இந்தியாவில் உண்டான ஆட்சிமாற்றம் உலகநாடுகள் அனைத்திற்கும் ஓர் எச்சரிக்கை என்றும் மோடி ராஜபக்சேவுக்கு ட்விட்டரில் கீச்சிய கீச்சில் ராஜதந்திரம் உள்ளது என்றும் அரசியல் வல்லுனர்கள் கருதுகிறார்கள்....
ட்விட்டரில் மோடியின் அமோக வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து இலங்கைக்கு வர அழைப்பு விடுத்த ராஜபக்சேவுக்கு பதில் கீச்சாக நரேந்திர மோடி அவர்கள்.......விரைவில் இலங்கையுடன் இந்தியா இணைந்து செயல்படும் நாளை எதிர்பார்க்கிறேன் என்ற அர்த்தத்தில் பதில் சொல்லியுள்ளார்
Narendra Modi @narendramodi
@PresRajapaksa It was wonderful speaking to you earlier today. I look forward to strong relations between Sri Lanka & India.
இந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கீச்சில் மோடி அவர்களின் ராஜதந்திரம் மறைந்துள்ளது என்றும் மோடியின் செயல்பாடு ரஷ்ய அதிபர் புட்டின் அவர்களின் யுக்ரேன்-கிரைமியா செயல்பாடு போன்று அதிரடி நடவடிக்கை இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
பாஜகவின் அதீத பெரும்பான்மை வெற்றி இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் அண்டை நாடான பாக்கிஸ்தான் மீதும் மத தீவிரவாதிகளின் மீதும் செயல்பாடாத மன்மோகன் சிங் காங்கிரஸ் அரசு மீது இந்திய மக்களுக்கு உள்ள எதிர்ப்பும் அவநம்பிக்கை உணர்வை காட்டுகிறது .
அதேநேரம் தமிழ்நாட்டில் அதிமுகவின் முழு வெற்றி அண்டைநாடான இலங்கை மீது உள்ள தமிழர்களின் முழு அதிருப்தியும் திமுக கட்சியின் மீது உள்ள அவநம்பிக்கையும் ஆகும்
காங்கிரஸ்-திமுக தோல்விக்கு முக்கிய காரணங்களில் ஓன்று ஈழத் தமிழர்கள் வாழ்க்கையில் அவர்கள் விளையாடியது அல்லது ராஜபக்சே விளையாட இவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது இதை பாஜக-அதிமுக அறிந்தால் அவர்களுக்கு நல்லது...அறிவார்கள்
அதனால் பிரதமர் மோடியால் ராஜபக்சேவுக்கு ஆபத்து வரலாம் என்றும் இலங்கை ஈழத்தமிழர் பிரச்னைக்கு விரைவில் முடிவு வரலாம் என்றும் இலங்கை இந்தியாவின் அங்கமாக மாறலாம் என்றும் அரசியல் வல்லுனர்கள் கருதுகிறார்கள்
மோடி அரசும் காங்கிரஸ் அரசு போல் இலங்கைக்கு ஆதரவு கரம் நீட்டும் என்றால்...
சீனாவுடன் இலங்கை இப்போது கொண்டிருக்கும் புத்த மத அடிப்படியிலான நட்பு நாளை பாக்கிஸ்தான் போல் இந்தியாவுக்கு தொல்லையாக மாறும்....இலங்கை இந்தியாவின் தலைவலியாக இருக்கும்
அரசியல் கலையில் முதுநிலை பட்டம் பெற்ற பிரதமர் மோடி இந்த அரசியல் தந்திரம் அறியாதவராக இருக்க முடியாது. மோடி தமிழருக்காக இல்லாவிட்டாலும் இந்தியாவின் பாதுகாப்புக்காக இலங்கைக்கு எதிரான வலுவான நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
நம்பிக்கைதான் வாழ்க்கை.....
அல்லல்படும் ஈழத் தமிழர் வாழ்வு இவரால் இன்னல் நீங்கும் என்றே நம்பிக்கை கொள்வோம் இல்லையேல் நாளை இவரும் இதுவரை இருந்த இழியோர் வரிசையில் இடம்பிடிப்பார்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
| Follow @PARITHITAMIL |

