google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: அரவிந்த் கெஜ்ரிவால் எத்தனை நாள் முதல்வாராக இருப்பார்?

Thursday, December 26, 2013

அரவிந்த் கெஜ்ரிவால் எத்தனை நாள் முதல்வாராக இருப்பார்?


ஷங்கரின் முதல்வன் திரைப்படத்தில் அர்ஜுன் ஒரு நாள் முதல்வராக இருந்து.... அப்புறம்  ரகுவரனின் எதிர்ப்பால் அரசியலில் குதித்து முதல்வராக ஆனது போல் இன்று அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி..........



arvindkejriwal

ஆனால் ஒரு வித்தியாசம் ஊழல் என்று யாரை எதிர்த்து ஊளையிட்டாரோ அந்த காங்கிரஸ் கட்சியின் ஆதரவோடு முதல்வராகிறார்
பாரதிய ஜனதாவை ஆட்சிக்கு வராமல் தடுக்க இரு கட்சிகளும் சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்திருப்பதாக பாரதிய ஜனதா கூறியுள்ளது.
ஊழலை ஒழிக்க போவதாக கூறி கொண்டு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஆம் ஆத்மி கட்சி ஈடுபட்டால் ஆதரவு வாபஸ் பெறப்படும் என காங்கிரஸ் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆனாலோ............
முந்தைய காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா ஆட்சிகளில் பணியாற்றிய ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் கூறுகின்றார்
இப்படி ஏகப்பட்ட விக்கலுடனும் சிக்கலுடனும் பதவி ஏற்கும் கெஜ்ரிவால் எத்தனை நாட்கள் முதல்வராக இருப்பார்..........? 

ஆனாலும் அவரது எழுச்சியை பாராட்டுவோம் இனிவரும் காலங்களில் அவரது செயல்பாடுகளே இனிவரும் தேர்தல்களில் அவருக்கு நிலையான செல்வாக்கை தரும்..........

"காங்கிரஸ்  தன ஆதரவை விலக்கிக்கொண்டால்...முரடர்கள் என்றும் வில்லன்கள் என்றும் அழைப்பேன்"......கெஜ்ரிவால்
Arvind Kejriwal: We have called Congress's bluff; if they withdraw support, they'll be the villains

ஆம்  ஆத்மியும் நம்ம கீச்சர்களும் 

வெ.புகழ்மணி@pugalmani55
அரசு வேலையில் இருப்பவர்கள் உயர்பதவி முதல் ஊழியர்கள் வரை குழந்தைகளை அரசுபள்ளியில் தான் சேர்க்கவேண்டும் மீறினால்  வேலைநீக்கம்-ஆம் ஆத்மி#செம!

ஆல்தோட்டபூபதி@thoatta 
ஆமஆத்மி கட்சியும் அதன் சின்னம் போலத்தான், கட்ட அவிழ்த்தா போதும், ஒவ்வொன்றாய் பிரிந்து விழுந்து விடும்.!
அறுந்த வாலு@_ivak 
காங்கிரஸ் ஆதரவோட ஆம் ஆத்மி ஆட்சியமைக்கிறத பார்க்கும்போது வெளக்குமாத்துக்கு பட்டு குஞ்சம் கட்டின மாதிரி இருக்கு.!

சி.பி.செந்தில்குமார்@senthilcp c
அன்பே! காங்கிரஸ் சின்னத்தை உன் இடையில் வைத்தேன்.அதற்கு ஏன் கோபப்பட்டு ஆம் ஆத்மி சின்னத்தைக்கையில் எடுக்கிறாய்? # வீடு கூட்டப்போறது நான்

ஜான்சன்@maryjonesna 
ஆம் ஆத்மி கட்சி மகளீரணி அவுங்க சின்னத்த எடுத்துட்டு வீடு வீடா ஒட்டு கேட்டு வரத நெனச்சாத்தான் கலக்கமா இருக்கு

 கூத்தாடி@Koothaadi 
ஆம் ஆத்மின்னா எனக்கு கெஜ்ரிவால் நியாபகம் எல்லாம் வரல.. கேத்ரீனா தான்... ம்ம்ம்ம்..... என்னா மாம்பழம்....

 Satheesh Kumar @saysatheesh 
ஹிந்தியில் "ஆம்" னா மாங்காய் ன்னு தெரிஞ்சதில் இருந்தே, எந்த தலைவராவது "ஆம் ஆத்மி" னு சொன்னா "மாங்காய் மடயன்"னு திட்றாங்களோன்னே தோணுது!

இபபடியிருக்க................
உங்கள் பார்வையில்...........
காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் ஆட்சி அமைப்பதை நீங்கள்  ஆதரிக்கின்றீர்களா...?




வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி...


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1