google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: ஆதலால் காதல் செய்வீர்-கவிதை விமர்சனம்

Thursday, September 5, 2013

ஆதலால் காதல் செய்வீர்-கவிதை விமர்சனம்

ஆதலால் காதல் செய்வீர்-
வெள்ளித்திரையில் 
வாலிபக் காதலை 
கிள்ளிப் பார்த்த சினிமா 


போதையூட்டும்
போலிக்காதலை 
தோலுரித்த சினிமா...
சொல்வது தெரியுமா?

http://i4.ytimg.com/vi/HUnP3TRynEg/hqdefault.jpg
 
நண்பர்கள் கூட்டத்தில் 
நண்பி ஒருத்தியை 
காதல் வலை 
வீசினான் அவன் 
அவளும் அகப்பட்டாள் 

http://www.kollywoodtoday.net/wp-content/uploads/2013/08/aadhalal-kadhal-seiveer-movie-review1.jpg
 
அவனும் அவளும் 
பருவ வயது......
உல்லாசயிசத்தை
மாமல்லபுரத்தில் 
மல்லாக்க கொண்டாடி...

http://www.kollywoodtoday.net/wp-content/uploads/2012/11/aadhalal-kadhal-seiveer-movie-stills-181.jpg
 
அவள் வயிற்றில் 
அவன் கருவை சுமந்தாள் 
அழிக்க நினைத்வர்கள் 
அல்லாடிப் போனார்கள் 

ஏங்கிய வயது 
வீங்கிய வயிறு 
காட்டிக் கொடுத்தது 

அவளைப் பெற்றோர் 
அனலில் புழுவாய் 
அல்லல் பட்டார் 

அவனைப் பெற்றோர் 
அந்தஸ்து பார்த்து
அகமொன்று 
புறமொன்று பேசியே.. 

சாதியும் அரசியலும் 
சமரசம் செய்வதாய் 
சங்கடம் செய்திட...

ஏளனமாய்க் கேட்டார் 
மகனை பெற்றோர்....
"என்ன விலை வேண்டும் 
உன் மகள் கற்புக்கு...?" 

ஆத்திரத்தில் அவளும் 
அவனைப் பிரிந்தாள்...

அவளும் பெற்ற  
அழகான ஆண்குழந்தை
அதுவும் எங்கே
அவள் காதலன் போல் 
அழுக்காய் இருக்குமோ..?
என்று எண்ணியே....
  
அனாதை இல்லத்தில் 
அள்ளிப் போட்டாள் 

எல்லோருக்கும் 
எல்லாக் காயங்களும் 
ஆறிப்போனது...

அடுத்த வாழ்க்கைக்கு 
காலம் அவர்களை 
அழைத்துப் போனது 

எல்லோருக்கும் 
எந்த வலியும் இல்லை  
எல்லா வலியும் 
புதிதாய் பிறந்தவனுக்கே 

http://www.meleklermekani.com/portal/images/album/zenci_bebekler_11.jpg
 
எந்த வழியில் போவது...? 
எதுவும் தெரியாமல்
விழியில் வலியோடு 
அழுது கொண்டு நிற்க...

freeonlinephotoeditor

ஆதலால் காதல் செய்வீர் 

அங்கதத்தில் 
ஆதங்கத்தில் 
ஆழமாய்ச் சொல்லுகிறது

'சமுதாயக் கோளாறை 
சரிசெய்து கொள்வீர்' என்று

.....................பரிதி.முத்துராசன் 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1