google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: கேப்டனின் உளுந்தூர்பேட்டை-சினிமா விமர்சனம்

Sunday, February 2, 2014

கேப்டனின் உளுந்தூர்பேட்டை-சினிமா விமர்சனம்


ஒபாமா வரை ஆவலுடன் எதிர்பார்த்த புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த்- அண்ணியார் பிரேமலதா இணைந்து நடித்த  உளுந்தூர்பேட்டை (ஊழல் எதிர்ப்பு மாநாடு) என்ற தேர்தல் அதிரடி காமெடி  திரைப்படம் நேற்று கேப்டன் டிவியில் வெளியாகி சக்கப்போடு போட்டது.........
 




                   உளுந்தூர் பேட்டை 
                                     (ALL ROADS LEAD TO ULUNTHOORPET)  












                  உளுந்தூர் பேட்டை












இப்படத்தின் கதை........ கடல் இல்லாத விழுப்புரம் மாவட்டம்  உளுந்தூர்பேட்டையில் தன் தொண்டர்களால் தண்ணி (டாஸ்மாக் தண்ணி அல்ல) நிரப்ப கேப்டன் எடுத்துக்கொண்ட முயற்சி 

 தேமுதிக மக்கள் கடலென திரண்டிருக்க கேப்டன் கை சூப்பிக்கொண்டு...சாரி.. கூப்பிக்கொண்டு  வந்து ஆளுயர முரசை அடித்து கிழிக்க.....


கடல் தண்ணீரில் மிதந்துகொண்டிருந்த தொண்டர்கள்   பீர் பாட்டிலை திறந்ததும் பொங்கும் நுரை போல ஆர்பரித்து பொங்கியது காணக் கண்கள் கோடி வேண்டும் 


தல வீரம் படத்தில் வரும் அண்ணன்டா....தம்பிடா...ஸ்டைலில் வேஷ்டியும் வெள்ளை சொக்காவுமாக சில துணை நடிகர்கள் மைக்கில் யாரோ ஒரு அம்மாவை கடித்து குதற....

மேடை எதிரே  அமர்ந்திருந்த கேப்டன் அவ்வப்போது அண்ணியார் காதில்.....அவியிங்க எதையாவது மப்புல வாந்தி எடுப்பாயிங்க அப்புறம் நா ஊர் ஊரா கோர்ட் வாசப்படில காத்துக்கிடக்கனும் என்பதுபோல் கிசுகிசுக்க..... 


உடனே மஞ்சள் சேலை அணிந்திருந்த  அண்ணியார் பிரேமலதா ஆவேசத்துடன் துர்கா தேவிபோல் மேடை ஏறி ஏதேதோ பேச.....அய்யோ..பாவம் அரண்டு போன மைக்கும் ஸ்பீக்கரும்  தொண்டையில கிச்சு கிச்சு....? என்பது போல்  விக்கி விக்கி அழ ஆரம்பித்துவிட்டன 

கடைசியில் கிளைமாக்ஸ் காட்சியாக கேப்டன் மேடையில் தோன்றி மக்களே..........என்று உளற..ச்சே...அலற.... உற்சாகத்தில்  தொண்டர்கள் மேடை நோக்கி ஓடிவர மேடையே தள்ளாடியது..... 


ஆனால்...அடேய்.....என்று ஆவேசத்தில் நாக்கை கடித்துக்கொண்டு ஒரு விரலை கேப்டன் காட்டும் போதெல்லாம் எடிட்டர் ஏகாம்பரம் குத்துப்பாட்டு போட்டு படத்தின் விறுவிறுப்பை குறைத்துவிட்டார் 

கேப்டன்  எதையாவது பேச வேண்டுமே என்று கண்ணாடி போட்டு பேப்பரை பார்த்தால் எந்த வெங்காயமோ எதுவும் எழுதாமல் வெறும் பேப்பரை வைச்சிருக்கான் அந்த பன்ரொட்டி இருந்தா இப்படி நடக்குமா...? அட..அதுக்கு கூடஅரங்கம் அதிர கரகோஷம்......ஸ்டைலு  


உச்ச கட்ட காட்சியில் கேப்டன் குறிவைத்து தாக்கியது போலிஸ் காரங்களைத்தான்....... யோவ்.. எத்தனை படத்தில்  நான் போலீஸாக நடித்துள்ளேன் இனிமே நானும் சரி என் மகனும் சரி யாரும்  போலீஸாக நடிக்க மாட்டோம்....என்று அதிரடியாக அறிவிக்க அத்துடன் வணக்கம்....
(நல்லவேள அந்த நேரம் எந்த காக்கி சட்டை போட்ட போலிசும் அவரு பக்கத்தில இல்ல இருந்தா ஜில்லாவுல நம்ம தளபதி மாதிரி கோணி ஊசியால டிக்கியில குத்தியிருப்பாரு.......கேப்டண்டா...)


ஆனாலும் பெரிய மருத்துவர் அய்யா -சின்ன மருத்துவர் அய்யா இருவரும்  அப்பா-மகன் வேடத்தில் இணைந்து நடித்த மாமல்லபுரம் (சித்திரை முழுநிலவு) பஸ் எரிப்பு...மரம் வெட்டுதல்...போன்ற பயங்கர சண்டைக்காட்சிகள் உள்ள அதிரடித் திரைப்படம் போல் இல்லாமல் கேப்டனின் உளுந்தூர்பேட்டை நல்ல நகைச்சுவை காமெடி படம் என்று நேற்று டிவிட்டர் விமர்சகர்கள்............. 

                                         thanks_YouTube-by saitanz


சர்.சுபாஷ்@su_boss2 
இனி போலீசாக நடிக்கமாட்டேன்-விஜயகாந்த்.# ஏன் கேப்டன்..? கெணத்தை காணலைன்னு யாரும் வந்து கம்ப்ளைன்ட் கொடுத்துட்டாங்களா.??

கனியன்@Kaniyen 
தேமுதிகதான் அடுத்து ஆட்சியில் உட்காரப்போகிறது! - விஜயகாந்த் # பார்த்து உட்காருங்க கேப்டன், உட்காருர இடத்தில எவனாவது ஆப்பை வச்சிடப்போறான்!

Balasubramanian@gr8balu 
“டாஸ்மாக் கடை மூடுவதற்க்குள் மாநாட்டை முடித்து கொண்ட கேப்டனுக்கு, உளூந்தூர் பேட்டை 25 வார்டு சார்பாக நன்றிகள்...”

 afsankaleel@afsankr 
கேப்டன் டிவி நேரலை இடையிடையே துண்டிக்கபட்டதற்கு காரணம் நாக்கு துருத்தி அசிங்க அர்ச்சனையால் தொண்டர்கள் தண்டிக்கப்பட்டதே...

  பசி.!@Pa_Siva 
தனித்துப் போட்டியிட தொண்டர்கள் விருப்பம்- ஆனால், தலைமை முடிவையும் ஏற்பர்: விஜயகாந்த்!# நீங்க அடிச்ச சரக்குக்கு நாங்க ஊறுகாயா கேப்டன்..

சேலத்துக்காரன்™@gouthamrajan 
பிரதமரை முடிவு பண்ற இடத்தில கேப்டன் இருக்கிறார்....அக்கா நல்ல வேலை அவரை...பிரதமர் ஆக்குவோம்ன்னு சொல்லாம விட்டிங்களே...!!!

அறுந்த வாலு@_ivak 
கேப்டன் தெளிவா பேசின பேச்சை கேட்கும்போது ஊழல் ஒழிப்பு மாநாடு மாதிரி தெரியலை, உளறல் ஒழிப்பு மாநாடு மாதிரி தெரிஞ்சுது.

இளந்தென்றல்@Elanthenral 
என்னையா பெரிய லெனின் மோகன், கேவி ஆனந்து ...கேப்டன் டிவி குழு மாதிரி உங்களால லைவா எடிட்டிங் & சென்சார் பண்ண முடியுமா?

 சேலத்தான்@ItsWarma 
கண்ணாடி போடும் ஸ்டைல பாத்து கை தட்டனாங்க பாரு, அவரு பேச்சப்ப கூட அப்படி யாரும் தட்டல.. # ரெண்டு டைம் கண்ணாடி கலட்டி போட்டாருயா எங்க கேப்டன

ட்விட்டெர் போராளி@solosaysit 
மாநாடு நடத்தி ஊழல்ல ஒழிச்சாரோ இல்லயோ விஜய் டிவி பாத்துட்டு இருந்த மக்கள கேப்டன் டீவீ பாக்க னவச்சதே ஒரு சாதன தான்

டுவிட்டர் பவன்.@bommaiya 
பேசாம கேப்டனுக்கு பதில் அண்ணியார் கட்சிய தலைமை ஏற்று நடத்தலாம்... # ஓரளவு நல்லா பேசுறாங்க...

இன்னும் நிறைய இருக்கு....நமக்கு இது போதுமல...thanks to all twitter friends

 கட்சியின் கடைசி தொண்டன் முதல் ஒபாமா வரை ஆவலுடன் எதிர்பார்த்த தேர்தல் கூட்டணி பற்றிய அறிவிப்பு வெங்காய சட்டணி போல்..........ஒன்னுமில்லைனேன் 


எவனோ உளுந்தூர் பேட்டையில் இருக்கிறவங்க அம்புட்டுபேருக்கும் ஊழல் வியாதி புடிச்சிருக்குன்னு கேப்டனுக்கு மொட்ட கடுதாசி போட.. நம்ம கேப்டனும் இளைய தளபதி விஜய் ஸ்டைலில்...


 உளுந்தூர் பேட்டை 
(ALL ROADS LEAD TO ULUNTHOORPET)   
ஆபரேசன் ஊழல் எதிர்ப்புனு ஒரு படம் எடுத்து விட்டிருக்காரு.....


                    உளுந்தூர் பேட்டை





                                     (ALL ROADS LEAD TO ULUNTHOORPET)                                    
கேப்டனின் உளுந்தூர்பேட்டை படம் எப்படியிருக்கு...?

(யோவ்..பதிவரே இதுக்கெல்லாம் கருத்துக்கணிப்பு வச்ச உன்ன விழுப்புரம் கடல்ல தூக்கி போட்டு விடுவோம்......ஆங்... )

**************************************************
 
 விரைவில்.................











கலைஞர் வழங்கும் 
தளபதி  ஸ்டாலினின்.......
                 திருச்சி மாநாடு 
            தமிழரே கொண்டாடு

                                       (இது குடும்பப் படம் அல்ல)

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1