google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: ஆம் ஆத்மியின் அரசியல் ஊழல்வாதிகள் பட்டியல் ஏன்? எதற்கு?

Saturday, February 1, 2014

ஆம் ஆத்மியின் அரசியல் ஊழல்வாதிகள் பட்டியல் ஏன்? எதற்கு?



சமீபத்தில் கேஜ்ரிவால் வாசித்த அரசியல் ஊழல்வாதிகள் பட்டியலில் காங். துணைத்தலைவர்,முன்னாள் பாஜக தலைவர் கட்காரி...இப்படி தமிழகத்திலும் சில மத்திய அமைச்சர்கள் பெயர்களும் இடம் பெற்று இன்று பெரிய சர்ச்சையானது




















ஆம்  ஆத்மியின் கேஜ்ரிவாலின் எத்தனையோ வித அரசியல் அதிரடி செயல்களில் இதுவும் ஓன்று தேர்தல் நேரத்தில் இப்படி ஸ்டன்ட் அடிப்பது மூலம் மக்கள் காங்கிரஸ்-பாஜக இரண்டு கட்சிகளையும் மறந்து ஆம் ஆத்மியை பேச வைத்த அவரது அரசியல் சாணக்கியத்தனம் என்போரும் உண்டு....

இப்படி தேர்தல் நேரத்தில் விதண்டாவாத அறிவிக்கை விடும் கேஜ்ரிவாலின் இந்தச் செயல் அவரது சமீபத்திய சட்டவிரோத தர்ணா போன்றும் கேலிக்கூத்தான  தர்பார் நிகழ்ச்சி போன்றும் நகைப்புரிய செயல் என்போரும் உண்டு..........

ஆனால் இவ்வளவு நாட்கள் கழித்து தேர்தல் நேரத்தில் இப்படி  கேஜ்ரிவால் போட்ட பட்டியலில் பெரும்பான்மை இடத்தை பிடித்திருப்பவர்கள் இன்று அவருக்கு டில்லியில் ஆதரவு கொடுத்து முதலமைச்சராக வைத்திருக்கும் காங்கிரஸ்வாதிகள் என்பதை அறிந்தே அவர்களுக்கு ஆத்திரமூட்டி நாளை ஆட்சி கலைப்புக்கு காங்கிரஸ் ஈடுபடுமானால் அது ஆம் ஆத்மி  கட்சிக்கு மக்கள் மத்தியில் அனுதாபத்தை வரவழைக்கும் என்றும் இது  பிரதமர் பதவி எனும் திமிங்கல வேட்டைக்கு ஆசைப்படும் கேஜ்ரிவாலின் நயவஞ்சக செயல் அரசியல் அறியாமை என்போரும் உண்டு.............

அய்யோ...இரண்டு பேர் விளையாடும் சதுரங்க விளையாட்டே ரொம்ப குழறுபடி இதுல வேற இவியிங்க மூணு பேரு விளையாடப் போகிறாங்களாம் இவியிங்க நாட்டை எங்க கொண்டு விடப் போகிறார்களோ.....?























உங்கள் பார்வையில்............
ஆம் ஆத்மியின் கேஜ்ரிவால் வாசித்த அரசியல் ஊழல்வாதிகள் பட்டியல்......சரியானதுதானா...? அவருக்கு  செல்வாக்கைத் தருமா...? இல்லையேல் இதுவும் கேலிக்கூத்தா..?




வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.........முடிவு-09/02/2014

ட்விட்டர்கள் பார்வையில்............
raj.tuty @i_rajtuty 
விரைவில், மாநில வாரியாக ஊழல் புரிந்தவர்கள் பட்டியல் வெளியிடப்படும்: ஆம் ஆத்மி # முதல்வன் டூ ரமணா

ஆல்தோட்டபூபதி @thoatta 
சார் ஆம் ஆத்மி கட்சிக்காரங்க ஏமாத்திட்டாங்க சார், இந்திய ஊழல்வாதிகள் லிஸ்ட்ன்னு நம்ம இந்திய வாக்காளர் லிஸ்ட கொடுத்திருக்காங்க சார்

Shanmugasundharam.V @sundharamshan 
மாநில அளவிலான ஊழல்வாதிகள் பட்டியல் விரைவில - ஆம் ஆத்மி. - இதிலும் தமிழகம் முதலிடம் பிடித்து பெருமையை தக்க வைத்துக் கொள்ளுமா. .

வீம்பு @SEKARANS 
சினிமாவில் வடிவேலு நகைச்சுவைக்கு ஈடாக உள்ளது #ஆம் ஆத்மியின் செயல்பாடுகள் # அரசியலில் ஒரு நகைச்சுவை கட்சி

மா.ரஞ்சித்குமார் @ranchitkumar_m 
லூசுமாதிரி தினமும் ஊழல்பத்தி பேசிகிட்டிருந்தா எல்லாரும் இவங்கள காமெடியா பார்க்க ஆரம்பிச்சிடுவாங்கன்னு ஆம் ஆத்மிக்கு புரியுமா புரியாதா?!

மா.ரஞ்சித்குமார் @ranchitkumar_m 
உங்க ஆம்ஆத்மி கட்சிகாரங்கள தவிர இந்தியால இருக்கற பூரா பயலுகளும் ஊழல்வாதிங்கதான்.எல்லாரையும் புடிச்சி ஜெயில்ல போடுங்க கேஜ்ரிவால் சார்!

தினமணி @DINAMANI 
ஊழல் பட்டியலில் கேஜரிவால் பெயரை முதலிடத்தில் சேர்த்திருக்க வேண்டும்: ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளரும் தில்லி ம... bit.ly/LxOzg3

 The Princess @rajakumaari 
டெல்லியில் ஆம் ஆத்மியின் ஒரு மாத கால ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.யார் சொன்னா !?! கெஜ்ரிவாலே சொன்னாரு :)


விரைவில், மாநில வாரியாக ஊழல் புரிந்தவர்கள் பட்டியல் வெளியிடப்படும்,அப்புறம் ஊர் வாரியாக..அப்புறம் தெரு வாரியாக.. வீடு வாரியாக#ஆம் ஆத்மி


 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1