மோடியின் பதவியேற்புக்கு சார்க் நாடுகள் தலைவர்களில் ஒருவர் என்ற முறையில் ராஜபக்சேவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
இது அனைவரையும் அனுசரித்து போகவேண்டும் என்ற மோடியின் ராஜதந்திரம் என்றும் ஈழப்பிரச்சனைக்கு தீர்வுகாண இது முதல் முயற்சி
அவ்வாறே பாக்கிஸ்தான் பிரதமருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று பாஜக கட்சியினரால் சொல்லப்படுகிறது .
ஆனாலும்..........
இது போன்ற பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள சார்க் நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது இதுவே முதல் முறை
இப்போதைய நிலையில் தமிழர்களின் முழு எதிர்ப்புக்கும் தமிழ்நாட்டில் திமுக-காங்கிரஸின் தோல்விக்கும் காரணமான ராஜபக்சேவின் வருகை ஏற்புடையது அல்ல
தமிழக சட்டசபையில் ராஜபக்சே ஓரு போர்க்குற்றவாளி என்று அதிமுக அரசால் தீர்மானம் நிறைவேற்றிய நிலையிலும் அக்கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையிலும்.........
மோடியின் பதவியேற்பு விழாவில் ராஜபக்சேயின் வருகை மோடியின் மீது தமிழர்களுக்கு உள்ள நம்பிக்கையை சீர்குலைக்கும் என்றும்......
இந்தியாவின் முக்கிய தூணாக விளங்கும் தமிழர்களின் உணர்வை மதிக்காமல் பாஜக கட்சியினரின் இத்தகைய நடவடிக்கை ஓட்டு மொத்த தமிழர்களின் நம்பிக்கையை மோடி இழக்கச் செய்யும் என்றும் அரசியல் வல்லுனர்களால் கருதப்படுகிறது
வால்டர் வடிவேல்
ராஜ பக்சே விசயத்துல.... திமுக வும் காங்கிரசும் பண்ணுனா ரத்தம்...மோடி பண்ணுனா அது தக்காளி சட்னி...
"இந்திய நாட்டுக்குள் ராஜபக்சே நுழைவதை எந்த விதத்திலும் தமிழர்களால் சகித்துக் கொள்ள இயலாது" - வைகோ
ராஜபக்சே வர போறான், பழக்க தோசத்துல கலைஞரையும், மன்மோகனையும் திட்டிடாதீங்க. # உங்க டெம்ப்லட்டை மாத்திகங்க.
மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளவில்லை என்றால் ஜெயலலிதா ஆட்சி கலைக்கப்படும் - சு.சுவாமியின் ட்வீட்டால் சர்ச்சை!
இறைவா நிலநடுக்கம்,புயல் சின்னம்,ராஜ பக்சேவை நாங்கள் பார்த்துகொள்கிறோம் சுப்ரமணிய சாமியிடமிருந்து மட்டும் நீ காப்பாற்று
பதவி ஏற்பு விழாவிற்கு ராசபக்சேவை அழைத்தது தமிழினத்திற்கு துரோகம் :கருணாநிதி
டேய் அந்த உண்ணாவிரத பந்தல போடு லன்ச்ச முடிச்சுட்டு வறேன்
மோடி ராஜபக்சேக்கு ஆதரவு. விஜய் அண்ணா மோடிக்கு ஆதரவு.
கூட்டிக் கழிச்சுப் பாரு கணக்கு சரியா வரும்.
சி.பி.செந்தில்குமார்
இந்தியன் ன் ரத்தத்தில் ஊறியது பாகிஸ்தான் எதிர்ப்பு. தமிழனின் உயிரில் கலந்தது இலங்கை வெறுப்பு.மோடி இருவருடன் நட்பு பாராட்டுவது பின்னடைவு
தமிழ்நாட்டுக்கு மோடி இவ்வளவு பெரிய தண்டனை தருவார்ன்னு தெரிஞ்சிருந்தா பிஜேபியவே கெலிக்க வச்சிருக்கலாம் :-//
நமக்குதான் ராகுல் வேற, மோடி வேற, ராஜபக்சே வேற! ஆனா அவய்ங்க மூணு பேரை பொறுத்தவரை நம்ம எல்லோருமே ஒன்னுதான், கோமாளிங்க
எனக்குஎன்னமோ ராஜபக்சே இங்கு வரது வீரம் படதாம் ஞாபகம் வருது
☆Vijay Television
ராஜபக்சே பிரச்சனை, நழுவும் விஜய்
ராஜபக்சேவுக்கு
அழைப்பு.. மவுனம் காக்கும் பா.ம.க. // எவன் எப்புடி போனா என்ன? மவனுக்கு
ஒரு மந்திரி சீட்டு கால்ல விழுந்தாவது வாங்கி புடனும் !
ராஜபக்சேவை அன்று மன்மோகன் சிங் அழைத்திருந்தது கொலைகாரன் வைத்திருந்த கத்திக்கு சமம் என்றும், இன்று நரேந்திர மோடி அழைத்திருப்பது மருத்துவர் வைத்திருக்கும் கத்திக்கு சமம்' - பொன்.ராதாகிருஷ்ணன்!# கெட்ட வார்த்தையில திட்ட தோணுது பட் பொது நலன்கருதி......தீரன் விஜயவர்மன்
மோடியின் பதவியேற்பு விழாவிற்கு ராஜபக்சே வருகிறாரே இதற்கு என்ன, பதவியேற்பு அன்றே தனி தமிழீழம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அழைத்திருக்கிறார், தமிழின காப்பாளர் மோடி என்று ஈஸ்ட்மன் கலரில் ரீல் ஓட்டுவார்களோ?..............Kiruba Munusamyராஜபக்சேவுக்கு அழைப்பு.. "பாஜக கூட்டணி குழந்தைக்கு" கள்ளிப்பால் வழங்குவதாகும்: தமிழருவி மணியன்
மோடி விழாவில் ராஜபக்சே- வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவது போலிருக்கிறது: முதல்வர் ஜெ. கண்டனம்!
இவை எல்லாவற்றுக்கும் உச்சக்கட்டமாக இதுதான் மோடியின் அமைச்சரவை பட்டியலா...? அதில் ஒருவர்கூட தமிழ்நாட்டின் பிரதிநிதி இல்லையே..........
இது ஊடகங்களின் ஊகமாகவும் இருக்க...லாம் ....இருக்கட்டும்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
| Follow @PARITHITAMIL |








