சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் 80-வது பிறந்தநாள் விழா 18/10/2015 அன்று சென்னையில் உள்ள கவிக்கோ அரங்கில் சிறப்பாக நடந்தது
திருவாளர்கள் பேராசிரியர் அன்பழகன்,ஆசிரியர் கி.வீரமணி,நீதிநாயகம் சந்துரு,சிலம்பொலி செல்லப்பன், தோழர் மகேந்திரன்,கவிஞர் இன்குலாப் போன்ற பெருந்தகைகள் சூழ்ந்திருக்க....
பல கவிஞர் பெருமக்கள் வாழ்த்துக்களுடன் நடைபெற்ற இவ்விழாவில் ஈரோடு தமிழன்பனின் திசை கடக்கும் சிறகுகள் என்ற நூல் வெளியீடும் பல்வேறு தமிழ் இலக்கிய வல்லுனர்களுக்கு தமிழன்பன் விருதும் வழங்கப்பட்டது
விழாவை கவிஞர் சந்தோஷ் குமார் தொகுத்து வழங்கிட திருவாளர் புதுச்சேரி அகன் அவர்கள் சிறப்பாக நடத்தினார் என்னைப் போன்ற பல இணையதள எழுத்தாளர்களையும் ஈரோடு தமிழன்பன் கரங்களால் விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்திய அவரது பெருந்தன்மையை பாராட்ட வார்த்தைகள் இல்லை
என்னை வலைதளங்களில் வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி....
இன்று தமிழன்பன் விருது பெற்ற உங்கள் சிந்தனைவாதி pic.twitter.com/Sl8Gj30YIY
— சிந்தனைவாதி (@PARITHITAMIL) October 18, 2015
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |