இங்கே
7-ஆம் தலைமுறை
நாளைய மனிதர்கள்
சினிமா மயக்கத்தில்
சிந்தனைச் சிதைவில்...
மனிதத்தைத் தின்னும்
மதவெறி மந்தையில்...
இன்னும்
நிறைய மனிதர்கள்
இருப்பதோ
டாஸ்மாக் போதையில்...
இங்கே
7-ஆம் தலைமுறை
தன் அறிவை
மொட்டையடித்து
சொட்டைத்தலையோடு..
அதிலும்
ஏழாம் தலைமுறையின்
காதல் உலகம்...
ஆதாம்-ஏவாள் கால உலகம்
முகநூல் காம உலகம்
ட்வீட்டர் கிசுகிசு கலகம்
இது
காதலர்களின்
காமக் கூடம்
இங்கே
வாலிபர்கள்
காதல் போர்வையில்
ஆண்மையை
பரிசோதனை செய்கிறார்கள்
இங்கே
வாலிபிகள்
நாகரீகப் போர்வையில்
உணர்சிகளை
உண்டு மகிழ்கிறார்கள்
இவர்கள்
7-ஆம் தலைமுறை
நாளைய மனிதர்கள்....?
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
| Follow @PARITHITAMIL |
