google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: அலைகள்

Thursday, September 5, 2013

அலைகள்

கனவுகள் 
அலைகடலில் 
மிதந்துவரும்...


வந்த வேகத்தில் 
எல்லாம் 
அழிந்து போகும் 

ஆனாலும்.....

மீண்டும் மீண்டும் 
மிதந்து வரும் 
அந்த நம்பிக்கைகள் 
என்றும் அழியாது 

ஆழ்ந்து கவனித்தால் 
அலைகடலும் 
உனக்குப் போதிமரம் 

காயங்கள் ஆறிவிடும் 
கவலைகள் கரைந்துவிடும் 
உணர்வுகள் 
புதிதாய் பிறந்துவரும் 

விழுந்து போவோம் என்றே 
தெரிந்தப் பிறகும் 
எழுந்து வரும் அலைகளே!

நடந்து வந்த 
என் காலடிகளை
அழித்து விட்டு
எழுதிச் செல்வது என்ன?  

கடந்த காலத்தை எண்ணி 
கலங்காதே என்றா...?   

 ................................பரிதி.முத்துராசன் 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1