google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: கெஜ்ரிவால் ராஜினாமா சரியா?

Friday, February 14, 2014

கெஜ்ரிவால் ராஜினாமா சரியா?


ஆம் அத்மியின் டெல்லி அரசின்  முதல்வர் கெஜ்ரிவால் 49 நாட்களாக முதல்வராக இருந்து செய்த சாதனைகள் என்ன..? அவரது அரசு கலைக்கப்படும் முன் அவராகவே ராஜினாமா செய்து கொண்டது அவரது கட்சிக்கு நன்மை விளைவிக்குமா...? அவரது ராஜினாமா சரியானதுதானா?


ஆம்  ஆத்மி கட்சி (சாமானியர்கள் கட்சி) காங்கிரஸ் ஆதரவுடன் டெல்லியில் ஆட்சி செய்த நாட்களில் அது செய்த சாதனை என்பது கூத்துப்படறையின் ஒரு யதார்த்தமான அரசியல் நாடகம் போல் உள்ளது அரசியலை தூய்மை படுத்த வந்த கதாநாயகன்கெஜ்ரிவால்........

-தனக்கும் தன் அமைச்சர்களுக்கும் போலிஸ்  பாதுகாப்பையும் வசதியையும் வேண்டாம் என்று காட்டிக்கொண்டது (அதனால் வாக்குறுதி அளித்தப்படி தண்ணீர் வசதி செய்யவில்லை என்று அவரது மந்திரி ஒருவர் ஒரு பெண்மணியிடம் அடிவாங்கியதுதான் மிச்சம் )

-எவ்வித ஏற்பாடுகளும் செய்யாமல் பொதுமக்கள் குறை கேட்பதாக தர்பார் நிகழ்ச்சி செய்து  அரைவேக்காடு அரசியல்வாதி என்று தன்னைக் காட்டிக்கொண்டது

-டெல்லியில் நடக்கும் பாலியல் மற்றும் பல குற்றங்களுக்கும் சரியான தீர்வு காணாமல் அவைகளுக்கு தான் பொறுப்பல்ல என்று காட்ட பொதுமக்களுக்கு இடையூறாக ஒரு முதல்வரே தர்ணா செய்து கொண்டது.

-டெல்லியில் உள்ள வெளிநாட்டு பெண்களிடம் வரம்பு மீறி அவரது அமைச்சர் நடந்து கொண்டு அவர்கள் போராட்டம் செய்யும் அளவுக்கு விபரீதமானது 

-கெஜ்ரிவாலின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையை ஆதரித்த ஊடகங்கள் முதல்வராக அவரது நடவடிக்கைகளால் வெறுப்படைந்து அவரை கோமாளியாக சித்தரித்தது  

அதேநேரம்  ஒரு சமுக ஆர்வலரான கெஜ்ரிவால் அரசியல் கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்தில் நாட்டின் மிகப்பெரிய கட்சிகளுடன் போட்டியிட்டு வெற்றி வாகை சூடியது ஜனநாயக அரசியலில் ஒரு சாமானியன் எதையும் சாதிக்கலாம் என்பதை உலகுக்கு உரைத்த வெற்றியாளர் என்று பாராட்டுபவர் நிறைய.........

அவரது ராஜினாமா தனது ஆம் ஆத்மியின் வெற்றி டெல்லியில் மட்டும் அடங்கிப் போகாமல் வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்-பாஜக இரண்டு கட்சிகளுக்கும் மிகப்பெரிய சவாலாக வரவேண்டும் என்ற நோக்கமே என்போரும் உண்டு






















இப்படி பல  சாதனைகளுக்கு காரணமான கெஜ்ரிவால் ஜன்லோக்பால் மசோதா நிறைவேற்ற முடியாததால் தான் ராஜினாமா செய்வதாக சொல்வது மீண்டும் அவரது நாடகத்தில் உள்ள ட்விஸ்ட் என்போரும் உண்டு 

சிரிக்க சில ட்விட்கள்...........

$#@ [ ஷா ]
@ibrahimsha89 
வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததால் கெஜ்ரிவால் ராஜினாமா - காங்கிரஸ். ( அவன் மானஸ்தன் நீங்க எப்படி )

அன்புடன் தமிழ் @tamilanbudan 
ஊழலை ஒழிக்க உயிர்த்தியாகம் செய்ய தயார்: கெஜ்ரிவால் # இப்படியான வீர வசனங்களில் தான் மயங்கும் நடுத்தர வர்க்கம்!...

Sheeba @sheeba_v 
மானிட பதர்களே... கெஜ்ரிவால் ராஜினாமா பண்ணுனதே மன்மோகன் பதிவிக்கு போட்டி போடத்தான் இதுகூட தெரியாத அப்பாவியா இருக்கீங்களே!

டீ வியாபாரி @iNeesaN 
நாய்வால நிமித்த முடியாது கெஜ்ரிவால அமுக்க முடியாது

கொம்பன் @Banned_tweeter 
கெஜ்ரிவால்:"இப்ப போறேன் ஆனா திரும்பி.." 
இந்திய மக்கள்:"திரும்பி...?" 
கெஜ்ரிவால்: "வரமாட்டேன்னு சொல்லவந்தேன்."

Venkat @ideamany 
அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கெஜ்ரிவால் ஆலோசனை #எந்த பைத்தியக்கார ஆஸ்பத்திரில சேரலாம்னா

Selventhiran @selventhiran 
பன்னெடுங்காலமாக டெல்லியை தொட்டுத் தொடரும் சரித்திர சீரழிவின் நீட்சியே அரவிந்த் கெஜ்ரிவாலின் ராஜினாமா.

இரா.சசிக்குமார் @rasigan637 
வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததால் கெஜ்ரிவால் ஓடுகிறார்: காங்கிரஸ் தாக்கு.# ஓடும்போது கூட காங்கிரஸ் வேட்டிய உருவிவிட்டு ஓடுகிறார்:-P

~காளையன்~ @Aruns212 
கேப்டன் டெல்லி போனாலே திருப்பம் தான்.அப்ப கெஜ்ரிவால் ஆட்சி அமைச்சார்.இப்ப ராஜினாமா பண்ணிட்டார்

ஜிரா GiRa @RagavanG 
நந்தவனத்திலோர் ஆண்டி அவன் கொண்டு வந்தானொரு தோண்டி..அதைக் கூத்தாடிக் கூத்தாடி போட்டுடைத்தாண்டி #அரவிந்த்கேஜ்ரிவால்

Saraa Subramaniam @siravanan 
ஒரு பொலிட்டிகல் லீடர், நல்ல போராளியா மாறலாம். பட்சே... ஒரு போராளி, நல்ல பொலிட்டிகல் லீடரா மாறிட்டில்லே! #கேஜ்ரிவால்

சி.கே.சந்திரமோகன்@drckcmohan 
ஒரு சந்தேகம்: கெஜ்ரிவால் ஒரு கதாநாயகனா? இல்லை;காளானா?

பிச்சைக்காரன் @pichaikkaaran 
கேஜ்ரிவாலை காமெடியன் என சிலர் நினைக்கிறார்கள்...உண்மையில் அவர்தான் மற்றவர்களை காமெடியன்கள் ஆக்கி விட்டார்

thanks to all twitter friends..........

உங்கள் பார்வையில்..............
ஆம்  ஆத்மியின் டெல்லி முதல்வர்  கெஜ்ரிவாலின் ராஜினாமா சரியானதுதானா...?




வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.....முடிவு-22/2/2014
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1