google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: ட்விட்டர்கள் கலாய்த்தல் காமெடி ( #JayaVerdict)

Monday, May 11, 2015

ட்விட்டர்கள் கலாய்த்தல் காமெடி ( #JayaVerdict)


நேற்று வரை ஜெயிலா? பெயிலா? என்று தமிழ்நாட்டை கதிகலங்க வைக்க காத்திருந்த ஜெ.சொத்து குவிப்பு வழக்கு பூகம்ப நிலநடுக்கம்  இன்று கோபாலபுரத்தில் மட்டும் கொஞ்சம் ஆட்டம் காட்டிவிட்டு காணாமல் போனது

ஆனாலும் நையாண்டிக்கு பேர்போன தமிழ் குறும் பதிவர்கள் (twitter) மட்டும் தங்கள் நகைச்சுவை நையாண்டியை தங்களது ட்விட்டில் வெளிப்படுத்தினர்




சால்ட்&பெப்பர் தளபதி@thalabathe 
ஆடு திருடுபோகல, ஆடு திருடுபோன மாதிரி கனவு கண்டேன் என்கிறார் 
நீதிபதி குமாரசாமி 

ஜெ சொத்துகுவிப்பு வழக்கு நாளை தீர்ப்பு-செய்தி
# சீக்கிரம் கொடுத்து தொலைங்கைய்யா 

இவியிங்க டார்ச்சர் தாங்கமுடில-கடவுள்

குட்டி@7da_kutty 
குன்கா 1100 பக்கம் நாக்கு தள்ள தள்ள தீர்ப்பு சொன்னாரு! ஆனா குமாரசாமி "ஒரு ஊத்தாப்பம் பார்சல்"ன்னுட்டு போயிட்டாரு!



நா.குமரேசன்@kumaresann45 
சாமி!! கண்ண துடைச்சிட்டு போய் லட்டு சாப்பிடு! அம்மாவ விட்டுட்டாங்க!!


ராஜ்மோகன்...@billumohan83 
நல்லவேளை சாமி தப்பித்தது இல்ல பால் குடம் எடுத்தவன் மொட்டை அடித்தவன் எல்லாம் சாமியை கழுவி கழுவி ஊற்றி இருப்பான்

           Ramesh@rnil45 ஆண்டவா என்னைய காப்பாத்து

தம்பியான்@k_for_krish 
ஹாஹா.. நா நினைச்ச மாதிரியே லெப்ட்ல இண்டிகேட்டர் போட்டு ரைட்ல திருப்பிட்டானுங்க.. கட்டபஞ்சாயத்து தீர்ப்பே நல்லாருக்கும்போல... இந்தியாடா.

Dr.எட்டு@8tttuu 
வருமானத்துக்கு உரிய சான்றுகளை ஜெயலலிதா சமர்ப்பித்ததால் விடுதலை- ஜெ. வக்கீல் #அட பதறுகளா இத 8 வருசத்துக்குமுன்னாடியே சமர்பிச்சிருக்கலாமே ?

Wolverine@Parithi_ 
ஜெவுக்கு பயந்து கால நக்குற,கால்ல விழுற ஆளுகளுக்கு மத்தியில தூக்கி அடிப்பேன்,குண்டக்க மண்டக்க திட்டிருவேனு சொன்ன கேப்டன்தான்டா உண்மையான ஆம்பள

Kishore Pk@KonguKish 
மாட்டாம தப்புப் பண்றது எப்படீன்னு தாத்தா கிட்டயும், 
மாட்டினா தப்பிக்கிறது எப்படின்னு ஆத்தா கிட்டயும் கத்துக்கணும்!

சி.பி.செந்தில்குமார்@senthilcp 
கொலைசெய்த சல்மான்கான் ஜாமீனில் ரிலீஸ் , 66 கோடி ரூபாய் சொத்து சேர்த்த ஜெ விடுதலை.இந்தியா ஒரு சுதந்திரமான நாடு என்பதை நிரூபித்துவிட்டது

                        சிந்தனைவாதி @PARITHITAMIL ஓம் அம்மாய நமக



சி.பி.செந்தில்குமார்@senthilcp 
சுப்ரமணியம் சாமி, குமார சாமி உள்பட எல்லா சாமியும் அம்மான்னா இனி ஆமாம் சாமி தான் போட்டு ஆகனும் போல # அம்மாடா




படித்துறை FORCE®@iampadithurai 
 இத்தனை பேர் சேர்ந்து சொம்பு தூக்கியும் சொம்பு நெளிஞ்சி போச்சே ஜிவாஜி



 

Rajan Radhamanalan@ZhaVinci 
கோயில்ல மணியாட்டறவனுக தான் பாவம்! ரெண்டு மூணு மாசமா நல்லா கல்லாக் கட்டிட்டு இருந்தானுக
சிந்தனைவாதி @PARITHITAMIL
150 முடிச்சுக்கள் அவிக்கப்பட்டது எப்படி? -கலைஞர்
# அட விடுங்க தலைவரே பணம் ஒரு பெரிய முடிச்சவிக்கி-னு தெரியாதா?
                                                             thanks-Senthil Kumar Devaraj




ராஜ்மோகன்...@billumohan83 
அதிமுகவை காப்பாற்றியது சாமி அல்ல 
குமாரசாமி என்னும் ஆசாமி!!


ஜானகிராமன்@saattooran 
காலேஜ் ஆபிஸில்..... பிரின்ஸபால் ஐயா, ஜட்ஜ் படிப்புக்கு ஒரு சீட் கொடுங்க...! எவ்வளவு டொனேஷன் வேணாலும் தரோம்..!


டுவிட்டர் அரசன்@thamizhinii 
அம்மா விடுதலைன்னு தீர்ப்பு சொல்லும் போதே இந்த மந்திரிங்க எல்லாம் உடனடியாக கோவில்களை விட்டு சட்டசபைக்கு போகனுன்னு சேர்த்து சொல்லியிருக்கலாம்

புதுவை குடிமகன் @iamkudimagan 
சல்மான் ரிலிஸ் ஆகிட்டாரு அம்மா ரிலிஸ் ஆகிட்டாங்க ஆனா உங்க வாலு மட்டும்... 

ஒரே தீர்ப்பு ஓகோன்னு வாழ்கை #குமாரசாமி

கைப்புள்ள@bojisen 
நாத்திகர்களே இப்போதாவது கடவுள் இருக்கிறார் என்பதை புரிந்துக்கொள்கிறீர்களா? அமைச்சர்களின் வழிபாடுகளுக்கு கடவுள் செவி சாய்த்ததை கண்டீர்களா...


ரிட்டன் ரவுடி @YassarArafath 
18 வருசத்துக்கு அப்பறம் அம்மாவுக்கே தீர்ப்பு வந்துருச்சு இந்த #திரிஷா_கல்யாணம் இதுக்கலாம் ஒரு முடிவே வராதா ..?


சிந்தனைவாதி @PARITHITAMIL 
#JayaVerdict @ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பு: ட்விட்டரில் உலக அளவில் முதலிடம் # த்தூ......தூதூ உலகளவில் காரி துப்பிட்டாயிங்களா





இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1