google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: வந்து பாா் வாட்ஸ்அப் வந்துபார்

Monday, October 12, 2015

வந்து பாா் வாட்ஸ்அப் வந்துபார்


சமுக வலைத்தளமான வாட்ஸ்அப்-பில் உலா வரும் வாட்ஸ்அப் பற்றியே ஒரு வேடிக்கை கவிதை 

இதோ இந்தக் கவிதையை கவிப்பேரரசு வைரமுத்து குரலில் படிக்கவும் 



                                 வந்து பாா் வாட்ஸ்அப் வந்துபார்

வந்து பாா் வாட்ஸ்அப் வந்துபார் 
உன் கட்டை விரல்களின் 
அா்த்தம் விளங்கும்... 

உன்னைச் சுற்றி எப்போதும் 
நோடிபிகேஷன்  சத்தம் ஒலிக்கும் 

ராத்திரியின்  நீளம், அகலம் விளங்கும்
உனக்கும் கவிதை  வரும்
கண்ணுக்கடியில்  கருவளையம் கட்டாயம் வரும்

குரூப்பில் சேர்த்துவிடுபவன் 
முதலில் தெய்வமாகவும், 
நாட்கள் செல்ல செல்ல 
கோமாளியாகவும் தொிவான். 

செல்ஃபி போட்டே நண்பன் கொல்வான்…
பன்னி குட்டியை
படம் எடுத்து போட்டோகிராபி என்பான்


போனில் சார்ஜ் மற்றும் பேலன்ஸ் நிக்காது 

அட்மின் அடிக்கடி கசாப்பு கடை ஆடாகி 
குரூப்பினாிடம் சிக்கி சின்னா பின்னாமாவான் 

ஸ்மைலி மட்டுமே போடுபவன் மேல் 
கொலைவெறி தோன்றும்  

நம்மை கலாய்க்கும்போது மட்டும்
எங்கிருந்து தான் எல்லாம் 
ஆன்லைனில் வருவாா்கள் என விளங்காது

3G சிக்னல் தெய்வமாய் தெரியும்
ஓசி Wi-Fi மேல் ஆசை பிறக்கும்
போன் அடிக்கடி Hang ஆகி கடுப்பேற்றும்

History டெலிட் என்பது சிலருக்கு மகிழ்ச்சியைத்தரும்.
Profile Photoவையையும், ஸ்டேட்டஸ்ஸையும் 
டெய்லி மாற்றாவிட்டால் மண்டைவெடிக்கும் 

இருக்கும் எல்லா குரூப்பிலும் 
ஒரே மெசேஜை பார்வேர்ட் செய்து வெறுப்பேற்ற தோன்றும்

எப்போதும் தனிமையை உணர்ந்தாலும் நண்பர்கள்
குரூப்பில் மட்டுமே வந்து கும்மி அடிப்பார்கள் 


தனியாய் சிரிப்பதே பழகிபோகும்

குரூப்புக்கு ஒரு உத்தமன் 
எப்போதும் அட்வைஸ் மட்டுமே செய்வான்… 

உன் குடும்பத்தில் இருந்து கொண்டே 
அனைவருக்கும் அந்நியமாவாய்

பணத்தையும், சுயநலத்தையும் பொிதாய் பேணி வாழும் 
இந்த கலியுகத்தில், 
மனிதன் மனிதனாக இருப்பதற்கும், 
கருத்துக்களை பகிா்ந்து, இளைப்பாறுவதற்கும்
ஒரு சிறிய பிளாட்பாா்ம் அன்றி வேறொன்றுமில்லை... 

 "வந்து பாா் வாட்ஸ்அப் வந்து பாா்"  







இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1