உசாரு அய்யா உசாரு-இந்த
உலகம் ரொம்பப் பேஜாரு
கொஞ்சம் அசந்து தூங்கிப் பாரு
காணாமல் போகும் உன் நிஜாரு...
அய்யோ...அய்யாமார்களே! இன்று நான் சொல்லப்போவது.....
இந்த நாட்டுல வைக்கீல்கள் (மாடு தின்னுற வைக்கோல் இல்லைங்கோ இவிங்க நீதிய நிலைநாட்டுற வழக்கறிஞ்சர்கள்...அறிஞர்கள் என்றதும் அறிவாளிகள்னு நினைச்சிசா உங்க தப்புங்கோ..) என்று இருக்கின்றவர்கள் எப்படியெல்லாம் அப்பாவி மக்களை பணத்துக்காக ஏமாற்றுகிறார்கள் என்பதைத்தான் சொல்லப்போகிறேன்
இவிங்க வாழ்க்கைய ஓட்டுறதுக்கு அடுத்தவங்க வாழ்க்கையை எப்படியெல்லாம் சீரழிக்கிராயிங்க... பாருங்க
எனது நண்பர் ஒருவர் 2003-ஆம் ஆண்டுத் தொழில் செய்யக் காசோலை கொடுத்து மாதம் ரூ.5 ஆயிரம் வட்டிக்கு ரூ.1 லட்சம் கடன் வாங்கி....ரூ.80 ஆயிரம் வட்டியாகச் செலுத்தி....ஒரு கட்டத்தில் தொழிலை மூடிவிட்டார்
அந்தக் கடன் கொடுத்தவரிடம் கொஞ்சம் அசலில் தள்ளுபடி செய்யக் கேட்டு ரூ.50 ஆயிரம் தருவதாகச் சொல்ல அவரும் மறுக்கவே....
கடன் கொடுத்தவர் அந்தக் காசோலையை வங்கியில் போட்டு (நண்பரோ அதற்கு முன்பாகவே வங்கிக் கணக்கை குளோஸ் செய்துவிட்டார்) account-closed என்று திரும்ப வந்த காசோலையை வைத்து எனது நண்பருக்கு ஒரு வக்கீல் நோட்டிஸ் அனுப்பினார்...நண்பரும் ஒரு வக்கீலைப் பிடித்துப் பதில் நோட்டீஸ் அனுப்ப ரூ.2,500 பீஸ் கொடுத்து....அவரும் அனுப்பியிருப்பார் என்று ஹாய்யாக வேறு ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துவிட்டார்.
மூன்றாண்டுகள் முடிந்தப் பிறகு நண்பருக்கு எக்மோர் நீதிமன்றத்திலிருந்து கோர்ட்டுக்கு வர சம்மன் வந்தது..அவர் அதைக் கொண்டு அந்த வழக்கறிஞ்சரிடம் கொடுக்க...மறுபடியும் ரூ.5,000 வாங்கிக்கொண்டு அவரே கோர்ட்டில் பேசிக்கொள்வதாகவும் நண்பர் கோர்ட்டுக்குப் போகவேண்டாம் என்றும் எல்லாவற்றையும் அவரே பார்த்துக்கொள்வதாக நண்பரிடம் சொல்லி...ஏதோ உயர் நீதிமன்ற நீதிமான்கள் எல்லாம் அவரது அடிப்பொடிகள் போல் பேசி......
மூன்று சம்மங்களுக்கும் போகாததால்...கடன் கொடுத்த புள்ளியோ காவல்துறையில் உள்ள சில காக்கி ஆடுகளைக் கையில் போட்டு வாரன்ட் வாங்கி ஒருநாள் அவரைப் போலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல...
இப்போது நல்ல நிலையில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் நண்பரோ அதை அவமானமாக நினைத்து மாதம் 20 ஆயிரம் வீதம் ஐந்து மாதத்தில் கொடுப்பதாக எழுதிக்கொடுத்து ஒரு தவணையும் செலுத்தி அவமானத்திலிருந்து தப்பினார்
அந்த நண்பரின் வக்கீலோ அடுத்த நாளே அவரிடம் இதைச் சும்மா விடக்கூடாது என்று அவரை உசுப்பேற்றி மீண்டும் கோர்டில் வாரண்டை உடைக்க மனு போட்டு...பாவம் அவரும் அங்கே நீதிமன்ற வரண்டாவில் முட்டுக்கால் போடாத குறையாக மாலை 5 மனிவரை தவம் செய்ய...
இப்படியே 5 வருடங்கள் போனது மாதம் தோறும் கோர்ட் வாசலில் நண்பரும் தவியாய் தவீர்த்து 8 நீதிபதிகளை மாறி மாறிப் பார்த்து...பணமும் பல ஆயிரம் வரை செலவு செய்து..
வந்தது தீர்ப்பு...........
"நீர் காசோலைக் கொடுத்து எமாற்றிய குற்றத்திற்காக ரூ.5 ஆயிரம் அபராதமும் ஆறு மாதம் சிறைத்தண்டனையும் வழங்கி இந்த நீதிமாற்றம் தீர்ப்பளிக்கிறது"
நண்பரோ மயக்கமடையாத குறை
அவரது வக்கீலோ... இது எனக்குத் தெரிஞ்சதுதான் நான் அப்பீல் போட்டு உயர் நீதி மன்றத்துக்குக் கொண்டு போறேன் அங்கே நீதிபதிகள் எல்லோரும் என் நண்பர்கள்தான் கேஸ் ஒண்ணுமில்லாம பண்ணிடுறேன்..என்று சொல்லி அபராதத்தையும் கட்டவைத்து அப்பில் போடுகிறேன் என்று இன்னும் 20 ஆயிரத்தை பிடுங்கிக் கொண்டு.....
பிறகு நண்பர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு வருடம் மேல் அலைந்து கடைசியாக.....துரித நீதிமன்றம் சென்னை துறைமுகம் எதிரில் உள்ள கலெக்டர் அலுவலகம் வளாகத்திற்கு அலைந்து....
அங்கே நடந்த கதைதான் ரொம்பத் தமாசுங்க...? இதுவரை நம்ம நண்பரோட வழக்கறிஞ்சர் இந்த கேஸு விசயமாக ஒரு வெத்தலக் காம்பைக்கூட கிள்ளவில்லை அதாவது பரவாயில்லை...அவர் கிரிமினல் கேஸ் வக்கீலாம்..நண்பரோட கேஸ்...சிவில் கேஸ்
அங்கிருந்த துரித நீதிபதி தினம் இரண்டு கேஸ்களுக்குத் தீர்ப்பு வழங்குவார் அவர்கள் வெட்டும் பணத்துக்கு தக்க நல்ல தீர்ப்பு கொடுப்பார் நம்ம நபருக்கும் நீதிபதியிடம் ஏக மரியாதை.... அப்போது கோர்ட் பியூன் அவரிடம் அந்த நீதிபதி பல லட்சம் செலவு செய்து இங்கே நீதிபதியாக வந்திருப்பதாகவும் அவரது மாமியாருக்கு நெஞ்சுவலி ஆபரேசனுக்குப் பணம் இல்லை அதனால் ரூ.20 ஆயிரம் கொடுத்தால்...இவருக்குச் சாதகமாக தீர்ப்பு விற்கப்படும் என்று சொல்ல...நண்பரும் சரியென்று தலையாட்டி வைக்க
அப்போது பக்கத்து அறையில் உள்ள உழியர் ஒருவர் வந்து......
"என்ன தம்பி செக் கேஸா...? நீதிபதி மாமியாருக்கு வயிற்றுவலி என்று சொல்லியிருப்பாயிங்களே...தம்பி நீங்க படிச்சவரு மாதிரி இருக்கீங்க...உங்களுக்குத் தெரியாததா...? காசோலை கொடுத்தா ரிசர்வ் பேங்க் சட்டப்படி பணம் கொடுத்துத்தான் ஆகவேண்டும்...இப்ப தப்பிச்சாலும் அடுத்து ஹை-கோர்ட்ல நீங்க பெனால்டியுடன் பணம் கட்ட வேண்டியிருக்கும்" என்று சொல்ல.....
நண்பரும் அவருக்குக் கடன் கொடுத்தவரிடம் பேசி" யப்பா உன் ஒரு லட்சத்தைத் தந்துடுறேன் ஆளைவிடுப்பா" என்று கெஞ்ச...அவரோ வழக்குக்கும் செலவுக்கும் சேர்த்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் வேண்டும் என்று கேட்க நண்பரும் பணத்தைக் கொடுத்துப் பத்திரமாக வீடு வந்து சேர்ந்தார்
இதுவரை ஏழு ஆண்டுகளாக நண்பர் செலவு செய்த பணத்தை மட்டும் (நேரத்தை அல்ல) எழுதி வைத்ததைக் கூட்டியபோது வாங்கிய கடன் ஒரு லட்சத்தை விட நாலு மடங்கு அவருக்கு நஷ்டம் அதை நினைத்து அப்படியே அவருக்குத் தலை சுற்றிய போது.........
அவரது கைபேசி...
வெற்றி மீது வெற்றி வந்து உன்னைச் சேரும்...என்று பாடியது பேசியவர் வேறு யாருமில்ல அவரது வக்கீல்...
"நீங்க உடனே நம்ம ஆபீஸ்க்கு வாங்க...ஹை-கோர்ட்ல ஒர் அப்பீல் போடணும் அங்கே ஜட்ஜுலாம்..."
அதனால....
உசாரு அய்யா உசாரு-இந்த
உலகம் ரொம்பப் பேஜாரு
வக்கீல்கிட்டப் போயிப் பாரு-உன்
வாழ்க்கை கிழிஞ்சிப் போன நிஜாரு
(எச்சரிக்கை-இங்கே சொல்லப்படுபவைகள் யாவும் சமுக நலனுக்காக மக்கள் அறிந்து கொள்ள மட்டுமே மற்றபடி யாரையும் தனிப்பட்டும் குறிப்பிட்டும் புண்படுத்தும் நோக்கமில்லை...)
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
| Follow @PARITHITAMIL |
