google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: விஜய் பாடிய கண்டாங்கி

Monday, December 23, 2013

விஜய் பாடிய கண்டாங்கி


விஜயின் ஜில்லா திரைப்படத்தில் வரும் கண்டாங்கி....திரையிசைப் பாடல் கவிப்பேரரசு வைரமுத்து வார்த்தைகளில்  தேனருவியாக காதுகளில் பாய்கின்ற மெல்லிசை........பாடிய குயில்கள் விஜய்-ஷ்ரேயா கோஷல்



Made with .freeonlinephotoeditor.com
 
இதுவரை விஜய் பாடிய அனைத்துப்பாடல்களும் ஒரு விதமான குத்து கலக்கலாக இருக்கும்  ஆனால் இதுவரை நாம் கேட்டிறாத ஒரு மெல்லிசையை...காதல் மெலோடியை   விஜய் மூலம் நமக்கு தந்த இன்னிசை வேந்தன் டி.இமானுக்கு நன்றி சொல்ல வேண்டும் படத்தில் வரும் இனிமையான டூயட் உணர்வை வெளிப்படுத்தும் இமானின் பிரத்தியேக வாத்தியங்களின் இசைக் கலவை....

காதலன்.......
கண்டாங்கி கண்டாங்கி கட்டிவந்த பொண்ணு
கண்டாலே கிறுக்கேற்றும் கஞ்சா வச்ச கண்ணு

கண்டாங்கி கண்டாங்கி கட்டிவந்த பொண்ணு
கண்டாலே கிறுக்கேற்றும் கஞ்சா வச்ச கண்ணு
அந்த கண்ணுக்கு அஞ்சு லட்சம் தாரேண்டி
அந்த நெஞ்சுக்கு சொத்த எழுதிதாரேண்டி
முத்தம் தாரியா.....? ஒ....ஹோ.....ஹோ 

காதலி..........
கண்டாங்கி கண்டாங்கி கட்டிவந்த பொண்ணு
கண்டாலே கிறுக்கேற்றும் கஞ்சா வச்ச கண்ணு
இந்தக் கண்ணுக்கு அஞ்சு லட்சம் போதாது
இந்த நெஞ்சுக்கு சொத்தெழுதி தீராது
தள்ளி நில்லையா....

காதலன்........
அடி உன் வீடு தல்லாக்குளம் '
என் வீடு தெப்பக்குளம்
நீரோடு நீர் சேரட்டுமே
அழகர் மலை கோயில் யானை வந்து
அல்வா தின்பது போலே
என் ஆசை உன்ன திங்கட்டுமே

ஒத்தைகொத்த அழைக்கும் அழகு
ஒத்த பக்கம் ஒதுங்கும் பொழுது
புத்திக்குள்ள அரிக்குது நேத்திக்குள்ள துடிக்குது

காதலி..........
வெள்ள முழி வெளியே தெரிய
கள்ள முழி முழிக்கும் போது
என் உசிரு ஒடுங்குது ஈரக்கொல நடுங்குது

காதலன்.........
சின்ன சின்ன பொய்யும் பேசுற
சில்லுனுதான் சூடும் எத்துற 

காதலி.....
நீ பார்த்தாக்க தென்னம்மட்ட
பாஞ்சாக்க தேகம் காட்ட
பாசாங்கு வேணாம் சுந்தரரே

காதலன்.....
நீ தேயாத நாட்டுக்கட்ட
தெரியாம மாட்டிக்கிட்ட
என் ராசி என்றும் மன்மதனே

காதலி......
கண்டாங்கி கண்டாங்கி கட்டிவந்த பொண்ணு
கண்டாலே கிறுக்கேற்றும் கஞ்சா வச்ச கண்ணு

காதலன்....
கண்ணுக்குள்ள இறங்கி இறங்கி
நெஞ்சுக்குள்ள உறங்கி உறங்கி
என் உசிர பறிக்கிற
என்ன செய்ய நினைக்கிற

காதலி......
அம்பு விட்டு ஆள அடிக்கிற
தும்பு விட்டு வால புடிக்கிற

காதலன்.....
அடி...தாலி இல்லாத சம்சாரமே
தடையில்லா மின்சாரமே
விளக்கேத்த வாடி வெண்ணிலவே

காதலி.....
எந்தன் மார்போட சந்தனமே
மாராப்பு வைபோகமே
முத்தாட வாயா முன்னிரவே

காதலன்......
கண்டாங்கி கண்டாங்கி கட்டிவந்த பொண்ணு
கண்டாலே கிறுக்கேற்றும் கஞ்சா வச்ச கண்ணு

காதலி.....
கண்டாங்கி கண்டாங்கி கட்டிவந்த பொண்ணு
கண்டாலே கிறுக்கேற்றும் கஞ்சா வச்ச கண்ணு
இந்தக் கண்ணுக்கு அஞ்சு லட்சம் போதாது
இந்த நெஞ்சுக்கு சொத்தெழுதி தீராது
தள்ளி நில்லையா....
கண்டாங்கி....கண்டாங்கி......

காதலன்.....
ம்ம்ம்ம்ம்ம்ம்.....

காதலி.....
கண்டாலே கிறுக்கேற்றும்

காதலன்....
 கஞ்சா வச்ச கண்ணு

 

மேற்படி கவிப்பேரரசு வைரமுத்து செட்டிநாட்டு பாரம்பரியமிக்க பருத்தி சேலை கண்டாங்கி என்ற வார்த்தையை பிரதானமாக இப்பாடலில் எழுதி...  இப்படி யதார்த்தமான வார்த்தை நூலிலைகளால் டி.இமானின் இசைத் தறியில் விஜய்-ஷ்ரேயா கோஷல் குரல்களில் நெய்யப்பட்ட கண்டாங்கி பாடலைக் கேளுங்கள்


                                       thanks-YouTube-by Qame
கவிப்பேரரசு இப்பாடலில் மதுரை மண்ணுக்கே உரிய கிராமத்து வார்த்தைகளை தாராளமாய் விதைத்திருக்கின்றார்  அய்யன் வள்ளுவன் முதற்கொண்டு இன்று வரை காதலியின் கண்களை பற்றி பாடாத கவிஞர்களே இல்லை எனலாம் கவிப்பேரரசோ கிராமத்து காதலி என்பதால் கஞ்சா வச்ச கண்ணு...என்கிறார் நகரத்து காதலியாக அவள் இருந்தால் என்ன எழுதியிருப்பார்...? விஸ்கி வடியும் கண்ணு...?




காதலியின் ஒரு முத்தத்தின் விலை அஞ்சு லட்சம் என்றும் போதவில்லை என்றால் என் சொத்து முழுவதையும் 
எழுதிதருகின்றேன் என்று காதலன் சொல்ல...
அதற்கோ காதலி உடனே சரியென்று சொல்லிவிட்டால் என்னாவது? கொஞ்சம் மறுப்புக்காட்டி.......இப்படி பிகு கட்டிய காதலியும் பொசுக்குனு மயங்கி விட்டாள்.....காதலன் சொன்ன தடையில்லா மின்சாரமே!  என்ற நிகழ்கால நிஜத்தை கவிஞர் தன்  நையாண்டி  வார்த்தைகளில் வடிக்கிறார்



விஜய் பாடிய கண்டாங்கி...கண்டாங்கி படலை one of the best melodies in 2014.என்று பாராட்டுகின்றது top10cinema வலைத்தளம்   
அழகர் மலை கோயில் யானை வந்து
அல்வா தின்பது போலே


என் ஆசை உன்ன திங்கட்டுமே...என்ற வார்த்தைகளை பாராட்டும் cinemalead வலைத்தளம் இப்பாடலை.........ஒரு தேவகானம் (A heavenly melody) என்கின்றது 


                                  thanks YouTube by Vijay in Jilla


Sibiraj@Sibi_Sathyaraj 22 Dec
With 'Kandangi' song in #Jilla,Vijay anna has proved that he can do justice to any song irrespective of its genre...Simply superb!

RajanLeaks@RajanLeaks 
கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு... #அணில் ஷ்ரேயா கோஷல் ரெண்டும் செமயா பாடிருக்குங்க! ;-)

தலைவன்@TheRPR 
கஞ்சாவின் அடிச்ச போதைய தருதுடா சாமி ஸ்ரேயா கோஷலின் குரல் #கண்டாங்கி #Jilla

சந்துல சவுண்டு ®@iamsubramani 
#ஜில்லா - கண்டாங்கி பாட்டு நல்லா இருக்கே !! விஜய் ஆஸம் வாய்ஸ் !! வழக்கம் போல் ஸ்ரோயா க்ளாஸ் !! #மை_டக்கு

Ano dexil@Dexilsam 
சின்ன சின்ன பொய்யும் பேசுற..ம்ம்ம்..#கண்டாங்கிகண்டாங்கி சொக்க வைக்கும் விஜய் வாய்ஸ் .. 

ℳr.வண்டு முருகன் ©@Mr_vandu 
கண்டாங்கி,கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு என்ன வாய்ஸ்யா...that யெய்ய சிவனான்டி நீ பெத்த மகனாயா இப்டி அழகா பாடனது moment

வெப்பன் சப்ளையர்@purusothjee 
"கண்டாங்கி" கேட்ட மொத தபாவே கிறுக்கு புடிச்சி போச். அந்த பாடல் மட்டும். #விசய்_தி_சிங்கர் 

சி.பி.செந்தில்குமார்@senthilcp 
கண்டாங்கி சேலையில் உனைப்பார்த்த பின் என் கண் DONKEY யைப்பார்த்தாலும் கிளியோபாட்ராவாத்தெரியுதே?

Sri@Sricalifornia 
கண்டாங்கி கண்டாங்கி ... விஜய் குரல் கற்கண்டு:) கரையுது எம்மனசு தன்னாலே..

இப்படி  கணக்கு வழக்கு இல்லாமல் இன்னும் நிறைய ட்விட்டர் அண்ணன்மார்கள் கீச்சிதள்ளுராயிங்க............
அது சரி உங்கள் பார்வையில்.....
விஜய் பாடிய கண்டாங்கி...கண்டாங்கி பாடல் எப்படியிருக்கு?


வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி............முடிவு-30/12/2013     





இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1