google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: உங்களுக்கு தெரியுமா? சில வேடிக்கையான உண்மைகள்

Wednesday, February 25, 2015

உங்களுக்கு தெரியுமா? சில வேடிக்கையான உண்மைகள்


இங்கே சில வேடிக்கையான,சுவாராஸ்யமான உண்மைகள் அவைகளில்  சில உங்களை கிச்சு கிச்சு மூட்டி சிரிக்க வைக்கலாம் சில  உங்களை ஆச்சரியம் பட வைக்கலாம் இன்னும் சில மொக்கையாகவும் இருக்கலாம் 

இவைகள் உங்களுக்கு தெரியுமா...?

 - உலோக பற்றாக்குறையால் இரண்டாம் உலகப்போர் காலத்தில் ஆஸ்கார் விருது மரக்கட்டையால் செய்து வழங்கப்பட்டது

-கீழ் ஆடை (pant) அணியாததால் டொனால்ட் டக் (Donald Duck) காமிக்ஸ் பின்லாந்தில் தடைசெய்யப்பட்டது


-உங்களுக்கு தெரியுமா..? பெண்கள் ஆண்களைவிட இருமடங்கு அதிக வேகத்தில் கண் அடிப்பார்கள்....ச்சே....கண் சிமிட்டுவார்கள் 

- எலிகளுக்கும் குதிரைகளுக்கும் வாந்தி வராது

- பன்றிகளால் வானத்தை நிமிர்ந்து பார்க்க முடியாது

- முதலையால் அதன் நாக்கை வெளியே நீட்ட முடியாது

- இறால் மீனின் இதயம் அதன் தலையில் உள்ளது

- நாம் தும்மும் போது நம் இதயம் a mili-second நின்றுவிடும்

-இரண்டு எலிகள் 18 மாதங்களில் விரைவாக இனப்பெருக்கம் செய்து ஒரு மில்லியன் சந்ததியினரை உருவாக்கிவிடும்

-ஒரு மணி நேரத்திற்கு மேல் நீங்கள் ஹெட்ஃபோன்அணிந்திருந்தால் உங்கள் காதில் பாக்டீரியாக்கள் 700 மடங்கு அதிகரிக்கும்.

- ரூபாய் நோட்டுகள் முழுக்க முழுக்க காகிதங்களால் செய்யப்படுவதில்லை அது பருத்தி நூலுடன் கலந்த மரக்கூழ் கலவை

- கிமு 2737-ல் ஒரு சீன மன்னரால் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டதே தேநீர்

- இன்றைய நமது ஜனநாயக அமைப்பு ஏதென்ஸ், கிரேக்கத்தில் 2 500 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது

- ஒரு மனிதரால் உணவு சாப்பிடாமல் ஒரு மாதம் உயிர் வாழலாம் ஆனால் தண்ணீர் (குடி தண்ணீர்) இல்லாமல் ஒரு வாரம் மட்டுமே

- இன்றும் மெக்ஸிகோ துரங்கோ பாலைவனத்தில் உள்ள "Zone of Silence." என்ற இடத்தில் எந்தவித ரேடியோ டிவி சிக்னலும் எடுக்காது

-ஒவ்வொரு மனிதனும் தினமும் 24 மணி நேரத்தில் அரை மணி நேரமாவது தனிமையை விரும்புவர்

- சம அளவுள்ள ஒரு குவளை சுடு நீரும் ஒரு குவளை குளிர் நீரும் எடை போட்டால் சுடு நீர் எடையே அதிகமாக இருக்கும்

- காற்று அழுத்தம் இல்லாத வானவெளியில் நீங்கள் செல்ல நேரிட்டால் நீங்கள் சாகும் முன் உங்கள் உடல் வெடித்து சிதறிவிடும்
- ஒருவகை (sloth bear) கரடிக்கு ஒருநாள் சாப்பிட்டால் 15 நாட்களுக்கு பசிக்காது 

- முயல்களுக்கு வேர்க்காது

- சுறாக்களுக்கு புற்றுநோய் வராது

- ஒருவகை (porpoise) டால்பின் கடல்வாழ் உயிரனமே மனிதனுக்கு அடுத்த அறிவாளியாகும்

- நாய்களுக்கு வண்ணங்கள் சரியாக தெரியாது ஆனாலும் மனிதர்களைவிட கண்பார்வை துல்லியமாக தெரியும்


- நத்தைகளுக்கு நாலு மூக்குகள் இருக்கும் (அய்யோ பாவம் ஜலதோஷம் வந்தால் கஷ்டம்தான்)

- கொரில்லா........ ஒரு நாளைக்கு பதினான்கு மணி நேரம் தூங்கும்

-ஆண் குதிரைக்கு 40 பற்களும் பெண் குதிரைக்கு 36 பற்களும் இருக்கும்

-நம் வயிற்றில் 2 வாரங்களுக்கு ஒருமுறை புதிய சவ்வு படலம் உருவாகி ஜீரனத்தோடு ஜீரணமாகும் இல்லையேல் நம் வயிரே காணாமல் போயிம்

- நம் கைகளில் ரேகைகள் இருப்பது போல் நாக்கிலும் ரேகைகள் உண்டு யாரும் நாக்கு ஜோசியம் பார்க்க ஆரம்பிச்சிடாதீங்க மக்கழே

- லியோனார்டோ டா வின்சி ஒரே நேரத்தில் ஒரு கையால் எழுதவும் ஒரு கையால் வரையவும் செய்வார் 

- உலகப் புகழ் பெற்ற லாஸ் வேகாஸ் சூதாட்ட விடுதிகளில் நேரம் காட்டும் எந்த விதமான கடிகாரங்களும் இருக்காது

- கத்தரிக்கோலை கண்டுபிடித்தது ஒரு தையல்காரர் அல்ல ஒரு ஓவியர்...........லியோனார்டோ டாவின்சி

- தேள் மீது ஒரு சிறிதளவு மதுவைக் கொட்டினால் போதும் அது உடனே தலை கிறுகிறுத்து செத்துப்போகும்

- "queue" என்ற ஆங்கில வார்த்தையில் கடைசி நாலு எழுத்துக்களை நீக்கினாலும் q என்ற அர்த்தம் மாறாது

- நம் இதயம் ஒரு நாளில் 100,000 க்கும் மேற்பட்ட முறை சாதாரணமாக துடிக்கும் (காதலர்கள் இதயம் இதில் கணக்கிடப்பட வில்லை)

-பெண்கள் ஆண்களைவிட இருமடங்கு அதிக வேகத்தில் கண் அடிப்பார்கள்....ச்சே....கண் சிமிட்டுவார்கள் 
-பல லட்சம் மனிதர்களை கொன்று குவித்த அடால்ஃப் ஹிட்லர் சாப்பாட்டில் 100% சைவம்

- தேன் மட்டுமே எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப்போகாது எகிப்திய கல்லறைகளில் கண்டெடுக்கப்பட்ட தேன் சாப்பிடும் பருவத்தில்

- ஒட்டகங்களுக்கு மணல் காற்றிலிருந்து கண்களை பாதுகாத்துக்கொள்ள மூன்று கண் இமைகள் இருக்கும்

-கழுதைகளால் மட்டுமே ஒரே நேரத்தில் அதன் நான்கு கால்களையும் அதன் கண்களால் காணமுடியும்
- எந்த ஒரு கடவுள் பெயரிலும் அழைக்கப்படாத கிரகம் ஓன்று உண்டென்றால் அது......பூமி (Earth)

-மனிதன் பிறக்கும் போது 300 எலும்புகளுடன் பிறக்கிறான் ஆனால் இறக்கும் போது 206 எலும்புகளுடன் இறக்கிறான்

- டால்பின்கள் தூங்கும் போது தங்கள் ஒரு கண்ணை திறந்தே வைத்திருக்கும்

- சாதாரனமாக ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 10 முறை சிரிப்பார்கள் (அதுக்கும் மேல சிரித்துக்கொண்டிருந்தால் கவனிக்கப்படவேண்டும்)

- பன்றிகள் மட்டுமே 30 நிமிடங்களுக்கும் மேல்... அதுக்கும் மேல.....உடலுறவு கொள்ளும்
-சிங்கத்தால் மட்டுமே ஒரே நாளில் 50 தடவைக்கும் மேல்..... - - - உடலுறவு கொள்ளும் வல்லமை கொண்டது

- வண்ணத்துப்பூச்சிகள் மட்டுமே தங்கள் கால்களால் தொட்டு உணவின் சுவையை அறிந்துகொள்ளும்

- நமது உடம்பில் உள்ள தசைகளில் ரொம்ப வலுவானது........நாக்கு

- நட்சத்திர மீன்களுக்கு (star fish) மூளை கிடையாது (நான் நம்ம சினிமா star-களை சொல்லவில்லை)

- மனிதர்களும் டால்பின்களும் மட்டுமே சந்தோசத்திற்காக உடலுறவு வைத்துக்கொள்ளும் உயிரினங்கள் ஆகும்


இவைகள் எனக்கும் இப்போதுதான் தெரியும் 
தெரிந்த உண்மைகளை உங்களிடம் பகிர்ந்துகொண்டேன் 
இவைகளில் ஏதேனும் தவறுகள் இருந்தால் பொறுத்துக்கொள்ளவும்




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1