google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: விளம்பரங்களால் வெறுப்பேற்றும் வலைப்பூக்கள்

Thursday, February 6, 2014

விளம்பரங்களால் வெறுப்பேற்றும் வலைப்பூக்கள்


சில வணிக ரீதியான ஊடகங்களின் வலைத்தளங்களை வாசிக்க நினைத்தால் வார்த்தைகளை மறைத்துக்கொண்டு பாப்-அப் விளம்பரங்கள் வந்து எட்டிப்பார்க்கும் இப்போது சில பிளாக்கரின் வலைப்பூக்களிலும் இதே நிலை...


சில வலைத்தளங்களை திறந்தாலே நமது கணணி முழுவதும் விளம்பரப் பக்கிகள் வந்து அழையாத விருந்தாளிகளாய் நிறைந்துக் கொள்வார்கள் அப்புறம் அவர்களை விரட்டுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்
இந்த  விளம்பர நோய் இப்போது பிளாக்கர் வலைப்பூக்களிலும் பரவிவிட்டது யார் என்று சொல்லி ஆகப்போவது என்ன....?

பிளாக்கரில் கூகுள் அட்-சென்ஸ் வைப்பதற்கு நிறைய கட்டுப்பாடுகள் உண்டு..அதிலும் இந்தியா..சீனா...பாக்....போன்ற கிழக்கு ஆசிய நாடுகளுக்கு அவர்கள் இந்த வசதியை கொடுப்பதில்லை
ஆனால் நம்ம தமிழ் வலைப்பூ அறிஞர்கள் அதற்கும் ஒரு வழி...குறுக்கு வழி கண்டுபிடித்துள்ளார்கள்

அமெரிக்காவில் வசிப்பதுபோல் ஒரு மெயில் ஐடி உருவாக்கி யூ-டியூபில் நுழைந்து அங்கே எளிதாக இந்த கூகுள் அட்-சென்ஸ் அனுமதியை பெற்றுவிடுகின்றார்கள் பிறகு அதைக்கொண்டு அவர்களின் வலைப்பூவில் வைத்து காசு பார்க்கின்றார்கள்

பிழைத்துப் போகட்டும் இந்த அறிவுஜீவி வலைப்பதிவர்கள் ஆனால் வலைப்பூ நேசிகளை வெறுப்பேற்றி யாரையும் எந்த வலைப்பூ பக்கமே வரமுடியாமல் வெறுப்பெற்றுவது நியாயமா...?

இப்போது  தெரிகின்றதா ஏன் வலைப்பூ வாசிப்பவர்களின் வரவு குறைவு என்று..?
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1