google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: கோவை நோக்கி ஒரு CAT பயணம்

Wednesday, November 19, 2014

கோவை நோக்கி ஒரு CAT பயணம்

ஒவ்வொருத்தரு லண்டன்,அமெரிக்கா,ஜப்பான்...பயணம் போயிட்டு கமுக்கமா இருக்கிறாங்க...நீ இங்க இருக்கிற கோயம்பத்தூருக்கு சென்னையில இருந்து போயிட்டு வந்து ஒரு பயணக் கட்டுரையா...? என்று நீங்கள் நினைக்கலாம்

இதைப் படித்துவிட்டு "இந்த பிளாக்கர்களுக்கு ஒன்னுக்கு போனாலும் அதையும் ஒரு பதிவு போடலைனா தூங்கமாட்டாங்கய்யா" என்று நீங்க நினைக்கலாம்
என் மகன் AERO இன்ஜினியர் படிப்பு முடித்ததும் எங்கும் வேலைக்கு போகிற மாதிரி தெரியல...கிடைச்சாத்தானே போக.... சரி நாமலும் ரொம்ப அவசரப் படக்கூடாது மோடி இப்பத்தானே ஆட்சிக்கு வந்திருக்கிறாரு நிறைய ஏர்-போர்ட் திறக்கப் போறேன்னு வேற சொல்லியிருக்காரு அதற்குள்ள MBA படின்னு சொன்னேன் அவனும் நான் IIM-லத்தான் படிப்பேன்னு அடம்பிடிக்க.....

அதற்கான நுழைவுத் தேர்வு CAT பரிஷைக்கு கோவை போன பயணம்தான் இந்தக் கட்டுரை.......கோவை நோக்கி ஒரு CAT பயணம்

கொஞ்ச நாளுக்கு முன்னாடி ஒரு நாள்....
"அப்பா ...எனக்கு கோயம்பத்தூர்ல CAT EXAM. எழுத அட்மிட் கார்ட் வந்திருக்கு  நான் மட்டும் போய் எழுதிட்டு வருகிறேன்" என்றான் நானும் சரிப்பா என்றேன்

அப்புறம் அட்மிட்-கார்ட்டை படிச்சுப்பார்த்தால் காலை 7.30 மணிக்கு உள்ளே போய்விட வேண்டுமாம் அட்மிட் கார்ட்-ஐ.டி கார்ட் தவிர வேறு எதுவும் உள்ளே கொண்டுப் போகக்கூடாதாம்

என் மனைவியோ......கோயம்பத்தூரில் நம்ம சொந்தக்காரங்க யாரு இருக்கா..? இவன் லாட்ஜில் கிடந்தது தூங்கினா என்ன ஆவது...? என்று கவலை பட.....

எனக்கும் அந்தக் கவலையைவிட  துணைக்கு நான் மட்டும் போனால் என்னை யார் எழுப்பிவிடுவது? என்ற பெரிய கவலை தொற்றிக்கொண்டது

அதனால் நான்-மனைவி-மகன் மூவரும் குடும்பத்துடன் CAT-க்காக பயணம்  போக தீர்மானித்து கோயம்பத்தூர் எக்ஸ்பிரஸில் மூன்று டிக்கெட் ஆன்லைனில் பதிவு செய்தாகிவிட்டது 

இப்ப புதுக் கவலை வீட்டில் நாங்கள் செல்லமாக வளர்க்கும் பிங்கா CAT-டை யார் கவனிப்பது...? என்று அதற்கும் பக்கத்து வீட்டில் சொல்லி ஏற்பாடு செய்துவிடலாம்

இவை எல்லாவற்றையும்விட என் மகன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க நான் என்ன சின்ன குழந்தையா? என்னை ஏன் இப்படி பாடாய் படுத்துறீங்க...? இங்க என்ன TOUR-ஆப் போகிறோம்..?  என்று சீறி விழ..... 

அட...இதுவும் நல்லாயிருக்கே அப்படியே எல்லோரும் ஊட்டிக்கும் போயிட்டு சென்னை வந்திடலாம் என்று முடிவு செய்து........

15-ஆம் தேதி மதியம் 2.30 மணிக்கு சென்னை-கோயம்பத்தூர் எக்ஸ்பிரஸில் II A/C CHAIR CAR-ரில் பயணம் இரவு 10 மணிக்கு மேல்தான் ரயில் கோவையை அடைந்தது ரயிலில் ரொம்ப குளிர் எனக்கும் மனைவிக்கும் ஜலதோஷம் பிடித்துக்கொள்ள......
ரயில் நிலையம் எதிரில் உள்ள கீதா ஹால் ரோட்டில் ஒரு தங்கும் விடுதியில் இரவு தங்கிவிட்டு அதிகாலையில்  ஒரு காப்பி மட்டும் பருகிவிட்டு ஒரு கால்-டாக்சி பிடித்து அங்கிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள  கோவில்பாளையம்  IIE (INFO) போய் சேர   மணி 7.15 ஆனது டாக்ஸியை அனுப்பிவிட்டு மகன் CAT எழுத 7.30-க்கு வரிசையில் நின்று உள்ளே போனான்

12.30-க்குத்தான் பரிட்ஷை முடியுமாம் அதுவரை என்ன செய்ய......? பசி வேறு வயிற்றைக் கிள்ள இருவரும்  2 கி.மீ தூரமுள்ள மெயின் ரோட்டுக்கு நடந்துவந்து ஒரு சின்ன ஓட்டலில் கிடைத்ததை விழுங்கிவிட்டு மீண்டும் காலேஜ் வாசலில் காத்துகிடக்க......

அய்யோ....பாவம் எங்களை மாதிரி ஏகப்பட்ட அப்பாக்கள் அம்மாக்கள் கூட்டங்க்கூட்டமாக அங்கே காத்துகிடந்தனர் ஜலதோஷம் என் மனைவிக்கு இருமலாக மாறி லொக் லொக் என்று அங்கே இருப்பவர்களை பயம் காட்ட.......ஊட்டி டூர் தவிர்க்கப்பட்டது 

மீண்டும் ஒரு கால் டாக்சியை வரவழைத்து தயாராக நாங்கள் காத்திருக்க மகனும் பரீட்சை எழுதிவிட்டு வெளியே வந்தான் எப்படி எழுதியிருக்கிறாய்?  என்று அவன் அம்மா கேட்டதுக்கே நல்லாத்தான் எழுதியிருக்கிறேன் என்று எரிந்து விழுந்தான்   

வண்டியில் முதலில் ஒரு நல்ல ஓட்டலா பார்த்து போய் சாப்பிட்டுவிட்டு பக்கத்தில பார்க்கிறமாதிரி இடம் ஏதாவது இருக்கா...? என்று கால் டாக்சி ஓட்டுனரிடம் கேட்க..........
மருதமலை போய் சேர்ந்தோம் ஐயப்ப பக்தர்கள் கூட்டத்தின் கொஞ்ச நேரம் கோயிலையும் சாமியையும் பார்த்து தரிசித்துவிட்டு.....

அடுத்து அனைத்துக்கும் ஆசைப்படு என்று அழைத்த ஈசா யோகா மையம் உள்ள வெள்ளியங்கிரி போய் நேரமில்லையால் வெளியே நின்று  வேடிக்கை பார்த்துவிட்டு...........
வரும் வழியில் பிரசக்தி பெற்ற பேரூர் சிவதலம் சென்று சிறிது நேரம் இருந்துவிட்டு தங்கும் விடுதி வந்து சேர்ந்தோம் கொஞ்ச நேர ஓய்வுக்கு பின் விடுதியை காலி செய்துவிட்டு காந்திபுரம் சென்று ஓம்னி பேருந்தில் ஏறி சென்னை நோக்கி..........

பேருந்தில் அஞ்சான் படம் போட.......அயர்ந்த கண்கள் சென்னை வந்தே திறந்தன 

 எந்த மதக் கடவுளுக்கும் அடிமையில்லாத  எனக்கு இந்த   கோவை நோக்கி ஒரு CAT பயணம்..... இப்படி ஒரு ஆன்மீகப் பயணமாக முடிந்தது 

என் மனைவிக்கோ ஊட்டிக்கு போகமுடியாமல் போச்சே என்றாலும் எல்லா சாமிகளையும் மகன் CAT பரீட்சையில் வெற்றி பெற வேண்டிக்கொண்டதில் ஜலதோஷம் போய் ரொம்ப சந்தோசம் வந்தது

என் மகனுக்கோ தனியாக அனுப்பவில்லை என்ற ஆதங்கம் இன்னும் தீரவில்லை 

மகன்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் மகன்களுக்கு அறுபது வயது ஆனாலும் அப்பாக்களுக்கு மகன்கள் என்றும் சின்ன குழந்தைகள்தான் என்று.....




 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1