேண்டாம் என்றும், திரு. சகாயம் அவர்களை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தினால் தேர்தலில் தனித்தே நிற்கலாம்..

பிரகாஷ்@PrakashMahadev 
சகாயம் அவர்களுக்கு ஆதரவாக 50000 பேர் பேரணினு சொல்லிட்டு 50 பேர் தான் கலந்துகிட்டாங்கனு டிவில கிழிக்கிறான் .#தட் குருநாதா -இப்ப எறிடா மொமண்ட்

L R JAGADHEESAN@lrjaggu 
ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று கோரும் அவரது சினிமா ரசிகனுக்கும், சகாயம் முதல்வராகவேண்டும் என்று..

Yoda @iamVariable 
ஊர்ல ஏரிய கவுன்சிலர் பேர் கூட தெரியாது,லீவுனாலும் ஓட்டு போட சென்னைல இருந்து ஊருக்கு வரமாட்டேன்,ஆனா எனக்கு சகாயம் தொபக்கடீர்ன்னு CM ஆகிடனும்

சிக்கல்காரன் @ThowfiqS
பாவம் சகாயம். அவருண்டு வேலையுண்டுனு இருக்காரு அவரை ஏண்டா குடையுறீங்க? ஏன் உங்க அப்பா நேர்மையானவர் இல்லையா அவரை நிக்க சொல்றது?

போண்டா குமாரு @indra_siva 
இவனுகள நம்பி சகாயம் அரசியலுக்கு வந்தா, ஓட்டு போட வேண்டிய அன்னிக்கு டிபில மை வெச்சு டிவிட்டர்ல அப்டேட் பண்ணிட்டு இருப்பானுக போல...

Amala Selva @amalaselva89 
திமுக அரசை விமர்சித்ததை போல் அதிமுக அரசையும் சகாயம் விமர்சிக்கட்டும்..... அப்போ ஒத்துக்கலாம் அவர் நேர்மையை.... தைரியத்தை... 

நாகசோதி நாகமணி @nagajothin 
சகாயம் சிஎம் ஆகணும் அப்படின்னு ஒரு கூட்டம் கிளம்பிருக்கு...!! அந்த மனுஷன் ஏண்டா ராத்திரி 12 மணிக்கு சுடுகாட்டுக்கு போகணும்....

Guru @g_for_Guru 
ஞாநி-ய இழுத்துவிட்டு அவருக்கு டெபாசிட் கூட கிடைக்காம போனதெல்லாம் சகாயம் கண்ணுமுன்னாடி வந்து போகுமா இல்லையா..

புத்திகாலி @Tottodaing 
சகாயம் நெர்மையா இருக்கறது புடிக்காத தீயசக்திகள் தான் அவருக்கு முதல்வர் ஆசை காட்டுது போல.

Maheswar Natarajan @mahesstar 
ஏட்டுசுரைக்கா கறிக்கு உதவாது சகாயம்,ட்.ராமசாமி,உதயகுமார் போன்றோர்களால்அரசியலில் வெற்றி பெற முடியாது.காமராசயே தோற்கவைத்தவர்கள் தான்நம் மக்கள்

 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1