google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: பெண்கள் ஜீன்ஸ் அணியக்கூடாது என்று யேசுதாஸ் சொன்னது தவறா?

Sunday, October 5, 2014

பெண்கள் ஜீன்ஸ் அணியக்கூடாது என்று யேசுதாஸ் சொன்னது தவறா?

பெண்கள் ஜீன்ஸ் அணிவது இந்தியக் கலாச்சாரத்திற்கு எதிரானது என்று பாடகர் யேசுதாஸ் கூறியது ட்விட்டர்.சமுக வலைதளத்தில் நையாண்டியாக இருந்து.......

பின்னர்  சூடு பிடித்து மகளீர் அணியினர்  புகாரால் அவர் மீது  வழக்கு பதியப்பட்டுள்ளது

கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதையாக.........
பெண்களுக்காக எத்தனையோ சமுக விழிப்புணர்வு பாடல்களை பாடிய யேசுதாஸ் திருவனந்த புரத்தில் நடந்த காந்தி ஜெயந்தி விழாவில் இந்தியக் கலாச்சாரம் பற்றி ஏதாவது பேசவேண்டுமே என்பதற்காக சொல்லப் போய் சர்ச்சை சிக்கலில் மாட்டிக்கொண்டார்

ஜீன்ஸ் பற்றிய பார்வை.............


1873 ல் ஜேக்கப் டேவிஸ் மற்றும் லெவி ஸ்ட்ராஸ் என்பவர்களால்  கண்டுபிடிக்கப்பட்ட ஜீன்ஸ் உலகமுழுவதும் ஆண்கள் பரவலாக அணியப்படும் ஒருவகை கேசுவல் கால்சட்டையாக இருந்து......


இன்று பெண்களும் அணிகின்றார்கள் ஆனால் அமெரிக்கர்கள் மட்டுமே ஜீன்ஸ் பேண்ட்-க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் 

ஜீன்ஸ் சிறப்பியல்பாக சொல்லப்படுவது.......
எவ்வளவுக்கு எவ்வளவு ஜீன்ஸை சுத்தம் செய்ய துவைக்காமல் உபயோகிக்கிறோமோ  அவ்வளவுக்கு அவ்வளவு அது சிறப்பாக நீடித்து உழைக்கும் (The less you wash your jeans, the better your jeans become)
அதிலும் பெண்கள் அதிகம் விரும்புவது..கிழிக்கப்பட்ட RIPPED JEANS 


அந்த வகையில் குளிர் பிரதேசமான மேலை நாடுகளிலும் வியர்வை சிந்தாமல் உழைக்கும்  பணக்கார நாடுகளிலும் ஜீன்ஸ் பயன்பாடு விரும்பப்பட்டது 
ஆனால்.......
இந்தியா போன்ற பாராம்பரியம், கலாச்சாரம் மிக்க (Hot) சூடான நாட்டில்  ஜீன்ஸ் ஆடையை அதிலும் பெண்கள் அணிவது உடல் நலத்திற்கு உகந்ததா...? 

அதேநேரம்..........

பெண்கள் இதைத்தான் அணியவேண்டும் இப்படித்தான் வாழவேண்டும் இல்லையேல் இந்திய சமுதாயத்தில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை நடப்பதை தடுக்கமுடியாது என்று சொல்வது........
நாம் இன்னும் வளரவில்லை காட்டுமிராண்டியாகவே வாழ்கிறோம் என்று அர்த்தம் ஆகாதா......?

நண்பர்களே! உங்கள் பார்வையில்...............
பெண்கள் ஜீன்ஸ் அணியக்கூடாது என்று யேசுதாஸ் சொன்னது....



வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.........


டிவிட்டர்கள் பார்வையில்.........  


ராதா இல்லாபடம் சாதா!@RATHA_RADHA 
அருவமனையால் அறுத்த ஜீன்ஸ் -இலியானா


Raja Stalin@RazKoLu 
அவரு ஆன்ட்டிங்க கூட ஜீன்ஸ் போட்டா தப்பில்ல ஆனா கெழவிங்க போடாதீங்கன்ற நோக்கத்துல சொல்லியிருப்பாரு. #dont mistake him

கவிக்கோ அண்ணாமலை.@indirajithguru 
அட போங்கப்பா..! அவியல்னா பீன்ஸ போடுறதும்,பொம்பளைனா ஜீன்ஸ போடுறதும் சகஜம்தாம்பா.!

Dhayalan Chittibabu@city_daya 
பெண்கள் ஜீன்ஸ் அணிவது, இந்திய கலாச்சார சீர்கேடு - ஜேசுதாஸ் ஜேசுதாஸ் சார், அதை உங்க மருமகள்கிட்ட சொன்னிங்களா? 

ஆல்தோட்டபூபதி@thoatta 
தோழர்களே, 'க்ளீன் இந்தியா' என்பது இந்தியாவில் ஜீன்ஸை ஒழிக்க கொண்டு வந்த திட்டம் # தயவு செய்து இனியாவது துவைத்து பயன்படுத்துங்கள்

Prathipa@Talkativewriter 
எங்க அவ்வா கூட தான் என்ன ஜீன்ஸ் போடாதன்னு சொல்லிச்சு, வா உனக்கும் மாட்டி விடுறேன்ன்னேன், ஓடிருச்சு

Leena Manimekalai@LeenaManimekali 
ஒரு ஜேசு தாஸ் வெளியே வந்தாலும் வந்தார்,புதருக்குள்ளிருந்து பல்லாயிரம் ஜேசுதாஸ்கள் பல்வேறு ரூபத்தில் படையெடுத்து வந்துக்கொண்டிருக்கிறார்கள்!

கருத்து கந்தன்©@karuthujay 
பொண்ணுங்க ஜீன் போடலாம்- ஆனா சீன் போடக்கூடாது! - ஒரு கருத்துஞானி சொன்னது;-)

தரலோக்கலு லேஜிபாய்»@TharaLocal 
ஆம்பள பசங்க போடுற பேன்டு சட்டைய பெணகள் போட்டிட்டு திரியிறது ஆணாதிக்கம் இல்லயாமா.. ஜீன்ஸ் போட்டா உறுப்புல கேன்சர் வரும்னு சொன்னா பெண்ணியமாம்!

Kolaveriboy@Kolaveriboy 
யேசுதாஸ் வீட்டு பெண்களும் ஜீன்ஸ் அணிந்துள்ளனர் # துவைக்க முடியாம சொல்லிருக்கார் போல 

வெ.புகழ்மணி@pugalmani55 
நீங்க ஜீன்ஸ்,லெக்கின்ஸ்,ஸ்கட் இப்படி எந்த கண்றாவியாவது போடுங்க அது உங்க உரிமை.அதை பொது இடத்தில் இல்லாமல்

இனியவன்@Ini_avan 
ஜீன்ஸோ..பீன்ஸோ...பார்ப்பவர் மனதையும் கண்ணையும் சலனப்படுத்தாமல் உடை அணிந்தால் அதுவே நாகரீகம்...!

CSKடா@Thambi_Vj 
கேப்டன் : ஏம்பா கொழம்புல பீன்ஸ் போடக்கூடாதுன்னு ஜேசுதாஸ சொன்னாராம்ல நெசமா ?? 
தொண்டன் : அய்யோ கேப்டன் அது ஜீன்ஸ் !

நாட்டி நாரதர்®@mpgiri 
ஓய் ஆண்ட்டி, டீன்ஸ் போடுறதுக்குத்தான் ஜீன்ஸ்..நீங்க போடுறதுக்கு வேற இருக்கு

ரைட்டர் நாட்ஸ் @naatupurathan 
ஏம்யா அவர் ஜீன்ஸ் போடாதிங்கனு சொல்லலியாம்; கிழிஞ்சிபோன ஜீன்ஸ போடாதீங்கனு தான் சொன்னாப்லயாம்!!! இதுக்குபோயி...!!!

Karthi@arkarthig 
ஜீன்ஸ் பற்றிய கமென்ட்டுக்கு, யேசுதாஸ் மீது கேரளா போலிஸ் FIR பதிவு - செய்தி #இதெல்லாம் ரொம்ப ஓவர் யுவர் ஆனர்!

நஜுருதீன்@Najurudeen 
பம்பரம் விட்டானுங்கோ, ஆம்லட் , ஆபயில் போட்டானுங்கோ அப்பலாம் பெண்ணியம் பேசாதவனுங்க ஜீன்ஸ் போடக்கூடாதுன்னு சொன்னா கொடி பிடிகிராணுங்க.

நாடோடி@kkarthic 
அழகியல் சார்ந்து எடுத்து கொள்ளபடும் உடை விஷயம் ஆரோக்கியம் சார்ந்தும் யோசித்தல் நன்று. #ஜீன்ஸ்.

கத்தி UPGRADE C.M@doll_fb 
ஜீன்ஸ் உடுத்தினால் அவர்களின் கர்ப்பப்பை சிதைவு ஏற்ப்படும் வாய்பு அதிகமே!!#எங்க நர்சு பொண்ணுங்க ளே போட கேக்க மாட்றாளுக"!



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1