google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: முத்தப் போராட்டம்-ட்விட்டர்கள் பார்வையில்....

Monday, November 17, 2014

முத்தப் போராட்டம்-ட்விட்டர்கள் பார்வையில்....


வெளிநாட்டு மோகம் இன்றைய இளைஞர்கள்-இளைஞ்சிகளை பொது இடங்களில் காதலர் தினம் கொண்டாடுவது,அரைகுறை ஆடைகளுடன் நடமாடுவது...என்று பலவகையில் தாக்கம் ஏற்படுத்தியுள்ளது

இப்போது முத்தப் போராட்டம் என்று வாலிபர்கள்-வாலிபிகள் படிக்கும் மாணவ-மாணவிகள் ஒருவருக்கொருவர் பொது இடங்களில்........
கட்டி பிடி கட்டி பிடிடா/டி....என்று கட்டிப்பிடித்து முத்தம் இடுகின்றனர்


அவர்கள் பார்வையில் இந்த கட்டிபிடித்து முத்தமிடல் இரு பாலினரில் ஒருவர் ஒருவரை   புரிந்து கொள்ளும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது மேலும் செக்ஸ் பற்றி அறிந்து கொள்ளும் முயச்சியாக பாலியல் வன்கொடுமை தொடராமைக்கு உந்து சக்தியாக பார்க்கப்படுகிறது இதற்கு இன்னொரு பெயர்....கிஸ் ஆப் லவ் (KISS OF LOVE)

ஆனால்.......   

வழக்கம் போல் கலாச்சார காவலர்கள் இது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது என்று கத்தி கத்தி கூப்பாடு போட்டு.....
எதிர் நடவடிக்கையில் இறங்கிவிட்டனர் முத்தப் போராட்டத்தை இரத்தப் போராட்டமாயிடுமோ?

உண்மையில் இத்தகைய நிகழ்வுகளுக்கு காரணம் சினிமா,சமுக வலைத்தளங்கள்,பிரபலங்கள்,ஊடகங்கள்...என்று பல காரணிகள் உள்ளன
அரசாங்கமும் அதன் சட்டதிட்டங்களும் அதை சரி செய்யாவிடில் இனிவரும் காலங்களில் இந்தச் சமுகம் இது போன்ற பல நிகழ்வுகளை சந்திக்கும்

ட்விட்டர்கள் பார்வையில்............

Oneindia Tamil@thatsTamil 
இன்று முத்தப் போராட்டம்... நாளை மூத்திரப் போராட்டமா.... ராமகோபாலன் ஆவேசம் !

ஒற்றன்@pmkproxy 
காதலுக்கு ஆதரவா முத்தப்போராட்டம்.. கள்ளக்காதலுக்கு ஆதரவா என்ன கட்டில் போராட்டமா... பேஸ் பேஸ்....

நொந்தகுமார்@nondhakumaar 
இந்த முத்தப்போராட்டம் நடத்துபவர்களையெல்லாம் மொத்து மொத்துனு #வயித்தெரிச்சல்தான் வேறென்ன.

அபலன்@ksssiva 
கலாசாரம் இன்னும் இருக்கிறதென்று நம்பிக்கொண்டிருந்தால் அவர்களுக்கு செருப்படி. #முத்தப்போராட்டம்.

சண்டியர்@BoopatyMurugesh 
'அன்பு' பெண்ணின் மீது தான் வரவேண்டுமா?மண்ணின் மீது வரக்கூடாதா? முத்தபோரட்டத்தை விட 1000 மடங்கு அன்பை வெளிப்படுத்துவது 'மீதேன்' போராட்டம்.

டிவிட்டர் சிவா @shivafreedom 
முத்தத்தின் சத்தத்தில் மூழ்கி போவோம் மோகத்தால் முக்திநிலை அடைந்துபோவோம் [கவிஞர் வைரமுத்து] #மாணவிகள் முத்தப்போராட்டம்....

Rengarasu Palanivel@Ammankudiyaan 
ஏதோ முத்தப்போராட்டம் நடக்குதாமே... அது எங்க ஏரியாவுக்கு பரவுமா? #அலார்ட்டா_இருப்போம்ல?

Sakthi™ @YesTN 
முத்தப்போராட்டம் முத்தி தெருநாய்கணக்கா இழுத்துட்டு கெடக்கப்போறாங்க. நாமவேற கல்லெடுத்து அடுச்சே பழகிட்டோம். என்னாகப்போகுதோ?

தமிழகம்@tamilagamNET 
முத்தப் போராட்டம் மீண்டும் நடத்தப்படும் என்று அறிவிப்பு! கேரளாவில் பெரும் பரபரப்பு! 

உலகானந்தா Gowtham@Ulaganandha 
கோழிக்கோட்டில் வரும் 7ஆம் தேதி மீண்டும் முத்தப் போராட்டம். #கோயமுத்தூர்ல நடந்தாலும் நான் வெறும் வேடிக்கைதான் பாக்கனும். என் டிசைன் அப்பிடி!

முத்தப் போராட்டத்தை எதிர்க்கும் முகமாக இந்து முன்னணியின் காரிக் காரித் துப்பும் போராட்டம்! வாரீர், ஆதரவு தாரீர். ;)) 

Samudra@Samudra123 
ஒரு பக்கம் சுத்தப் போராட்டம் ஒரு பக்கம் முத்தப் போராட்டம் -இன்றைய இந்தியா

மணிமைந்தன்@manimaindhan 
எங்கடா போற? முத்தப்போராட்டத்துக்கு... நாயே... ஈழப்போராட்டம்னு ஒன்னு நடந்ததாவது தெரியுமா..?





இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1