google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: அம்மாவும் 1006 மொட்டைகளும்

Monday, October 13, 2014

அம்மாவும் 1006 மொட்டைகளும்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயிலில் அடைக்கப்பட்ட  நாளிலிருந்து இன்றுவரை அதிமுகவினரின் அலப்பறை கூத்துக்கள் உலகமே பார்த்து சிரிக்கும் அளவுக்கு கீழ்த்தரமாக உள்ளதாக வலைதளங்களில் பேசப்படுகின்றன 

அதன் உச்சகட்ட நகைச்சுவையாக..........
  அம்மாவின் விடுதலைக்காக  சேலம் வீரபாண்டி எம் எல் ஏ செல்வம் முன்னிலையில் அதிமுக தொண்டர்கள் 1006 பேர் தலைகளை......அவர்கள் தலைகளைத்தான் மொட்டையடித்து வேண்டுதல் செய்துள்ளனர் 

முதலில் வன்முறையில் கடையடைப்பு,பஸ் எரிப்பு....போன்ற அடாது செய்தவர்கள் இப்போது அஹிம்சா முறையில் உண்ணாவிரதம், தீமிதித்தல், பால்குடம்,தீச்சட்டி எடுத்தல், மொட்டையடித்தல்...என்று ஈடுபடுகிறார்கள் 

இதனால் யாருக்கும் தொல்லை இல்லை என்பதால் இது  வரவேற்க வேண்டிய செயலே 

ஆனால்

ட்விட்டர்,முகநூல் நண்பர்களின்..........

Ayyappan Seetharaman Pillai
உண்ணாவிரதப் பந்தலில் media முன்பு அழுபவர்களுக்கு தனியாக 200 ரூபாயும் மொட்டை அடித்துகொள்பவர்களுக்கு Rs.1000
மறவாதீர் மறந்தும் இருந்து விடாதீர்...இச்சலுகை இதயதெய்வம்,டாக்டர் புரட்சிதலைவி அம்மா அவர்கள் விடுதலை ஆகும் வரை மட்டுமே!!!!




Anbudan Ungal Abbas 
எப்பூடி...
மானம் போனபின் மயிர் எதற்கு?




Habeebullah Mohamed
எத்தனை மொட்டைகள் என்ன என்ன மொட்டைகள் அத்தனை மொட்டைகள்
அற்புத மொடடைகள்
 


Sakthi™ @YesTN 
அம்மா கைதால் மக்கள் மனதில் தோன்றிய அனுதாபத்தை அவர்களது தொண்டகள் அடித்து நொறுக்கிக்கொண்டு இருக்கிறார்கள்!

ஃபீனிக்ஸ் तिरू@fanatic_twitt 
ஜட்ஜ் காப்பாற்றியது அம்மாவை மட்டும் இல்லை.தமிழ்நாட்டு மக்களையும்தான்.

லிங்கா குட்டி @2singakutti 
ஒரு பக்கம் அம்மணிகள் மண் சோறு .. இன்னொரு பக்கம் அம்மாக்கு ஆனந்த பவன்ல இருந்து சாப்பாடு உள்ள போகுது #என்னய்யா நடக்குது இங்க

கனியன்@Kaniyen 
"எந்திரி அஞ்சலி, எந்திரி அஞ்சலி, எந்திரி அஞ்சலி" போன்ற டயலாக் மாதிரித்தான் உள்ளது, "அம்மா வரணும், அம்மா வரணும், அம்மா வரணும்!" # ஜெயா டிவி!

சிறுத்தை™@SaThi_Ya_PrIyAn 
இந்த வழக்கு அம்மாவின் கால் தூசுக்கு சமம் - நடிகை புவனேஸ்வரி கண்ணீர் மல்க பேட்டி. # தொழில்லாம் நல்லபடியா போகுதா தாயி..!!!!

ஒ.உ.சிந்தனைகள் @bommaiya 
1006 மொட்டை போட்டுருக்காங்களே... பின்னாளில் 1006 மொட்டை வாங்கிய அபூர்வ சிகாமணின்னு வரலாறு தப்பா பேசாது...? 

பரம்பொருள் @paramporul 
"மக்கள் முதல்வர் விடுதலைக்காக அமெரிக்க, ரஷ்ய, சீன அதிபர்கள் கூட்டு பிரார்த்தனை மற்றும் உண்ணாவிரதம்." #இத மட்டும்தான் சொல்லல #மம்மி டிவி

Raja@RazKoLu 
திரையுலகினர் அம்மாவின் கோபத்துக்கு ஆளாக கூடாதுன்னு ஸ்ட்ரைக் பண்றாங்ளா?, இல்ல ஊழல் பண்ணினது பெரிய இடம் எப்படி ஜெயில்ல போடலாம்ன்னு ஸ்ட்ரைக்கா?



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1