google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: தனிமையில் ஒரு பயணம்

Monday, December 16, 2013

தனிமையில் ஒரு பயணம்

தனிமையில் ஒரு பயணம் என்ற தலைப்பைப் பார்த்ததும் இது சூப்பர் ஸ்டார் ரஜினி போன்று ஓர் ஆன்மீக பயணம் என்று நினைத்து விடாதீர்கள் அவ்வப்போது என் வேலைப் பழுவின்வியர்வை துடைக்க யாருக்கும் தெரியாமல் தனிமையில் நான் செல்லும் பயணம் பற்றி.......




நான் ஒன்னும் கல்லுடைக்கும் கடினமான உடல் வேலை செய்பவன் அல்ல எனது கட்டுப்பாட்டில்  நூறு பேருக்கு மேல் வேலைசெய்யும் போட்டிகள் நிறைந்த ஒரு வியாபார நிறுவனத்தில் தலைமை பொறுப்பில் ஓய்வின்றி விடுமுறையின்றி வேலை செய்யும் எனக்கு அவ்வப்போது என் மீதே வெறுப்பு வந்துவிடும் அப்போதெல்லாம் இப்படி யாருக்கும் தெரியாமல் ஒரு சிறு பயணம் செய்வேன்...

இப்பயணம்...  ஏதாவது ஒரு பேருந்தில் ஏறி அமர்ந்து அப்பேருந்தின் கடைசி நிறுத்தத்தில் இறங்கி விடுவேன் அங்கே போன வேகத்தில் ஒரு தேநீர் அல்லது சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு அடுத்தப் பேருந்தில் மீண்டும் ஏறிய இடத்துக்கே வந்துவிடுவேன்....என்னடா இப்படியும் ஒரு லூஸா என்று உங்களுக்கு என்ன தோன்றலாம் 

ஆனால் அதில் உள்ள ஆழ்ந்த அமைதியும் அது தரும் சிந்தனைத் தெளிவும் ஒரு முறையேனும் அனுபவித்துப் பாருங்கள் இப்படிப்பட்ட பயணம் உங்களுக்குள் நிறைய மாற்றங்களை விதைக்கும்
அப்படியொரு தனிமை பயணம் சமீபத்தில் மேற்கொண்டேன் 

எங்குப் போவது...? என்ற குறிக்கோள் இல்லாமல் நேராகச் சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் சென்றேன் அங்கே பாண்டிச்சேரி செல்லும் குளிர்சாதன வால்வோ பேருந்தில் ஏறி அமர்ந்து.......அப்படியே ஒய்யாரமாக இருக்கையில் சாய்ந்து கொண்டேன் பேருந்தில் என்னைச் சேர்த்து இருபது பேர்களுக்கு மேல்..காதுகளில் பழைய திரைப்பாடல் இன்னிசை ஒலிக்கும் ஹெட்-போன் மாட்டிக்கொண்டு............

3 மணி நேரமாகச் சொகுசாகப் பேருந்து ஊர்ந்து பாண்டிச்சேரி   சென்றடைந்த போது நேரம் மதியம் 1 மணி........அதற்குள் ஆயிரமாயிரம் சிந்தனைகள் அன்றாடம் நான் சந்திக்கும் மனிதர்கள் பற்றிய கணிப்பு...என்னுள் பயம் காட்டிக்கொண்டிருந்த சில பிரச்சனைகளுக்குத் தீர்வு......ஆனாலும் ஏதோ ஓன்று விடை தெரியாமல் நெருஞ்சி முள்ளாக நெஞ்சுக்குள் உறுத்திக்கொண்டு.............

பாண்டிச்சேரி பேருந்து  நிலையம் அன்று மிகுந்த நெருக்கடியாக இருந்தது சாலையில் கூட நிறைய பேர் நின்று கொண்டும் நடந்து கொண்டும்..நானும் சாலை  ஓரமாக நடந்து சென்று ஒரு தேனீர் அருந்தினேன்......மீண்டும் பேருந்து நிலையம் நோக்கி வரும்போது ஒரு ஒரு மரத்தடியில் நின்றேன் அப்போது இந்தக் காட்சியைக்  கண்டேன்
நடைபாதையின் ஓரமாக ஒரு 60 வயதுக்கு மேல் உள்ள முதியவர் தனது பையிலிருந்து ஒரு பிளாஸ்டிக் கோணி எடுத்து விரித்தார்.....தான் அணிந்திருந்த தோல் செருப்பைத் துடைத்து அதன் மீது வைத்தார் பையிலிருந்து குத்தூசி,கத்தி,சுத்தியல்,ஷூ பாலிஷ் டப்பாக்கள் சில எடுத்து அடுக்கி வைத்தார்.........செருப்பு தைக்கும் தொழிலாளி 

ஒரு மணிநேரம் அவரைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன் பேருந்து நிலையத்திற்குச் செல்லும் மூன்று பேர்கள் தங்கள் அருந்து போகும் நிலையில் உள்ள  செருப்புகளை அவரிடம் கொடுத்து சரி செய்து சென்றார்கள்....நானும் எனது செருப்புகளைக் கொடுத்துப் பாலிஷ் போடகொடுத்தேன் இருபது ரூபாய் கூலி...ஆக மொத்தம் அவர் சம்பாதித்தது ஐம்பது ரூபாய் கொஞ்ச நேரத்தில் மீண்டும் அவர் தன் உடமைகளை அள்ளி பையில் வைக்கத் தொடங்கினார் 

அட...கட்டிங்குக்குக் காசு தேற்றிவிட்டாரோ...? மூட்டைகட்டுகிறாரே என்று நினைத்து....மெதுவாக அவரிடம்  பேச்சுக்கொடுத்தேன் 

"இப்பதான கட போட்டீங்க பெரியவரே...என்ன அதுக்குள்ளே மூட்ட கட்டிட்டீங்க...."

"இல்லை அய்யா.....நாலு ரோட்டுல நாலு இடத்தில தினமும் கடை போடுறேன் இப்ப ஸ்கூல் விடும் நேரம் ஆச்சு.......ஸ்கூல் வாசலுக்குப் போனா  பாவம் சின்னக் குழந்தைக  செருப்புகள பிச்சிக்கிட்டு வரும்...அதுதான் அங்கே போறேன்"  என்று அத்தனையையும் அவர் பையில் அள்ளிப் போட்டுக்கொண்டு நடையைக் கட்டினார் 

சுதேசி...அவரே  தொழிலாளி அவரே முதலாளி
நானும் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த சென்னை செல்லும் சாதாரணக் கட்டணம் நேர்வழி பேருந்தில் ஏறி அமர்ந்தேன்

Made with .freeonlinephotoeditor.com

இறக்கி வைத்த பாரம் இல்லாமல் போனது ஆனால் புதுசா ஒரு பாரம் நெஞ்சில்.....அதுவும் மீண்டும் சென்னை வந்து இறங்கும் போது சரியானது 
இப்படித்தான் என் தனிமை பயணங்கள் மக்களோடு மக்களாக....

thanks-the top 1st image from huffingtonpost.com
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1