google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: மோடி-பேரச் சொன்னாலே சும்மா அதிருதுல

Sunday, May 25, 2014

மோடி-பேரச் சொன்னாலே சும்மா அதிருதுல



நரேந்திர மோடி பதவியேற்கும் முன்பே அவரது அதிரடி உத்தரவைக் கண்டு இந்திய அரசு அதிகாரிகள் மட்டுமின்றி...தீவிரவாதிகள்,அண்டை எதிரி நாடுகள் என்று அனைவரும் அரண்டுக் கிடக்கிறார்கள் 

ஆப்கானிஸ்தானில்  உள்ள இந்திய தூதரகத்தை  தீவிரவாதிகள் தாக்கியப் போது அங்கிருந்த இந்திய வீரர்கள் திருப்பி தாக்க யாரிடம் அனுமதிகேட்க வேண்டும் என்று தெரியாமல்இந்திய ராணுவத்தை தொடர்புகொள்ள....

இந்திய  ராணுவ அதிகாரிகள் உடன் பிரதமராக பதவி ஏற்கவிருக்கும் மோடியிடம் தொடர்பு கொண்டனர்..எவ்வித தயக்கமுமின்றி மோடியோ....

"அந்த தீவிரவாதிகளை அழித்துவிட்டு நம் வீரர்களை என்னுடன் விருந்து சாப்பிட அழைத்து வாருங்கள்" 

என்று உத்தரவு விட........

இதுவரை இப்படியொரு அதிரடி உத்தரவை கேட்டிராத நம் இந்திய வீரர்கள் எழுச்சி கொண்டு போரிட்டு  அந்த தீவிரவாதிகள் அத்தனை பேரையும் அழித்துவிட்டு இன்று மோடியுடன் விருந்து சாப்பிட வருகிறார்கள் 

இதுமட்டுமல்ல.........

மோடியின் குடும்ப நண்பர் நடிகர் ரஜினியின் கோச்சடையான் படத்தில் பேசும் வசனம்.......

"எதிரிகளை அழிக்க எத்தனையோ வழிகள் உண்டு அதில் முதல் வழி....மன்னிப்பு" 

இக்கூற்றின் படி...

மோடியின் பிரதமர் பதவிஏற்பு விழாவுக்கு அண்டை நாடுகள் பாக்கிஸ்தான், ஸ்ரீலங்கா...போன்றவைகளை மிகுந்த எதிர்ப்புக் கிடையில் அழைத்ததால் பயம் கொண்டோ அல்லது மரியாதைக்கோ உடனடி நடவடிக்கையாக..........

-பாக்கிஸ்தான் சிறையில் இருந்த இந்திய வீரர்கள் அனைவரையும் விடுதலை செய்துவிட்டது 

-ஸ்ரீலங்கா சிறையில் இருந்த தமிழ் மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்துவிட்டது   

மோடி-பேரச் சொன்னாலே சும்மா அதிருதுல 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1