பரிதி.முத்துராசன், கவிதை வானம் என்ற பெயரில் பிளாக் எழுதி வரும் எனக்கும் விருது வழங்குகிறார்கள் என்ற போது...
அடடா....என்று மட்டுமே சொல்லத் தோன்றுகிறது
கவிமுகில் அறக்கட்டளை மற்றும் விழிகள் பதிப்பகம் இவர்களுடன் இணைந்து புதுச்சேரி இணையதள படைப்பாளிகள் பேரவை நடத்தும் கவிக்கோ ஈரோடு தமிழன்பன் பிறந்தநாள்-நூல் வெளியீட்டு விழாவில்....
பேராசிரியர் அன்பழகன்,ஆசிரியர் கி.வீரமணி,நீதியரசர் கே.சந்துரு மற்றும் பல கவிஞர் பெருமக்கள் கபிலன்,பழனிபாரதி....போன்றோர்கள் கலந்து கொள்ளும் விழாவில் நிறைய தமிழ் இணையதள படைப்பாளிகளுக்கு தமிழன்பன் விருது வழங்கப்படுகிறது
அதில் சிந்தனைவாதி என்ற பெயரில் ட்விட்டரிலும் பேஸ்புக்-கிலும் பல குறுஞ்செய்திகள் படைக்கும் கவிதைவானம் பதிவர் பரிதி.முத்துராசனாகிய எனக்கும் பாராட்டு விருது வழங்கப்படுகிறது
இது எனக்கு கிடைத்த பெருமை என்பதைவிட....
பரிதி.முத்துராசன் கவிதை வானம் என்ற பிளாக் மூலம் பதிவுலகில் என்னையும் ஒரு பதிவராக ஏற்றுக் கொண்டு ஆதரவு தந்து கொண்டிருக்கும்அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் கிடைத்த பெருமையாக நினைக்கிறேன் உங்கள் பொற்பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்
என் ட்விட்டர் நண்பர்களே! இதனால் அறிவிப்பது..
இதோ உங்கள் பரிதி.முத்துராசன் என்ற சிந்தனைவாதி
விருதுவாங்கப் போகிறார் pic.twitter.com/HVIA2YBWlc
— சிந்தனைவாதி (@PARITHITAMIL) October 14, 2015
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |