கருவறையில்
இருந்தவரை.......
நிழலைத் தேடும்
நிலைமை வந்ததில்லை
அதுபோலவே
அன்னையின் மடியில்
நிழல் தேடும் தேவை இல்லை
நிழல் தரும் மரமாக
தந்தை இருந்ததினால்
அவர் இருந்தவரை
நிழல் தேடும் அவசியம் இல்லை
ஆசிரியர்கள்
நிழல் தரும் பாதையை
படம் காட்டினார்கள்
பயணம் தொடரவில்லை
ஆன்மீகத்தில் தேடிய நிழல்
ஆபத்தாக தெரிந்தது
உறவினர்களிடம்
தேடிய நிழல்
உதவிக்கு வரவில்லை
காதலியிடம்
தேடிய நிழல்
கானல்நீராய் போனது
மனைவியிடம் நிழல் தேட
மதி மயக்கம் கொள்கிறது
பிள்ளைகளிடம் நிழல் தேட
பெருந்தன்மை ஒப்பவில்லை
கவிதைகளில்
தேடிய நிழல்
கருத்து மோதலால்
சிதைந்துப் போனது
இந்த
நிழல் தேடும் படலம்
எதுவரை தொடருமோ?
கல்லறையிலாவது
எனக்கு ஒரு நிழல் கிடைக்குமோ?
..............................பரிதி.முத்துராசன்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |