google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: இன்னும் எழுதாத கவிதைகள்

Sunday, February 16, 2014

இன்னும் எழுதாத கவிதைகள்

இன்னும் எழுதாத கவிதைகள் 
இருக்கு என்னுள் ஏராளமாய்...
எல்லாம் சிரிக்கின்றன 
என்னைப் பார்த்து  ஏளனமாய்...


சிந்தனையை  முதலீடாக வைத்து
சீர்மிகு கவிதை எழுதி 
எழுத்து வியாபாரம் செய்ய..

உ...லாபம் என்று 
ஒரு  கவிதை
எழுதத் தொடங்கி 
ஓராயிரம் கவிதைகள் 
எழுதிவைத்தேன்
எல்லாம்.............?
உ...ஊ...என்று 
ஊ...த்திக்கிட்டதே!

அய்யோ...பாவம் 
எழுதிய கவிதையில் 
எதுவும்  இல்லையாம்
உண்மை என்பது 
இல்லவே இல்லையாம் 

அதனால்....

இன்னும் எழுதாத கவிதைகள் 
இருக்கு என்னுள் ஏராளமாய்...
எல்லாம் சிரிக்கின்றன 
என்னைப் பார்த்து  ஏளனமாய்...
 
உங்களை ஓன்று கேட்கின்றேன்
அய்யா.... 
உண்மை இருந்தால்
அவை எப்படிக் கவிதையாகும்...?

அதனால்தான் 
அன்றே சொன்னார் 
அய்யன் வள்ளுவர்....
குறள் 423:
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

(குறிப்பு-உண்மையான கவிஞர்கள் யாரையும் இங்கே குறிப்பிட்டு எழுதவில்லை........என்னைப் போன்ற போலிக் கவிஞர்களுக்கே இது)  

கவிஞன்டா.......உண்மையானக் கவிஞன்டா 






இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1