மதமென்னும்
போர்வை போர்த்தி
பசு போன்று..புலியொன்று
வருகிறது....வருகிறது....
மீண்டும் மீண்டும்
பல்லைக் காட்டி
பவுசாக வருகிறது
பக்தி மான்களே!
பரவசத்தில்
இறைவன் என்று எண்ணி
இரையாகி விடாதீர்கள்
என்னைப் பாருங்கள்
யோகம் வரும் என்று...
இந்தக் கழுதை
என்னைத் தொடுங்கள்
எல்லாம் வரும்
என்று சொல்லும்...
அய்யோ...அறிவாளிகளே!
ஆண்டவன் பக்தி நெறியாளர்களே!
அவனைத்தொட்டால்...
கஷ்டமும் குஷ்டமும்தான் வரும்
அதிலும்
அவன் தொட்டால்....
அகில உலகிலும் உள்ள
அனைத்து நோய்களும் வரும்
அவன் வார்த்தையில்
அது
அவனுக்கு
ஆண்டவன்...? கொடுத்த
நித்திய சாபம்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
| Follow @PARITHITAMIL |