காதலர் காதலுக்கும்
பெற்றோர் பாசத்திற்கும்
நம்ம நாட்டில் நடக்கும்
அவ்வப்போது யுத்தம்
இங்கே காதல்
சிலநேரங்களில்
இறக்கை கட்டி பறந்துவிடும்
பாசத்தை மறந்துவிடும்
அப்போது.........
பெற்றோர்களை
புதைத்து விடும்
கடந்த நாட்களில்
காதலுக்கும் பாசத்திற்கும்
நடந்த யுத்தத்தில்...
சேரன் ஜெயித்தாரா...?
அமாம் என்றும்
சொல்வதற்கில்லை
இல்லை என்றும்
சொல்வதற்கில்லை
ஏனென்றால்.........
காதல்
காமக்குயவனின்
சுடாத மன்சட்டி
எந்த நேரத்திலும்
மீண்டும்
மண்ணாக மாறிவிடும்
"காதலில் இல்லவே இல்லை
உண்மையான வார்த்தைகள்
காதல்-
மிகப் பெரிய மனநோய்"
என்று சொன்னது
நானல்ல....பிளாட்டோ
காதல் நோய்
திருமணமென்னும்
மருத்துவமனையில்தான்
தீர்க்கப் படவேண்டும்
அதே நேரம்
இங்கே திருமணம்
வியாபார நிறுவனம்
அவனுக்கு அவளும்
அவளுக்கு அவனும்
இந்த உலகில் இருப்பது
இவர்கள் இருவர் மட்டுமே
கண்கள் இருண்டுபோகும்
காது அடைத்துப் போகும்
காதல்
பருவ வயதில் வரும்
படர்தாமரை நோய்
வரும் போகும்........
பெற்றோர்கள்தான்
பாசத்தை
பக்குவமாய் தடவி
படர்தாமரை
மீண்டும் பூத்திடாமல்....
காதல்-
உயர்வு தாழ்வை
ஒழித்துவிடும்
என்பதெல்லாம் பொய்
உண்மையில்
இன்னொரு சாதியை
அது குட்டிப் போடும்
காதலர்களே!
கொஞ்சம் கேளுங்கள்.....
நம்ம நாட்டு பிளாட்டோ
தந்தை பெரியார்
சொல்வதையும் கேளுங்கள்..
யார் யாரெல்லாம் உங்களுக்கு வாழ்க்கையில் உதவி னார்களோ அவர்களை மறந்துவிடாதீர்கள். அந்த வரிசையில் முதற்கண் நீங்கள் நன்றி காட்ட வேண்டியது; மறக்காமல் பாசம் காட்டவேண் டியது உங்களுடைய பெற்றோர்களிடம்தான்.........தந்தை பெரியார்.
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
| Follow @PARITHITAMIL |
