google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: விஜயகாந்த் கேப்டன் பெயர் விவகாரம் தேவையா?

Tuesday, March 4, 2014

விஜயகாந்த் கேப்டன் பெயர் விவகாரம் தேவையா?

ராணுவத்தில்  உயர் பதவியான கேப்டன் என்ற பட்டத்தை ஒரு நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த்  தன் பெயருக்கு முன் போட்டுக் கொள்வது தவறு என்று  விசாரணை செய்ய நீதிமன்ற உத்தரவு......இனி விஜயகாந்த் கேப்டன் என்று அழைக்கப்படுவாரா?




தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்தக் கூத்து அதிகம்...தந்தை,அம்மா,அய்யா, கலைஞர்,பேரறிஞர்,தளபதி,இளைய தளபதி....என்று சமுதாயத் தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள்,சினிமா நடிகர்கள் அழைக்கப்படுவதும் பூஜிக்கப் படுவதும் அதிகம் 

இதில் நிறைய மக்கள் அன்பால் தங்கள் தலைவர்களை அழைப்பது ரசிகர்கள் தங்கள் நடிகர்களை அழைப்பது...

விஜயகாந்த் தனது படங்களில் இந்திய ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார் நாட்டுப்பற்று காரணமாக அவர் தன்னை கேப்டன் என்று அழைக்கின்றார் என்றால்........... 

நாளைக்கு ஒருவர் ஒரு படத்தில் பிரதமராக நடித்தால் அவர் தன் பெயருக்கு முன் பிரதமர் என்று போட்டால் என்னாவது....?

நல்லவேளை விஜயகாந்த் ஒரு படத்திலும் முதல்வராக நடிக்கவில்லை அப்படி நடித்திருந்தால் முதல்வர் விஜயகாந்த் என்று போட்டு......
எப்போதோ முதல்வர் ஆகியிருப்பார்....?

என்று  யாரேனும் நினைத்தால் அவருக்கு மறை கழண்டுவிட்டது என்றுதானே அர்த்தம்..............


(அய்யா...நீதிபதி அவர்களே! கேப்டன் என்ற சொல் ராணுவத்தில் மட்டுமா உள்ளது...? கப்பலில்கூட கேப்டன் இருப்பார்....

நாளை  கலைஞர் என்ற சொல் எங்களைப் போன்ற நாதஸ்வர கலைஞர்... தவில் கலைஞர்..போன்றவர்களை குறிக்கின்றது என்றால்....தலைவர் கலைஞர் அவர்களையும் விசாரணை செய்ய....... ஹி..ஹி..ஹா...ஹா..

நாளை நாட்டிலுள்ள அம்மாக்கள் எல்லோரும் நம்ம முதல்வரை அம்மா என்று அழைக்கக் கூடாது என்றால்....நம்ம முதல்வர் அம்மா அவர்களையும் விசாரணை செய்ய................ஹி..ஹி..ஹா...ஹா )

நாட்டில்  எத்தனையோ பிரச்சனைகள் சமுக அவலங்கள் இருக்க இது போன்ற பெயர் பிரச்சனைகளுக்காக ஒரு நாட்டின் நீதிமன்றங்களும் நீதிபதிகளும் தங்கள் பொன்னான நேரத்தை இப்படி மன்னாங்கட்டியாக வீணடிப்பது தேவையா...?

விஜயகாந்த் கேப்டன் பெயர் விவகாரம் தேவையா?




வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.....முடிவு-12/3/2014

சமுக வலைதளம் டுவிடரில் டமால்....டுமில்....


மகிழ்வரசு @Anandraaj04 

வழக்கு போட்டவன் ஒரு காமடி பீசுன்னா அந்த வழக்கை எடுத்துக்கொள்ள சொன்ன மாண்புமிகு கோர்ட்டார் எம்மாம் பெரிய காமெடி பீசா இருக்கும்னு யோசிக்கிறேன்

எமகாதகன்!!!் @Aathithamilan 
கேப்டன்னுஅழைக்க தடைகோரிமிலிடெரி கேப்டன்வழக்கு #எஜமான்நான்அந்தகேப்டன் இல்லீங்கோகேப்போட்டுனு நானேDoneனு சொல்லிக்குவே அந்த capdone கோ

ஸ்ரீ மணி @moodanmani 
கேப்டன்னு அழைக்க தடை கோரி ஒரு மிலிட்டரி கேப்டன் வழக்கு #தளபதியை எதிர்த்து இரணுவதளபதிகள் வழக்கு தொடரப்போகிறார்கள்

- ட்விட்டர் @thimirru 
கேப்டன்னு அழைக்க தடை கோரி ஒரு மிலிட்டரி கேப்டன் வழக்கா?? அப்போ அம்மானு கூப்பிட தடைக்கோரி எங்கம்மா, அந்தம்மா மேலே வழக்கு போடலாமா? டவுட்டு

பச்ச மண்ணு @k_for_krish 
சரக்கு அடிச்சிட்டு தல்லாடுரவங்கள பத்திரமா வீட்டுல கொண்டுபோய் விடுவாராம். அதாலதான் அவருக்கு கேப்டன்னு பேர் வந்துச்சாம்.

austinvijay @austinvijay 
கேப்டன்என்கிறபெயர் எப்படிவந்தது?விசாரித்து அறிக்கைதாக்கல்செய்ய போலீஸுக்கு நீதிமன்றம்உத்தரவு# கண்டுபுடிச்சா பொருளாதாரம் அதிகரிக்குமா

பித்தன் @kiramaththan 
கேப்டன் - பெயர்க்காரணம் கேட்டு கோர்ட்டில் வழக்கு. அடுத்தது புரட்சி, தளபதி எல்லாம் விசாரிப்பாங்களோ?

பாரதி @BharathiBigB 
கேப்டன் என்ற பெயர் விஜயகாந்துக்கு எப்டி வந்தது நீதிமன்றம் கேள்வி! #தீபாவளிக்கு ரோல் 'கேப்'ப 'டன்' கணக்கா வாங்கி வெடிபாப்ல அதுனால தான்

நல்லவன்.. @i_nallavan 
: கேப்டன் என்ற பெயர் விஜயகாந்துக்கு எப்டி வந்தது நீதிமன்றம் கேள்வி! #சொல்லுங்க சொல்லுங்க நீங்க யாரு த.நாட்டு ல என்ன பன்னிட்ருந்தீங்க

தில்லுதொர.. @pbbalajii 
ஏய்.. கேப்டன்றது மக்கள் நாங்கள் கொடுத்த பட்டம்யா நீங்க யாரு அத பறிக்க? நாங்க இருக்கோம் நீங்க மிக்ஸ் பண்ணுங்க கேப்டன்.

சி.பி.செந்தில்குமார் @senthilcp 
கேப்டன்என்கிறபெயர் விஜயகாந்த்க்கு எப்படிவந்தது?விசாரித்து அறிக்கைதாக்கல்செய்ய போலீஸுக்கு நீதிமன்றம்உத்தரவு# செந்தூரப்பூவே பட கேரக்டர்

எவனோ ஒருவன் @VenkysTwitts 
கேப்டன் என்ற பெயர் விஜயகாந்துக்கு எப்டி வந்தது நீதிமன்றம் கேள்வி! # அவர் பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் இருந்து இந்தியாவை காப்பாற்றுவதால்!

குழலினி @reviewtamil 
விசயகாந்த் "கேப்டன்" எனும் ராணுவத்தின் உயர்ந்த பதவியின் பெயரை யூஸ் பண்ணுகிறார்னு ஒருத்தர் கேஸ் போட்ருக்காப்ல. காலையில ஒரு காமெடி.


 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1