google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: கிறுக்கனின் பிதற்றல்கள்

Sunday, November 30, 2014

கிறுக்கனின் பிதற்றல்கள்



சாமி...பிச்சை போடுங்கையா
கேட்டவன் தட்டில்
ஒரு ருபாய் போட்டு விட்டு
உள்ளே போய்........
சாமி... காப்பாற்று அப்பா
கேட்காதவன் உண்டியலில்
பத்து ருபாய் போட்டேன்

************************************

நாட்காட்டியில்
தேதிகள் கிழிப்பது போல்....
டாஸ்மாக் கடை சரக்குகள்
நம் வாழ்க்கையை கிழிக்கின்றன

**************************************

ஆடு......எல்லோருக்கும் தெரிய
பாடு.......எல்லோருக்கும் கேட்க
காதலி....யாருக்கும் தெரியாமல்

****************************************

நம் வாழ்க்கை
நமக்கே வெறுப்பாக தெரியும்
மற்றவர்களுக்கு.........
பொறாமையாக தெரியும்

*******************************************

 சிறையில் குற்றவாளிகள் சாப்பிடும் சத்தான உணவு.....
வெளியே நிறைய நிரபராதிகளுக்கு கிடைப்பதில்லை

*********************************************

எல்லோரும் சுமை மூட்டைகளுடன்தான் வருகிறார்கள்
நீ உன் சுமையை அவர்கள் மீது இறக்கி வைக்காதே

******************************************************************
நண்பர்களிடம்
நான் அன்பைத்தான் விதைக்கிறேன்
அவைகள் துரோகமாக முளைக்கின்றன

**********************************************
சரி....
இவ்வளவு நேரம் படித்தீர்களே 
அத்தனையையும் மறந்துவிடுங்கள் 
ஏன்? என்றால்............



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1