google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: சிகரெட்-சீக்ரெட்

Monday, September 2, 2013

சிகரெட்-சீக்ரெட்

பத்து விரல்களுக்கிடையில்
பட்டெனத் தோன்றி
பசியோடு உயிர்குடித்து
காணாமல் கரைந்து போகும்...

 

வெள்ளை சேலைகட்டி
மோகத்தில் உதட்டைப்பற்றி
ஆயுளை உறிஞ்சிவிட்டு
ஆவியாய் பறந்துவிடும்... 

 
சிலநிமிட போதைக்காக
உடன்கட்டை ஏறிவிட்டால் - உன்
அர்த்தமற்ற ஆத்மாயிங்கே
அவதரித்ததே இழுக்கு... 

 
தனக்குத்தானே கொள்ளி வைத்து
தன்னைத்தானே எரித்துக்கொள்ளும்
கேடுகெட்ட மானிடனே
பிள்ளைப்பேறு உனக்கெதற்கு...? 

 
வெள்ளைத்தோலின் காமத்தீயில்
ஆயுளற்றுப் போனவனே
விதவையென்ற பட்டம்பெற
வேண்டுமாடா மனைவியுனக்கு...? 

 
விலைகொடுத்து மரணம் வாங்கி
நெருப்பினிலே நீச்சலாடி
பாதியிலே பரலோகம்
போவதற்கா நீ பிறந்தாய்...? 

 
குழந்தைகளின் கொஞ்சலிலே
புத்துணர்வு போதையுண்டு
மனைவியின் முத்தத்திலே
மகத்தான மயக்கமுண்டு
குடும்பத்திற்கு ஒளிகொடுக்கும்
கடமையும் உனக்குண்டு... 

 
விரல்களிலே தீயேந்தும்
விளையாட்டை விட்டுவிடு
வகையின்றி மரிக்காமல்
புகையின்றி ஆன்மாபெறு 


ஒழுக்கமான மனிதனாக
ஒளிமயமாய் வந்துவிடு...!!! 

                       நன்றி.....படைப்பாளி-நிலா சூரியன் 

இந்தப் படைப்பு எழுத்து.காம் வலைதளத்தில் எனது நண்பர் நிலாசூரியனால்  எழுதப்பட்டது...இங்கேயும் இப்படைப்பைக் காணலாம்....... எழுத்து.காம்

இவரைப் பற்றி ..........

அழுவதற்கும் சிரிப்பதற்கும்
யோசிப்பவன்
இன்பத்தையும் துன்பத்தையும்
நேசிப்பவன்...

நான் வளைந்து கொடுப்பது
என் வழக்கம் - ஆனால்
பயந்து வளைந்தது
இதுவரை இல்லை...!!!
www.nilasuriyan.blogspot.com என்ற தளத்தில் மேலும் இவரது  படைப்புகளை காணலாம்.
 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1