google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: திருச்சி திமுக மாநாடு-சொன்னதும் சொல்லாததும்

Sunday, February 16, 2014

திருச்சி திமுக மாநாடு-சொன்னதும் சொல்லாததும்

ஷங்கர் திரைப்படத்தில் வருவது போன்ற ஒரு  பிரமாண்டமான அரங்கில்  திருச்சி திமுக மாநாடு...நமக்கு சொன்னது என்ன? சொல்லாதது என்ன? இந்த மாநாட்டால் யாருக்கு என்ன பயன்?




இந்த 91 வயதிலும் வாலிப முருக்குடன் கலைஞர் ஓய்வு இன்றி அரங்கத்தில் முழுநேரமும் அமர்ந்திருந்தது ஆச்சரியம் எதுவுமில்லை அவர் அப்படித்தான் அவரது உடலுக்குத்தான் வயதானது உள்ளம என்றும் இளமையானது என்று   இன்றைய இளைய உடன்பிறப்புகளுக்கு அவர் ஒரு எடுத்துக்காட்டு....

கையில் ஊன்றுகோலுடன் கலைஞரின் உறுதுணையாய் வந்த பேராசிரியருக்கு அரங்கில் முக்கியத்துவம் கொடுத்தது திமுக கட்சியில் மூத்த தலைவருக்கு உள்ள மரியாதையைக் காட்டியது...(அப்படியே கட்சிக்கும் ரொம்ப வயசாகிவிட்டது போல் தெரிந்தது....)





வேல்முருகன்-தஞ்சை சின்னப்பொண்ணு குழுவினர் வழங்கிய மாநாடு வாழ்த்துப் பாடல்கள் ஆரம்பத்தில் சிரிக்க செய்தன அப்புறம்தான் தெரிந்தது வந்தவர்களை குஷிபடுத்தவே அதுவென்று........ மானாட- மயிலாட கலா அக்கா குழுவினர் நமீதா அன் கோ...வினருடன் வந்து ஆட்டம் போடுவார்கள் என்று ஆ........ஆவலுடன் இருந்த தொண்டர்களுக்கு ஏமாற்றம்

அரங்கில்  பெரியண்ணன் காணவில்லை ஆனால் சின்ன அண்ணனும் தங்கையும் பாசமலராய் உருகியது காணக்  கண்கொள்ளாக் காட்சி.....அண்ணன் என்னடா..தம்பி என்னடா அரசியல் உலகத்திலே....

பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை பார்க்க முடியும் ஆனால் டாஸ்மாக் இல்லாத தமிழகத்தை பார்க்க முடியவில்லை என்று குஷ்பு பேசியது...அட திமுக ஆட்சியில் டாஸ்மாக் இல்லாமலா இருந்தது?...மேடையில் பெருந்தலைகள் பெருமூச்சு விட்டனர் 

Made with FreeOnlinePhotoEditor.com
 
தலைவரும் தளபதியும் தங்கள் உருக்கமான பேச்சால் கண்ணீர் கடலில் மூழ்கியது நேரு மட்டுமல்ல அரங்கத்திலிருந்த உடன் பிறப்புக்களும்தான்

 மதவாதிகளுடன் கூட்டு இல்லை என்று சொன்னதால் பாஜக-வுடன் திமுக சேராது என்று....(அண்ணேன்....சில பேர் சொல்லிட்டு செய்வாங்க ...சில பேர் சொல்லாமல் செய்வாங்க ...இவியிங்க எப்படியோ?)

தொலைகாட்சி நேரலையில் அவ்வப்போது ஒலிவாங்கி (மைக்) வாங்கிய ஒலியை விழுங்கிக்கொண்டது....  அம்மா என்று மட்டும் அது கடைசி வரைக்கும் அலறவே  இல்லை.......அவதூறு வழக்குக்கு அவசியமில்லை

இந்த மாநாட்டால் யாருக்கு என்னபயனோ....ஆனால் இன்னும் திமுக திரளான தன் உடன்பிறப்புகளை ஓன்று கூட்டி  ஒற்றுமையை அரசியல் உலகுக்கு காட்டிவிட்டது........


தமிழ்ப்பறவை @Tparavai 
அதே லாஜிக் படி பார்த்து 2011 லயும் திமுக திருச்சில மாநாடு நடத்திருந்தா,2011 ல ஜெயிச்சிருக்கலாமே உபிஸ்:))

சிறுத்தை™ @SaThi_Ya_PrIyAn 
பயபுளைங்க பிரியாணி மட்டுந்தான் வாங்கி குடுத்து கூட்டிட்டு போய் இருக்கானுங்க போல.#திருச்சியில் தி.மு.க.மாநாடு.10 கோடிக்கு மது விற்பனை

கனியன் @Kaniyen 
திருச்சி திமுக மாநாடு என்பது "பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா"வின் ஜெராக்ஸ் போலத்தான் இருக்கிறது! # கருணாநிதி புகழ் பாடும் பேச்சுக்கள்!

வெ.புகழ்மணி @pugalmani55 
தமிழர்களுக்கு எந்தவித பயனையும் திமுக மாநாடு ஏற்படுத்த போவதில்லை-சீமான்#கடலூரில் கைது செய்ய வந்தவுடன் சுவர் ஏறி குதிச்சு ஓடிய நீ எல்லாம்!

nagamoney @snagamoney 
தேதிமுக மாநாடு நடத்தினாலும் பிஜேபி திமுக சமத்துவ மக்கள் கட்சி மாநாடு நடத்தினாலும் சரி எல்லா லாபம் டாஸ்மார்க் க்கு கே !!!!



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1