தேர்தலில் மாபெரும் தோல்வியுற்ற காங்கிரஸ்-திமுக கட்சிகள் சாம்பலிருந்து உயிர் பெற்று எழும் பீனிக்ஸ் பறவை போன்று மீண்டும் வரும் தேர்தல்களில் வெற்றி பெறுமா?
மன்மோகன் சிங் ஒரு பலவீனமான பிரதமர் என்றும் அவரை ஆட்டி படைத்தவர் சோனியா காந்தி என்றும் முக்கியமான பிரச்சனைகளில் எதுவும் பேசாமல் மொவ்னம் காத்தும் எந்த தீவிர நடவடிக்கை எடுக்காமல் நொண்டியடித்தும் மன்மோகன் சிங்கின் செயல்பாடே காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு காரணம் என்று அதன் முக்கியமானவர்களில் ஒருவரான கமல்நாத் கூறியுள்ளார்.......
ஆனால்....
உண்மையில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறியதும் சொந்தப் பழிவாங்கும் உணர்வுடன் தமிழர் விரோத அண்டை நாட்டுடனும் இந்தியர்களில் ஒருவர் தமிழர் என்ற உணர்வை மதிக்காததும் வேலைவாய்ப்பு நெருக்கடியும் இன்னும் பல மக்கள் விரோத செயல்பாடுகளே காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு காரணம்......என்போர் பலர்
எது எப்படியோ......அதீத வெற்றி பெற்றுள்ள பாஜக கட்சியும் வலுவான பிரதமர் என்று அழைக்கப்படும் மோடியின் செயல்பாடுகளுமே அடுத்து தொடர்ந்து அவரை ஆட்சிக் கட்டிலில் நிலை நிறுத்தும் இல்லையேல் காங்கிரஸ் மீண்டும் வெற்றிபெற வாய்ப்பு உள்ளது
மாநிலத்தில் திமுக கட்சியின் தோல்விக்கு காரணம்......காங்கிரஸ் கட்சியுடன் முன்பு கூட்டு சேர்ந்து திமுக செயல்பட்டதே என்று அதன் தாய் கழக தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார்........
ஆனால்.......
உண்மையில்.......திமுக ஆட்சியில் இருக்கும் போது அக்கட்சியின் குடும்ப உறுப்பினர்களில் சிலர் தெரிந்தோ தெரியாமலோ செய்த மக்கள் விரோத செயல்களும் அவர்களைக் காப்பாற்ற வேண்டிய நிர்பந்தத்தில் அதன் தலைவர் இருந்ததும் அதனால் வெளிப்படையான ஈழத் தமிழர் ஆதரவு உணர்வை வெளிப்படுத்த முடியாத நிலையும் எல்லாவற்றுக்கும் மேல் குடும்பத்திற்குள் நடக்கும் சுமுகமற்ற பதவிச் சண்டையுமே காரணம் ....என்போர் பலர்
எது எப்படியோ....நம்ம தமிழ் மக்கள் எப்போதும் ஆட்சியில் இருப்போரை கீழே தள்ளுவதும் கீழே விழுந்தவரை மீண்டும் தூக்கி விடும் நல்ல எண்ணம் கொண்டவர்கள்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
| Follow @PARITHITAMIL |

